05-26-2005, 05:22 AM
thamilvanan Wrote:சூரியன் என்பது தமிழ்ச்சொல் அல்ல என நிறுவுகின்ற சான்றுகள் இருப்பின் அதனை தெரியப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
லங்கா என்ற வடமொழி சொல்லே இலங்கை என்ற தமிழ் சொல்லிருந்து மருவியதாக அரசேந்திரன் ஐயா குறிப்பிடுகிறார்.
சூரியன் என்பது வடமொழிச் சொல் அது ஆரியரின் வருகைக்குப் பின்பே எமது பாவனைக்கு வந்ததாக பாவணர் அவர்கள் கூறுகிறார். இதைவிட என்னிடம் இப்போiதைக்கு வேறு ஆதாரங்கள் இல்லை. அப்படி சூரியன் என்பது தமிழ்ச் சொல்தான் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் தந்துதவினால் நன்றாக இருக்கும். மற்றும் லங்கா என்ற வடமொழிச்சொல் இலங்கை என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து மருவியதாக நானும் படித்துள்ளேன் அதற்காக நாங்கள் இலங்கைக்கு லங்கா என்று எழுதுவது தவறு என்பதே எனது கருத்து. இலங்கை என்ற வேர்ச் சொல் இருக்கும்போது ஏன் நாங்கள் லங்கா என்று பாவிக்க வேண்டும்.

