05-23-2005, 02:56 AM
N
தமிழினி
இயல்பான எமது வெளிப்பாடுகளும் சுயபச்சாதாபமாக பார்க்கப்படுது ஏன்?
ஆண்களின் பார்வையில் வரலாறு (History = His Story) எழுதப்பட்டதாலும் எழுதப்படுவதாலும் இந்த தவறு தொடர்கிறதா?
tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_pen1.jpg' border='0' alt='user posted image'>
<b>
வானத்து விண்மீனாய்
மிளிர்ந்திட கனவுகண்டவள்.
குளத்து மீனாய்
தன்னுள் வெதும்புறாள்.
எட்டி தொட்டிட
நினைத்த நிலவதை
நிழலில் கூட தொடமுடியாமல்
தலை குனிகிறாள்.
எட்ட நின்று விறைத்துப்பார்க்கிறாள்.
கற்பனையாய் மட்டும் போய்விட்ட
இவளது கனவுகள்
கண்ணீரைத்தான் விட்டுவைத்தது...!
விடியல் இல்லாத இரவுகள்
விடிந்தபின்னும்விட்டு அகலாத
கனவுகள் காட்சிகள்..
எப்படி விடியவைக்கும்
வாழ்வதனை
வாழ்வு கூட கடமையாய் ஆச்சு..!
நுணுக்கமறிந்து
நுட்பமறிந்து
கலையாய் விந்தையாய்
வாழ நினைத்த இவளது
வாழ்க்கை வெறும்
மணல் கோட்டையாய்
மட்டும் இவள்
மனமடி தவழ்கிறது
கண்ணீர் சொல்லும்
கதையது இவள் வாழ்வின்
கசப்பான வரலாறு..!
ஏதிலையாய் ஏங்கித்தவிக்கும்
எண்ண அலைகள்
என்றும் நிறைவேறப்போதில்லை
என்பதை அறிந்து
ஆண்டுகள் பல சென்றபின்னும்
ஏமாற்றங்கள் தான்
உறுதிப்படுத்துகிறது
உண்மை அவை என்று
மறுபடியும்..!
இனியும் ஒருமுறை
இறந்து மீண்டும் பிறக்க
இனி இவளுள் உயிரில்லை
இன்றே இவள் ஜடம் தான்
இறந்த பின்பும் நடமாடும்
இவள் மனிதஜடம்....!
</b>
<img src='http://www.yarl.com/forum/files/pic4.gif' border='0' alt='user posted image'>
யாவும் கற்பனை
தமிழினி
இயல்பான எமது வெளிப்பாடுகளும் சுயபச்சாதாபமாக பார்க்கப்படுது ஏன்?
ஆண்களின் பார்வையில் வரலாறு (History = His Story) எழுதப்பட்டதாலும் எழுதப்படுவதாலும் இந்த தவறு தொடர்கிறதா?

