05-27-2005, 01:32 PM
ஏன் விவாகரத்து கோருகிறார்கள் என்று யோசித்து அதற்கு ஏற்றமாதிரி தீர்வை முன்வைக்க முயலாமல், விவாகரத்து கோரும் பெண்களை இழிவுசெய்வது நியாமாகப் படவில்லை.
நான் முதலில் வைத்த கருத்து விவாகரத்தை பிழையென சொல்லுபவர்கள் அதற்கு பண்பாடு, கலாச்சாரத்தைத் துணைக்கிழுத்து, ஆணாதிக்க சமூகத்தை நிலைநாட்ட விரும்புவர்களுக்கு. எங்கள் பண்பாடுகளில் உள்ள பல நல்லவிடயங்களை ஆதரிக்கும் அதே நேரம், காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை நிராகரிக்க வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவன் நான்.
தமிழர்கள் புலத்தில் எவ்வாறு நடந்து கொள்ளுகிறார்கள் என்பது உங்கள் கருத்துக்கள் மூலம் நன்கு புலப்படுகின்றது. அதையே நானும் நடைமுறையில் பார்க்கிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து, அதனை செம்மையாக நடைமுறைபடுத்த எவரும் முன்வராமல் ஒதுங்கி இருக்கிறார்கள். பிறகு எப்படி நீங்கள் நினைக்கும் தமிழரின் பண்பாடு, விழுமியங்கள் என்பன தமிழரிடம் விதைக்கபடமுடியும்?
எமது பண்பாடு, கலாச்சாரங்களை தாழ்வாக நினக்கும் இளையோரே அதிகம். இதனால் அவர்கள் பிற கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். இது அவர்களின் குறைபாடு இல்லை. இவற்றை ஊட்டாத பெற்றோரினதும், சமூகத்தில் தொண்டு நிறுவனங்கள் வைத்திருப்போரினதும் பிழை.

<b> . .</b>