Yarl Forum
சம்பலோ சம்பல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: சம்பலோ சம்பல் (/showthread.php?tid=8100)

Pages: 1 2 3


சம்பலோ சம்பல் - yarl - 09-23-2003

சம்பலோ சம்பல்

தினகரன் பத்திரிகையிலிருந்து
..

தேங்காய் சட்டினி சாப்பிட்டால் இருதய நோய் வரும்

மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சிவகடாட்சம் விளக்கம்

சென்னை, செப். 22- தேங்காய் சட்டினி சாப்பிட்டால் இருதய நோய் வரும் என்ற கேள்விக்கு மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சிவகடாட்சம் விளக்கம் அளித்தார்.

உலக இருதய நாள் கருத்தரங்கை டாக்டர் சிவகடாட்சம் நடத்தினார். அதில் பேசிய டாக்டர்கள், எறh, பீசா, தேங்காய் சட்டினி சாப்பிட்டால் இருதய நோய் வரும் என்று கூறினார்கள்.

கருத்தரங்கு

உலக இருதய நாள் தினத்தையொட்டி பிரபல இருதய நிபுணர் டாக்டர் சிவ கடாட்சம் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று கருத் தரங்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் சரத்குமார் எம்.பி. கலந்துகொண்டு உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்தி பேசினார்.

டாக்டர் சிவகடாட்சம் பேசும்போது, Bமுறையான நடைபயிற்சி, உணவு கட்டுப்பாடு, சீரான எடை போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு தேவை. இவைகளின் மூலமே மாரடைப்பை வராமல் கட்டுப்படுத்தலாம். அதிக அளவில் டென்ஷன் கொள்வதும் இருதய நோய்க்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந் தால் 2020ம் ஆண்டில் இருதயநோய் என்பது ஒரு தொற்றுநோய் போல் ஆகிவிடும் நிலை ஏற்படும். தாயின் கருவரையில் இருக் கும்போதே இன்றைய தினம் குழந்தைகளுக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு முறைப்படி டாக்டர்களின் ஆலோசனை பெறவேண்டியது மிக முக்கியம் என்றhர்.

மேலும் டாக்டர்கள் உல்லாஸ், மூர்த்தி, விஜய் சங்கர், வெங்கட், சவுந்திரராஜன், சசிகரண், நாகராஜன், பாண்டுரங்கன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங்கில் உரையாற்றினார்கள்.

அவர்கள் கூறியதாவது„-

கொழுப்பு சத்தை உடலில் அதிகம் சேர்ப்பது கூடாது. ஆண்களுக்கு வயிற்று பாகத் தில் கொழுப்பு சத்து இருப்பது ஆபத்தானது. பெண்களுக்கு இடுப்புக்கு கீழே கொழுப்பு சத்து இருப்பதில் தவறு இல்லை. அhpசி உணவைவிட கோதுமை உணவு மிகவும் நல்லது. பால், நெய், முட்டை, போன்றவற்றிலும் கொழுப்பு சத்து இருக்கிறது. காய்கறிகள், கனிகள் சாப்பிடலாம். எறhவை விட மீன் வகையில் கொழுப்பு சத்து குறைவு. எண்ணெய்களில் தேங்காய் எண்ணெயில் அதிக கொழுப்பு சத்து உள்ளது. இரண்டு இட்லிக்கு ஒரு தேங் காய் அளவு சட்டினி சாப்பிடுவது உடலுக்கு கேடுதான். அதனால் இருதய நோய் வரும். மற்ற எந்த எண்ணெய் களையும் விட கடலை எண்ணெய், நல்லெண் ணெய் நல்லது. இந்த எண்ணெயெல்லாம் இப்போது காணாமல் போய்விட்டது. அதனை மீண்டும் பயன்படுத்த வேண்டும். பீசா, நொறுக்கு தீனி தின்றபடி கம்ப்யூட்டர் கேம், டி.வி. பார்ப்பதில் இன் றைய இளைஞர்கள் முடங்கி விடுவதால் அவர்களுக்கு உடற்பயிற்சியே இல்லாமல் போய்விடுகிறது. அதனால் அவர்கள் சிறு வயதிலேயே இருதயநோய்க்கு ஆளாகின்றனர். இதை தவிர்ப்பது மிகவும் அவசியம். மது குடிப்பது, சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் அதனால் இருதயத்துக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புத்தகம் வெளியீடு

டாக்டர் சிவகடாட்சம் எழுதிய ஹhர்ட் அட்டாக் முன்னும் பின்னும்என்ற புத்த கத்தை சரத்குமார் முன்னிலையில் எழுத்தாளர் அனுராதா ரமணன் வெளியிட்டார். சாந்தகுமாhp சிவ கடாச்சம் உடல் ஆரோக்கியம் காக்க வேண்டியதின் அவசியத்தை கவிதையாக பாடினார். நடிகர் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு பேசும்போது, எதற்கும் வருத் தப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே இருதய நோய் வராது என்று குறிப்பிட்டார்.


- Paranee - 09-23-2003

தகவலிற்கு நன்றி யாழ் அண்ணா


என்ன வயிற்றிலை அடிக்கிறதென்டே புறப்பட்டு விட்டீர்களா
பழஞ்சோறும் சம்பலும் இனி சாப்பிடவே ஏலாதா ????


- yarl - 09-23-2003

போத்தல் கட்டா சம்பல் சாப்பிடலாம்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Paranee - 09-23-2003

அதென்ன புதிதாக இருக்கின்றுது.
போத்தல் கட்டா சம்பல்
ஓஹோ நீங்கள் கிரிபத்தோட சாப்பிடுவதை சொல்கிறீர்களா ?


- sOliyAn - 09-23-2003

அதென்ன கிரிபத்..?! வெண்பொங்கலா?


- tamilchellam - 09-23-2003

சிங்களம் தெரிந்த sOliyAn க்கு கிரிபத் என்பது தெரியாமல் போய் விட்டதா ?

நட்புடன்,
தமிழ்செல்லம்


- sOliyAn - 09-23-2003

சிங்களத்திலை கொஞ்சம் பொறுக்கி வைச்சிருக்கிறேன்.. அவ்வளவுதான்.. பேந்தும் இந்த பொறுக்கிதான் வருது.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 09-23-2003

சோழியான் அண்ணா அது இங்க 'வினை'
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- nalayiny - 12-14-2003

புலம் பெயர் மண்ணில் அதுகும் அதி கூடிய உறை நிலைக்காலங்களில் வாழும் நாம் முற்று முழுதாகவே தேங்காயை தவிற்பது நன்மை தரும். சம்பல் சட்னி புட்டுக்கு போடுதல் கீரைக்கு கூட்டரைத்தல் என பல தேவைகளிற்கு தேங்காயை பாவிக்கிறோம். இது மிகவும் ஆபத்தானது.பலரை நான் பாற்திருக்கிறேன் .சுவிற்சலாந்தில் அனேகர் தேங்காயை வாங்கி துருவி குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைத்துப்பாவிக்கிறார்கள்.அம்மாடியோவ். சொன்னால் யார் புரிந்து கொள்கிறார்கள். நோய் வந்தால் தான் புரிந்து கொள்வதற்கு சந்தற்பமா? கடவுளே. முக்கியமாக கோவில்களுக்கு அருகில்வாழ்வோர் வாரம் தோறும் கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்து விட்டு அந்த தேங்காயை துருவி வைத்தக்கொள்கிறார்கள். ஒரு முறை தமிழ் கடை ஒன்றிற்கு சென்ற போது அந்த தமிழ் கடைக்கு அருகில் இருப்பவர் ஓடி வந்து சம்பலரைக்கவாம் வீட்டுக்காறி என ஒரு தேங்காய்க்காக கடை வந்து வாங்கிப்போனதையும் கண்டேன். மருத்துவம் பற்றிய அறிவை அதிகம் கொடுக்க வேண்டியவர்களாக புலம்பெயர் தமிழ் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இது அவர்களின் பணி. இந்த பணியை யார் செய்யப்போகிறார்களோ.???!!!!!


- nalayiny - 12-14-2003

தேங்காய் பாவிக்காதவர்கள் பசுவின் பாலில் அதிகூடிய கொழுப்பு நிறைந்த கட்டிப்பாலை பாவிக்கிறார்கள். அது கூட உடல் நலத்திற்கு ஒரு போதும் நன்மை தராது. அதனால் கூட இதய வருத்தம் வரும். ( Rahm - creme ) ,J 15 % 25% 35 % fett


- vasisutha - 12-15-2003

இப்படி பயனுள்ள தகவல்கள் தருபவர்களுக்கு நன்றி.


- aathipan - 12-16-2003

தேங்காய்ப்பால் பயன்படு;த்தாமலும் சுவையாக சமைக்க முடியும். எல்லாக்கறிகளுக்கும் தேங்காய் பயன்படுத்தவேண்டியது இல்லை. ஆந்திராவில் நான் இருந்தபோது அங்கே ஒரு தெருவொரக்கடையில் கூட்டம் அலைமோதும் தேசைக்கு அவர்கள் கொடுக்கம் சட்னிதான் இதற்கு காரணம். அந்த சட்னி தேங்காய் கொஞ்சம்கூட சேர்க்கப்படுவதில்லை. அதற்குப்பதிலாக ஒரு பருப்பை இவர்கள்சேர்கிறார்கள.; இன்று நினைத்தாலும் நாக்கு ஊறுகிறது..


- vasisutha - 02-26-2004

எண்ணெய் சேர்க்காமல் சமைப்பதும் உடலுக்கு நல்லது.
ஆனால் எங்களுக்கு எண்ணெயில் ஏதாவது பொரித்து, வதக்கி, வறுத்து சாப்பிடாவிட்டால் வயிற்றுக்குள் இறங்காதே இதற்கு என்ன செய்ய?


- sOliyAn - 02-26-2004

'ஒலீவ்' எண்ணெய் பாவிக்கலாமே?! இதன் கொழுப்பு மாரடைப்பு போன்ற நோய்களை தடுக்கிறது என்று கூறுகிறார்கள்.


- Mathivathanan - 02-26-2004

அட இருக்கிறதே கொஞ்ச நாள்.. அதுக்குள்ளை சக்கரை சாப்பிடாதை.. உப்புசாப்பிடாதை.. புளி சாப்பிடாதை.. என்னெய் சாப்பிடாதை.. எண்டு நின்மதியா இருக்க விடுறியளில்லையப்பா..

சாப்பிடுறதை சாப்பிட்டிட்டு எல்லாம் செமிக்க நல்லா தண்ணீர் குடியுங்கப்பா.. ஒரு அளவுக்கு பலன்ஸ்பண்ணி சாப்பிட்டு தண்ணீர் குடியுங்கோ.. அது மிச்சமெல்லாத்தையும் பாத்துக்கொள்ளும்..
Idea


- nalayiny - 02-26-2004

தண்ணி உடலில் உள்ள கழிவுப்பொருள்களை அகற்றுமே அன்றி சேர்ந்த கொழுப்புகளை அகற்றாது.

நிறைய சாப்பிட்டிட்டு மண்டையை போடுங்கோ. ஆர் வேண்டாம் எண்டது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- nalayiny - 02-26-2004

ஆம் உண்மை தான். ஆனால் அதனை சுூடாக்கி சாப்பிட கூடாது. பச்சையாகவே சலாட்டுடன் சேற்து சாப்பிடல் நன்று.

sOliyAn Wrote:'ஒலீவ்' எண்ணெய் பாவிக்கலாமே?! இதன் கொழுப்பு மாரடைப்பு போன்ற நோய்களை தடுக்கிறது என்று கூறுகிறார்கள்.



- nalayiny - 02-26-2004

தேசிக்காய் புளியை உணவுடன் சேற்து சாப்பிடுவது மிகவும் நல்லதொரு முறை. இதனை அனைவரும் பழக்கத்தில் கொண்டு வருதல் நன்று. காரணம் தேசிக்காய் புளி உடலில் உள்ள நாடி நாளச்சுவர்களுள் வட்டம் வட்டமாகவே செல்கிறது. இதனால் நாம் கொழுப்புணவை உண்கிறபோது கொழுப்பு படிதலை தடுக்கிறது. இயன்றவரை கொழுப்பு படிதலை தேசிக்காய் குறைக்கிறது.


- pepsi - 02-26-2004

நன்றி


- vasisutha - 02-27-2004

சீஸ் சாப்பிடுவது நல்லதா?