05-27-2005, 01:08 PM
kirubans Wrote:இங்கு விவாகரத்திற்கு எதிராக பல கருத்துக்களை வைப்பவர்கள் நித்திலா கூறிய கருத்தையும் பற்றி சிந்திக்கலாமே. பெரும்பாலான தமிழ் ஆண்கள் எப்போதும் பெண் மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பவர்கள் (இது வன்முறை சார்ந்த அடக்குமுறை மட்டுமல்ல, கருத்தியல் சார்ந்ததும்தான்). வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்களும் தங்கள் சொந்தக்காலில் நிற்பதால் ஊர் மாதிரி அடங்கி ஒடுங்கத் தேவையில்லை. பிரச்சினையின் வேர் என்னவென்று ஆராயாமல் <b>எப்படியாவது பெண்களை விவாகரத்து கேட்காமல் பண்ணி அடங்கி ஒடுக்க இருக்க சமூகம், கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் துணைக்கு இழுக்கிறீர்கள்</b>.
ஒன்று மட்டும் உண்மை. என்னதான் நாங்கள் இங்கு கருத்தெழுதி விவாதம் செய்தாலும், நாங்கள் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எங்களை நாங்களே மெச்சிக் கொள்ளவேண்டியதுதான்.
விவாகரத்துக்கள் அதிகரிக்கும். திருமணத்துக்கு முன்னர் ஆண்களும், பெண்களும் ஐரோப்பியர்போல கூடிவாழ்வர். பிடிக்காவிடில் பிரிந்து இன்னுமொருவரைத் தேடுவர். இதற்குக் கூப்பாடு போட்டுப் பிரயோசனமில்லை. சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் இந்த விடயங்களைப் பற்றி அலசி ஆராய தொண்டு நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் பணி செய்ய முன்வரவேண்டும்.
kirubans Wrote:kuruvikal Wrote:சும்மா சோகுவராவின் படத்தைப் போட்டாப் போல சிந்தனைகளும் அவனைப் போன்றதா...எங்கோ பிறந்து எங்கோ அடிமைத்தனத்தை...அதுவும் மேற்குலக ஆதிக்கத்தனத்தை அகற்றப் புறப்பட்டவனின்...படத்துக்கு முன்னால படைக்கிற கருத்துக்கள்...இவையா....???! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நடைமுறையிலுள்ளதைத்தான் சொன்னேன். நடக்கப்போவதைத் சொன்னேன். இந்தத் தலைப்பே ஏன் வந்தது? விவாகரத்துக்கள் அதிகரித்துள்ளன என்பதால்தான்.
இப்போதைய இளவட்டங்களைப் பாருங்கள். கூடிவாழ்வது இப்போதே தொடங்கிவிட்டது என்றுதான் எண்ணுகிறேன். 9 மணிக்குப் பின் வீட்டுக்குள் நிற்க வேண்டும் என்பது எல்லா இடமும் நடைபெறாது. மேற்படிப்புக்காக செல்லுபவர்கள் தங்கள் வீடுகளில் இருப்பதில்லை, வெளியில்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தமிழ் பண்பாடு வீட்டில் பெற்றோருக்கு முன்னிலையில் மட்டும்தான்.
தமிழ் கலாச்சாரம் பண்பாடு என்றவற்றில் தெளிவுள்ளவர்கள் எத்தனை பேருள்ளனர். தெரியாதவர்கள்தான் அதிகம்.
சேலை அணிவதும், தமிழில் பேசுவதும், பரதம், மிருதங்கம் பழகுவதும் எம்மைத் தமிழர் என்று ஆக்கிவிடா. இவை ஒரு தமிழர் என்ற அடையாளத்தை மட்டுமே தரும்.
எமது சமூகத்துக்கெனப் பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றை தீர்க்க தற்போதே முயற்சிக்க வேண்டும். இவற்றை தனிய யாழ் களத்தில் மட்டும் கதைத்துப் பிரயோசனமில்லை. இங்கு நாம் ஒன்றில் இப்படியான பிரச்சினைகளை நீக்கி ஊரில் இருந்ததுபோல் இருக்கவேண்டும் என்று விவாதிப்போம், அல்லாவிடில் புலத்தில் நடைபெறும் பிரச்சினைகளை ருசிகரமாக கிசுகிசுபாணியில் எழுத்தித் தள்ளுவோம்.
யாராவது தீர்வு என்று ஏதாவது சொல்லியிருக்கிறீர்களா? பிரச்சினைகளின் வேரை அறியாமல் சும்மா குருட்டு விவாதம் புரிந்து விவாத்தில் வென்றுவிட்டுப் போகலாம். இதனால் உங்கள் அறிவை நீங்களே மெச்சிக் கொள்ளவேண்டியதுதான் (பக்கப் பாட்டிற்கும் சிலர் வருவார்கள்).
சமூகத்தில் அக்கறை உள்ள நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டு எமது பண்பாட்டின் பெருமையையும், கலாச்சாரத்தின் சிறப்பையும் பிரச்சாரம் செய்ய முன்வரவேண்டும்., முக்கியமாக இளையோரை தமிழ் பண்பாட்டில் தெளிவுள்ளவர்களாக மாற்றவேண்டும் (அவர்கள்தான் வருங்காலத்தில் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்கப் போகிறவர்கள்).
ஆக்கபூர்வமான முயற்சிகளில் புலத்தில் யாராவது, அல்லது எந்த நிறுவனமாவது ஈடுபடுகின்றதா? சமய நிறுவனங்கள் என்பவை, தமது இலாபத்தில் மட்டும் குறியாக இருக்கின்றன. அவை சமயத்தையோ, தமிழ் பண்பாட்டையோ பிரச்சாரம் செய்வதில்லை.
அதுபோல தமிழ் தொண்டு நிறுவங்கள் (charities) தமிழர் பெயரில் தங்கள் வயிறுகளை வளர்க்கின்றன. சுயநலப் போக்கற்றுப் பணியாற்ற முன்வருபவர்களால்தான் மாற்றத்தைக் கொண்டுவரமுடியும்.
இல்லாவிடில் ஐரோப்பிய வலங்களில் கிசுகிசுக்களும், தமிழரின் வன்முறைகளும்தான் செய்திகளாக வரும். சிலர் எமது சமூகம் இப்படியாகிவிட்டதே என்று இரண்டு சொட்டுக் கண்ணீரைச் சிந்திவிட்டு, மறுபடியும் தத்தமது வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
கிருபன்ஸ் நீங்கள் முதல் சொல்ல வந்த முறைக்கும் பின் அதே கருத்தைச் சொன்ன முறைக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது...! முதலாவதில் நீங்களே தமிழர் கலாசாரம் பண்பாட்டை விழுமியத்தை ஏற்றுக்கொள்ளாதது போல அடக்குமுறைக்குத்தான் அவை சரி என்றீர்கள்.... பிற்பாடு அதுவே தமிழர்கள் என்றாவது அடையாளம் காட்ட உதவும் என்கிறீர்கள்..! உங்களுக்குள்ளேயே இந்தளவுக்கு ஒரு குழப்பம் இருக்கும் போது.. மேற்குலக நாகரிகமே உயர்ந்தது என்ற குழப்ப சிந்தனையையே தாயகத்தில் கூட வலுவாக்கி வாழ்ந்து கொண்டிருந்த தமிழர் வாரிசுகள் மேற்கில் வாழும் போது மட்டும் எப்படி தமிழர் பண்பாடு கலாசாரம் அவை தரும் விழுமியங்கள் பற்றி சிந்திப்பர்....! அவர்களின் சிந்தனையை தெளிவூட்ட கருத்துக்கள் விதைக்கப்படுதல் அவசியம்...அதை இக்களமும் செய்யும்...நிச்சயம்... குறைந்தது நாங்களாவது சிந்தனையை சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளவாவது உதவும்...!
லண்டனில் அம்மா சேலை கட்டுவா என்றா பிள்ளை ஜீன்ஸ் போடும்...அம்மா ஜீன்ஸ் போட்டா என்றா பிள்ளை அம்மணமாப் போகும்..இதுதான் அவை கண்டிருக்கும் கலாசார மாற்றம்...அம்மணமாப் போறதோ...இல்லை கண்டதோட கூடிட்டு விட்டிட்டு வாறதோ நாகரிகம் அல்ல...சாதாரண...விலங்கு நடத்தை....! முதலில் அதை புரிஞ்சு கொள்ள பகுத்தறிவு அவசியம்...அதை சரிற்றி போட்டு ஊட்ட முடியாது ஒவ்வொருவராகப் பிடிச்சு....! குறைந்தது கருத்துக்களை விதைத்து சிந்திக்கக் கூடியவனை சிந்திக்க வைப்பம்...அதுவாவது குறிப்பிடத்தக்க பலன் தருகிறதா என்று பார்ப்போம்...புதிய சூழலில் இரண்டு பேர் தமிழர்களின் பண்பாட்டோடு வாழ்ந்து வெற்றி கண்டிட்டார்கள் என்றால் மூன்றாமவன் தன்பாட்டில் வாழ முனைவான்...! அதுமட்டுமன்றி சரிற்றி போட முதல் நாங்க சரிற்றி போறிற நிலையில் தெளிவா வாழுறமா என்றதைப் பார்க்க வேணும்...சரிற்றி போறிறவனிடமே தெளிவான நிலை இல்லாத போது சரிற்றி எதைச் சாதிக்கும் என்கிறீர்கள்..!
சரி உங்கள் விருப்பம் சரிற்றி வைச்சு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதானால் அதை லண்டனில் என்ன மேற்கில் எங்குமே செய்வது மிக இலகு...! அதுதானே வீதிக்கு வீதி கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்திருக்கிறியளே...அவற்றை கொஞ்சம் சரிற்றியாகவும் பாவியுங்கள்... யாராவது கோயிலுக்கும் போகும் போதாவது தமிழர் பண்பாட்டோட போக வேண்டும் என்று நினைக்கிறார்களா... கிடையாது... பிறகெப்படி பிள்ளை உங்கள் நாகரிகத்தைத் தெரிந்து கொள்ளும்..பின்பற்ற ஆர்வம் கொள்ளும்..பாடசாலையிலோ..இல்ல நண்பர்களிடத்திலோ இருந்தல்ல....அது முற்றிலும் மாறுபட்ட சூழல்...எனவே அப்பா அம்மா இது தொடர்பில் வழிகாட்ட வேணும் பிள்ளையைச் சிந்திக்க வைக்க வேணும்...ஆனா அப்பா அம்மா இது தொடர்ப்பில் தெளிவாக இருக்கினமோ....இல்லை....! அவையைத் தெளிவுபடுத்த என்ன வழி...???! நகைக்கடையில் விளம்பரம் ஒட்டினா நடக்கச் சாத்தியம் இருக்கு...இல்லை நகை விற்க முதல் இதை படிங்க என்று கட்டாய நிபந்தனை போட்டால்...அது கூட நல்ல சரிற்றிச் சேவைதான்....!
புலத்தில் பிரித்தானியா கனடாவில் தான் தமிழர்கள் தமிழ் மொழியை தங்கள் வாரிசுகளுக்கு ஊட்டுவது அவசியமில்லை நாகரிகம் அற்றது என்று பெரிதும் நினைக்கின்றனர்...இந்தச் சிந்தனை எப்பவோ வந்திட்டு..ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்குள் இருந்த எங்க பாட்டா காலத்திலையே வந்திட்டு...இப்ப அவரின் பூட்டன் காலத்தில் அது விஸ்வரூபம் எடுத்திருக்கு அவ்வளவும் தான்....! மற்றைய நாடுகளில் ஆங்கிலம் பிரயோசனம் இல்ல...பின்ன வழியில்லாம வீட்டில பந்தா இல்லாம தமிழில பேச அதையே பிள்ளைகளும் பொறுக்கி...தமிழைக் குறைஞ்சது பேசவாவது கற்றுக்கொள்ளுதுகள்..அந்த வயதில அதுபோதும்...பின்னாடி தமிழ் படிக்க ஆர்வத்தைத் தூண்ட....! இப்படித்தான் தமிழர் பண்பாடும் கலாசார விழுமியங்களும் விதைக்கப்பட வேண்டுமே தவிர சரிற்றி போட்டு ஆலோசனை வழங்கி இளசுகளுக்கு ஊட்ட முடியாது..வேண்டும் என்றால் பெரிசுகளை கொஞ்சம் தெளிவு படுத்தலாம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

