05-27-2005, 01:11 AM
இங்கு விவாகரத்திற்கு எதிராக பல கருத்துக்களை வைப்பவர்கள் நித்திலா கூறிய கருத்தையும் பற்றி சிந்திக்கலாமே. பெரும்பாலான தமிழ் ஆண்கள் எப்போதும் பெண் மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பவர்கள் (இது வன்முறை சார்ந்த அடக்குமுறை மட்டுமல்ல, கருத்தியல் சார்ந்ததும்தான்). வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்களும் தங்கள் சொந்தக்காலில் நிற்பதால் ஊர் மாதிரி அடங்கி ஒடுங்கத் தேவையில்லை. பிரச்சினையின் வேர் என்னவென்று ஆராயாமல் எப்படியாவது பெண்களை விவாகரத்து கேட்காமல் பண்ணி அடங்கி ஒடுக்க இருக்க சமூகம், கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் துணைக்கு இழுக்கிறீர்கள்.
ஒன்று மட்டும் உண்மை. என்னதான் நாங்கள் இங்கு கருத்தெழுதி விவாதம் செய்தாலும், நாங்கள் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எங்களை நாங்களே மெச்சிக் கொள்ளவேண்டியதுதான்.
விவாகரத்துக்கள் அதிகரிக்கும். திருமணத்துக்கு முன்னர் ஆண்களும், பெண்களும் ஐரோப்பியர்போல கூடிவாழ்வர். பிடிக்காவிடில் பிரிந்து இன்னுமொருவரைத் தேடுவர். இதற்குக் கூப்பாடு போட்டுப் பிரயோசனமில்லை. சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் இந்த விடயங்களைப் பற்றி அலசி ஆராய தொண்டு நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் பணி செய்ய முன்வரவேண்டும்.

<b> . .</b>