Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சம்பலோ சம்பல்
#1
சம்பலோ சம்பல்

தினகரன் பத்திரிகையிலிருந்து
..

தேங்காய் சட்டினி சாப்பிட்டால் இருதய நோய் வரும்

மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சிவகடாட்சம் விளக்கம்

சென்னை, செப். 22- தேங்காய் சட்டினி சாப்பிட்டால் இருதய நோய் வரும் என்ற கேள்விக்கு மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சிவகடாட்சம் விளக்கம் அளித்தார்.

உலக இருதய நாள் கருத்தரங்கை டாக்டர் சிவகடாட்சம் நடத்தினார். அதில் பேசிய டாக்டர்கள், எறh, பீசா, தேங்காய் சட்டினி சாப்பிட்டால் இருதய நோய் வரும் என்று கூறினார்கள்.

கருத்தரங்கு

உலக இருதய நாள் தினத்தையொட்டி பிரபல இருதய நிபுணர் டாக்டர் சிவ கடாட்சம் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று கருத் தரங்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் சரத்குமார் எம்.பி. கலந்துகொண்டு உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்தி பேசினார்.

டாக்டர் சிவகடாட்சம் பேசும்போது, Bமுறையான நடைபயிற்சி, உணவு கட்டுப்பாடு, சீரான எடை போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு தேவை. இவைகளின் மூலமே மாரடைப்பை வராமல் கட்டுப்படுத்தலாம். அதிக அளவில் டென்ஷன் கொள்வதும் இருதய நோய்க்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந் தால் 2020ம் ஆண்டில் இருதயநோய் என்பது ஒரு தொற்றுநோய் போல் ஆகிவிடும் நிலை ஏற்படும். தாயின் கருவரையில் இருக் கும்போதே இன்றைய தினம் குழந்தைகளுக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு முறைப்படி டாக்டர்களின் ஆலோசனை பெறவேண்டியது மிக முக்கியம் என்றhர்.

மேலும் டாக்டர்கள் உல்லாஸ், மூர்த்தி, விஜய் சங்கர், வெங்கட், சவுந்திரராஜன், சசிகரண், நாகராஜன், பாண்டுரங்கன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங்கில் உரையாற்றினார்கள்.

அவர்கள் கூறியதாவது„-

கொழுப்பு சத்தை உடலில் அதிகம் சேர்ப்பது கூடாது. ஆண்களுக்கு வயிற்று பாகத் தில் கொழுப்பு சத்து இருப்பது ஆபத்தானது. பெண்களுக்கு இடுப்புக்கு கீழே கொழுப்பு சத்து இருப்பதில் தவறு இல்லை. அhpசி உணவைவிட கோதுமை உணவு மிகவும் நல்லது. பால், நெய், முட்டை, போன்றவற்றிலும் கொழுப்பு சத்து இருக்கிறது. காய்கறிகள், கனிகள் சாப்பிடலாம். எறhவை விட மீன் வகையில் கொழுப்பு சத்து குறைவு. எண்ணெய்களில் தேங்காய் எண்ணெயில் அதிக கொழுப்பு சத்து உள்ளது. இரண்டு இட்லிக்கு ஒரு தேங் காய் அளவு சட்டினி சாப்பிடுவது உடலுக்கு கேடுதான். அதனால் இருதய நோய் வரும். மற்ற எந்த எண்ணெய் களையும் விட கடலை எண்ணெய், நல்லெண் ணெய் நல்லது. இந்த எண்ணெயெல்லாம் இப்போது காணாமல் போய்விட்டது. அதனை மீண்டும் பயன்படுத்த வேண்டும். பீசா, நொறுக்கு தீனி தின்றபடி கம்ப்யூட்டர் கேம், டி.வி. பார்ப்பதில் இன் றைய இளைஞர்கள் முடங்கி விடுவதால் அவர்களுக்கு உடற்பயிற்சியே இல்லாமல் போய்விடுகிறது. அதனால் அவர்கள் சிறு வயதிலேயே இருதயநோய்க்கு ஆளாகின்றனர். இதை தவிர்ப்பது மிகவும் அவசியம். மது குடிப்பது, சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் அதனால் இருதயத்துக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புத்தகம் வெளியீடு

டாக்டர் சிவகடாட்சம் எழுதிய ஹhர்ட் அட்டாக் முன்னும் பின்னும்என்ற புத்த கத்தை சரத்குமார் முன்னிலையில் எழுத்தாளர் அனுராதா ரமணன் வெளியிட்டார். சாந்தகுமாhp சிவ கடாச்சம் உடல் ஆரோக்கியம் காக்க வேண்டியதின் அவசியத்தை கவிதையாக பாடினார். நடிகர் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு பேசும்போது, எதற்கும் வருத் தப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே இருதய நோய் வராது என்று குறிப்பிட்டார்.
Reply


Messages In This Thread
சம்பலோ சம்பல் - by yarl - 09-23-2003, 09:11 AM
[No subject] - by Paranee - 09-23-2003, 01:14 PM
[No subject] - by yarl - 09-23-2003, 01:27 PM
[No subject] - by Paranee - 09-23-2003, 01:33 PM
[No subject] - by sOliyAn - 09-23-2003, 02:30 PM
[No subject] - by tamilchellam - 09-23-2003, 03:43 PM
[No subject] - by sOliyAn - 09-23-2003, 04:53 PM
[No subject] - by kuruvikal - 09-23-2003, 07:18 PM
[No subject] - by nalayiny - 12-14-2003, 05:55 PM
[No subject] - by nalayiny - 12-14-2003, 06:10 PM
[No subject] - by vasisutha - 12-15-2003, 03:17 AM
[No subject] - by aathipan - 12-16-2003, 04:10 AM
[No subject] - by vasisutha - 02-26-2004, 05:01 AM
[No subject] - by sOliyAn - 02-26-2004, 01:05 PM
[No subject] - by Mathivathanan - 02-26-2004, 02:31 PM
[No subject] - by nalayiny - 02-26-2004, 02:42 PM
[No subject] - by nalayiny - 02-26-2004, 02:44 PM
[No subject] - by nalayiny - 02-26-2004, 03:35 PM
[No subject] - by pepsi - 02-26-2004, 06:41 PM
[No subject] - by vasisutha - 02-27-2004, 01:00 AM
[No subject] - by kuruvikal - 02-27-2004, 12:28 PM
[No subject] - by nalayiny - 02-29-2004, 12:25 AM
[No subject] - by nalayiny - 02-29-2004, 12:35 AM
[No subject] - by shanmuhi - 02-29-2004, 09:23 AM
[No subject] - by kaattu - 02-29-2004, 09:35 AM
[No subject] - by kaattu - 02-29-2004, 09:38 AM
[No subject] - by Paranee - 02-29-2004, 09:41 AM
[No subject] - by Paranee - 02-29-2004, 09:46 AM
[No subject] - by Mathivathanan - 02-29-2004, 12:00 PM
[No subject] - by Paranee - 02-29-2004, 12:16 PM
[No subject] - by vasisutha - 02-29-2004, 11:25 PM
[No subject] - by nalayiny - 02-29-2004, 11:45 PM
[No subject] - by kaattu - 02-29-2004, 11:48 PM
[No subject] - by vasisutha - 02-29-2004, 11:50 PM
[No subject] - by sOliyAn - 03-01-2004, 12:49 AM
[No subject] - by nalayiny - 03-01-2004, 10:03 PM
[No subject] - by nalayiny - 03-01-2004, 10:14 PM
[No subject] - by sOliyAn - 03-01-2004, 10:20 PM
[No subject] - by sWEEtmICHe - 03-02-2004, 07:21 AM
[No subject] - by nalayiny - 03-05-2004, 04:14 PM
[No subject] - by TMR - 03-05-2004, 05:15 PM
[No subject] - by sOliyAn - 03-05-2004, 11:37 PM
[No subject] - by vasisutha - 03-06-2004, 12:18 AM
[No subject] - by sWEEtmICHe - 03-06-2004, 04:47 AM
[No subject] - by nalayiny - 03-06-2004, 08:29 AM
[No subject] - by vasisutha - 03-06-2004, 03:40 PM
[No subject] - by Mathivathanan - 03-06-2004, 03:47 PM
[No subject] - by vasisutha - 03-09-2004, 05:38 AM
[No subject] - by sWEEtmICHe - 07-07-2004, 06:36 PM
[No subject] - by வெண்ணிலா - 07-07-2004, 07:18 PM
[No subject] - by sOliyAn - 07-07-2004, 08:14 PM
[No subject] - by shanmuhi - 07-07-2004, 10:50 PM
[No subject] - by kuruvikal - 07-07-2004, 11:05 PM
[No subject] - by vasisutha - 07-07-2004, 11:39 PM
[No subject] - by sWEEtmICHe - 07-08-2004, 04:36 AM
[No subject] - by sOliyAn - 07-08-2004, 04:51 AM
[No subject] - by tamilini - 07-08-2004, 11:21 AM
[No subject] - by kuruvikal - 07-08-2004, 12:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)