05-27-2005, 03:51 PM
tamilini Wrote:அப்ப கருத்து முரண்பட்டு.. பிடிக்காமல் போனாலும். நொந்து கொண்டு.. இருவரும் வாழனும். அப்படியா..?? கடைசிவரை.. ஏன் பிடிக்காட்டால் இனி ஒத்துவராது என்று தெரிஞ்சால் பிரிஞ்சு போய்விட்டால் என்ன.?? :roll: :roll: :mrgreen: :evil:
கருத்து முரண்பாடுகள் ஒரு பொதுவிடயம்... ஒரு தனி மனிதனே சூழ்நிலைக்கு ஏற்ப... அவசியத்திற்கு ஏற்ப... மாற்றத்துக்கு ஏற்ப தன் கருத்தை மாற்றி அமைக்கும் போது (உதாரணமாக தாயகத்தில் வாழ்ந்த ஒருவன் புலத்துக்கு வந்ததும் எப்படி தற் கருதுகோளுக்கு மாற்றம் அளிக்கிறான் அதுபோல) இரு மனம் ஒத்திருக்க வேண்டியவர்கள் ஏங்க புரிந்துணர்வு வேண்டு தங்கள் கருத்தை மாற்றி அமைக்கக் கூடாது.. கணவன் மனைவி இரு தனியன்கள் என்பதிலும் உணர்வு ரீதியாக ஒருமைப்படக் கூடிய ஒரு மனிதன் என்பதுதான் சரியான கருதுகோளாக இருக்கும்..!
கருத்து முரண்பாடுகளுக்காக விவாகரத்து என்றால் வாழ்க்கை பூரா விவாகரத்தாத்தான் இருக்கும்... ஒரு முரண்பாட்டைத் தீர்க்க வலு வில்லாதவரால் எப்படிங்க மற்றவரோடு வேறொரு விடயத்தில் முரண்படாதிருக்க முடியும்...! இப்ப யானைகளும் சமூகமாத்தான் வாழுது குரங்கும் சமூகமாத்தான் வாழுது உணர்வு அல்லது அதுகளின் கருத்து வேறுபாட்டுக்காக நீதிமன்றம் அமைச்சு விவாகரத்தா வாங்குதுகள்...! :wink:
விவாகரத்திற்காக அடிப்படையில் தகுதி பெறுபவர்கள் போலித்திருமணத்தால் மனமிணையாமலே வாழ வேண்டி வருபவர்கள்...பாலியல் பிரச்சனை உள்ளவர்கள்... சோரம்போபவர்கள்... உள உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாபவர்கள்...! இப்படித்தான் இலங்கையின் திருமணச் சட்டம் சொல்கிறது...! அது உரோமன் டச்சு ஆங்கிலேயச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்தது...! தமிழர்கள் அதுவும் யாழ்ப்பாணத்தமிழர்கள் தேச வழமை எனும் விசேடித்த சட்டவரம்புக்குள் ஆளப்படுகின்றார்கள்...! அங்கு கணவன் மனைவி ஒற்றுமை என்பது புரிந்துணர்வின் மூலம் இயலுமானவரை தீர்க்கப்படவே வழி சொல்லப்படுகிறது,,,,! விவாகரத்து
அங்கு இலகுவில் அனுமதிக்கப்படவில்லை..அப்படி வரும் போது மனிதர்கள் தங்கள் மனதை இழக்கி புரிந்துணர்வுக்கு வர ஒரு தூண்டுதல் அளிக்கப்படுகிறது...அது சமூக வாழ்க்கைக்கு அடிப்படையான விடயம்...! அதில் யாரின் சுதந்திரமும் பறிக்கப்படுவதாக எண்ண முடியாது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

