05-27-2005, 10:22 AM
kuruvikal Wrote:சும்மா சோகுவராவின் படத்தைப் போட்டாப் போல சிந்தனைகளும் அவனைப் போன்றதா...எங்கோ பிறந்து எங்கோ அடிமைத்தனத்தை...அதுவும் மேற்குலக ஆதிக்கத்தனத்தை அகற்றப் புறப்பட்டவனின்...படத்துக்கு முன்னால படைக்கிற கருத்துக்கள்...இவையா....???! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நடைமுறையிலுள்ளதைத்தான் சொன்னேன். நடக்கப்போவதைத் சொன்னேன். இந்தத் தலைப்பே ஏன் வந்தது? விவாகரத்துக்கள் அதிகரித்துள்ளன என்பதால்தான்.
இப்போதைய இளவட்டங்களைப் பாருங்கள். கூடிவாழ்வது இப்போதே தொடங்கிவிட்டது என்றுதான் எண்ணுகிறேன். 9 மணிக்குப் பின் வீட்டுக்குள் நிற்க வேண்டும் என்பது எல்லா இடமும் நடைபெறாது. மேற்படிப்புக்காக செல்லுபவர்கள் தங்கள் வீடுகளில் இருப்பதில்லை, வெளியில்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தமிழ் பண்பாடு வீட்டில் பெற்றோருக்கு முன்னிலையில் மட்டும்தான்.
தமிழ் கலாச்சாரம் பண்பாடு என்றவற்றில் தெளிவுள்ளவர்கள் எத்தனை பேருள்ளனர். தெரியாதவர்கள்தான் அதிகம்.
சேலை அணிவதும், தமிழில் பேசுவதும், பரதம், மிருதங்கம் பழகுவதும் எம்மைத் தமிழர் என்று ஆக்கிவிடா. இவை ஒரு தமிழர் என்ற அடையாளத்தை மட்டுமே தரும்.
எமது சமூகத்துக்கெனப் பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றை தீர்க்க தற்போதே முயற்சிக்க வேண்டும். இவற்றை தனிய யாழ் களத்தில் மட்டும் கதைத்துப் பிரயோசனமில்லை. இங்கு நாம் ஒன்றில் இப்படியான பிரச்சினைகளை நீக்கி ஊரில் இருந்ததுபோல் இருக்கவேண்டும் என்று விவாதிப்போம், அல்லாவிடில் புலத்தில் நடைபெறும் பிரச்சினைகளை ருசிகரமாக கிசுகிசுபாணியில் எழுத்தித் தள்ளுவோம்.
யாராவது தீர்வு என்று ஏதாவது சொல்லியிருக்கிறீர்களா? பிரச்சினைகளின் வேரை அறியாமல் சும்மா குருட்டு விவாதம் புரிந்து விவாத்தில் வென்றுவிட்டுப் போகலாம். இதனால் உங்கள் அறிவை நீங்களே மெச்சிக் கொள்ளவேண்டியதுதான் (பக்கப் பாட்டிற்கும் சிலர் வருவார்கள்).
சமூகத்தில் அக்கறை உள்ள நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டு எமது பண்பாட்டின் பெருமையையும், கலாச்சாரத்தின் சிறப்பையும் பிரச்சாரம் செய்ய முன்வரவேண்டும்., முக்கியமாக இளையோரை தமிழ் பண்பாட்டில் தெளிவுள்ளவர்களாக மாற்றவேண்டும் (அவர்கள்தான் வருங்காலத்தில் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்கப் போகிறவர்கள்).
ஆக்கபூர்வமான முயற்சிகளில் புலத்தில் யாராவது, அல்லது எந்த நிறுவனமாவது ஈடுபடுகின்றதா? சமய நிறுவனங்கள் என்பவை, தமது இலாபத்தில் மட்டும் குறியாக இருக்கின்றன. அவை சமயத்தையோ, தமிழ் பண்பாட்டையோ பிரச்சாரம் செய்வதில்லை.
அதுபோல தமிழ் தொண்டு நிறுவங்கள் (charities) தமிழர் பெயரில் தங்கள் வயிறுகளை வளர்க்கின்றன. சுயநலப் போக்கற்றுப் பணியாற்ற முன்வருபவர்களால்தான் மாற்றத்தைக் கொண்டுவரமுடியும்.
இல்லாவிடில் ஐரோப்பிய வலங்களில் கிசுகிசுக்களும், தமிழரின் வன்முறைகளும்தான் செய்திகளாக வரும். சிலர் எமது சமூகம் இப்படியாகிவிட்டதே என்று இரண்டு சொட்டுக் கண்ணீரைச் சிந்திவிட்டு, மறுபடியும் தத்தமது வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
<b> . .</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 