05-27-2005, 02:24 PM
kirubans Wrote:<b>ஏன் விவாகரத்து கோருகிறார்கள் என்று யோசித்து அதற்கு ஏற்றமாதிரி தீர்வை முன்வைக்க முயலாமல், விவாகரத்து கோரும் பெண்களை இழிவுசெய்வது நியாமாகப் படவில்லை</b>.
நான் முதலில் வைத்த கருத்து விவாகரத்தை பிழையென சொல்லுபவர்கள் அதற்கு பண்பாடு, கலாச்சாரத்தைத் துணைக்கிழுத்து, ஆணாதிக்க சமூகத்தை நிலைநாட்ட விரும்புவர்களுக்கு. எங்கள் பண்பாடுகளில் உள்ள பல நல்லவிடயங்களை ஆதரிக்கும் அதே நேரம், காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை நிராகரிக்க வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவன் நான்.
தமிழர்கள் புலத்தில் எவ்வாறு நடந்து கொள்ளுகிறார்கள் என்பது உங்கள் கருத்துக்கள் மூலம் நன்கு புலப்படுகின்றது. அதையே நானும் நடைமுறையில் பார்க்கிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து, அதனை செம்மையாக நடைமுறைபடுத்த எவரும் முன்வராமல் ஒதுங்கி இருக்கிறார்கள். பிறகு எப்படி நீங்கள் நினைக்கும் தமிழரின் பண்பாடு, விழுமியங்கள் என்பன தமிழரிடம் விதைக்கபடமுடியும்?
எமது பண்பாடு, கலாச்சாரங்களை தாழ்வாக நினக்கும் இளையோரே அதிகம். இதனால் அவர்கள் பிற கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். இது அவர்களின் குறைபாடு இல்லை. இவற்றை ஊட்டாத பெற்றோரினதும், சமூகத்தில் தொண்டு நிறுவனங்கள் வைத்திருப்போரினதும் பிழை.
ஆண்களோ பெண்களோ எடுத்ததுக்கும் விவாகரத்து என்று ஆகும் நிலை ஆபத்தானது...அது புரிந்துணர்வுக்கான அன்புக்கான நேசத்துக்கான தேடலையே இல்லாமல் செய்துவிடும்...! வெறும் பாலியலுக்காகவோ ஈகோவுக்காகவே திருமணம் செய்வதில்லை... இரு மனங்கள் பல விடயங்களில் ஒருமித்து ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்புக்கள் மூலம் புரிந்துகொண்டு மற்றவங்க தேவை என்ன என்று அறிந்து அதைப் பூர்த்தி செய்ய ஒத்துழைத்து தவறுகள் தப்புக்கள் நடக்காமல் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கி சமூகத்துக்கு அவசியமான அடிப்படைக் கட்டமைப்பான அழகிய குடும்பத்தை நிறுவி அவங்க மனம் மகிழ வாழவே திருமணம் செய்கிறார்கள் என்று நினைக்கின்றோம்...அப்போதான் குடும்பமும் சமூகமும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்கும்...மனித இன விருத்தியும் அவன் வினைத்திறனும் ஆரோக்கியமாக இருக்கும்.. அதைவிடுத்து கண்டதுக்கும் காமக் களியாட்டத்துக்கும் விவாகரத்துக்கும் விட்டிட்டு ஓடுதலும் என்றால்....அது பெண்களாக இருக்கட்டும் ஆண்களாக இருக்கட்டும் இழிவான செயலையே செய்கின்றனர்..! மனித சமூகத்தைப் பலவீனப்படுத்தும் அப்படிப்பட்டவர்களை...ஆரோக்கியமானவர்கள் என்று சொல்ல எதிர்பார்க்கக் கூடாது...அப்படிச் சொல்வது உண்மையும் அல்ல...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

