05-24-2005, 05:45 PM
thamilvanan Wrote:நான் நீங்கள் கருதுவதை தவறென்று சொல்லவில்லை. ஆனால் உடனடியாக செய்யவேண்டிய வேலைகள் பல இருக்கின்றன என்பதைதான் நான் சொல்கிறேன்.
கலை அவர்கள் சொல்கிறார்:
அதாவது சூரியன் என்பதற்கு கதிரவன் என்ற அழகான தழிழ்ச் சொல் இருக்கும்போது ஏன் நாம் சூரியன் என்று பாவிக்க வேண்டும்.
நான் என்ன சொல்கிறேன் என்றால் <b>சண்ரீவி</b> என்று சொல்வதை ( அது கூட <b>சன் டிவி</b> ஆகிவிட்டது) முதலில் சூரியதொலைக்காட்சி என்றாவது மாற்றமுயற்சி செய்ய வேண்டும் என்பதுதான்.
நீங்கள் 100வீதம் வேண்டும் என்கிறீர்கள். நான் படிப்படியாக முன்னேறிசெல்வோம் என்கிறேன்.
உங்கள் அனைவரின் தமிழார்வத்துக்கும் நன்றிகள்.
அதேனண்ணா மாத்தேக்க நேரடியா தமிழில கதிரவன் எண்டு மாத்திட்டால் பிரச்சினையே இல்லத்தானெ. பிறகெதுக்கு ஆங்கிலத்திலிருப்பதை பிரெஞ்சு மொழிக்கு மாத்தி அத ஆங்கிலத்துக்கு மாத்தி கடைசில தமிழுக்கு மாத்துவான்? மக்களை களைப்படைய செய்யிற வேலைதானே உது. நேரடியாக "கதிர்" எண்டு வச்சாலே அழகா இருக்கும். மக்களிட்ட போய்ச் சேரும். அதுகள விடுங்கோண்ணா இங்க எங்கட ரிரிஎன் தொலைக்காட்சியே தன்ர பேர தமிழில போட்டுக் காட்டுறேல. தமிழ்த் தொலைக்காட்சி இணையம் என்று எல்லாருக்கும் தெரியும் ஆனா அத விளம்பரங்களில Tamil Television Network எண்டுதான் காட்டுகினம். ஏனெண்டு தெரியல. அகேனம் எண்டு லோகோ வச்சிருந்தால் மட்டும் போதுமா?
நீங்கள் சொன்னது படிப்படியாக இல்லை. ஒரு மீற்றர் கடக்கவேண்டிய தூரத்த இரண்டு மீற்றராக்கு சுத்தி வரச்சொல்லுறீங்கள். அது சரியில்ல :roll:

