05-22-2005, 12:30 PM
அனுமதி மறுத்த புலிகள்!
புலிகளிடமிருக்கும் போர்ப் பிரதேசங்களைப் பார்வையிடுவதென்பது ஒருதலைப்பட்சமானதும் சாத்தியப்படாதெனவும் புலிகள் கூறிவிட்டனர்
விடுதலைப் புலிகளின் `வான்புலிகள்' குறித்து இலங்கை மட்டுமல்லாது இந்தியாவும் பெரும் கவலை கொண்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் இரு கடற்படைகளைத் தவிர, மூன்றாவது கடற்படையாக கடற்புலிகள் வர முடியாதெனக் கூறி வந்த இந்தியாவுக்கு, தற்போது விடுதலைப் புலிகளின் வான் புலிகள் குறித்து பெரும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
வான் புலிகள் அமைப்பானது இந்தியாவினதும் இலங்கையினதும் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் பேரச்சுறுத்தலாயிருப்பதால், வான்புலிகள் விடயத்தில் இனியும் பொறுமை காக்காது, இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா விடுதலைப் புலிகளுக்கெதிராக கடும் நடவடிக்கையில் இறங்க வேண்டுமென, இந்தியாவின் முன்னாள் சிரேஷ்ட படை அதிகாரியொருவர் கூறுமளவிற்கு நிலைமை வந்துள்ளது.
புலிகள் வசம் வான்படை இருப்பதன் மூலம் இலங்கையானது தனது வான் பரப்பின் இறைமையை இழந்து விட்டதாக இந்திய தரப்பிலிருந்து கவலை வெளியிடப்படுகிறது. இந்த வான் புலிகள் அணியானது வான் கரும்புலிகள் படையணியாக மாற்றம் பெற்று வருவதாகவும் இது பிராந்தியத்திற்கே பேராபத்தாகி விடுமெனவும் இலங்கையும் இந்தியாவும் கூறுகின்றன.
புலிகள் -கரும்புலிகள், கடற்புலிகள் - கடற்கரும்புலிகள் என்ற நிலையில், தற்போது வான்புலிகள் என்பதை விட `வான் கரும்புலிகள்' என்பதே சிங்கள தேசத்தினது நிம்மதியை குலைத்தது மட்டுமன்றி இந்தியாவையும் பெரும் கவலையடையச் செய்துள்ளது.
இது குறித்து இலங்கை அரசுடன் இந்தியா நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதுடன், வடக்கே பலாலி விமானப் படைத் தள ஓடு பாதையை பல கோடி ரூபாவில் திருத்தியமைக்கவும் பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது.
இலங்கையிலிருந்து இந்தியப் படைகள் வெளியேறிய பின் கடற்புலிப் படையணியை கட்டியெழுப்புவதில் மிகத் தீவிரம் காட்டிய புலிகள், வடக்கு - கிழக்கு கடற்பரப்பில் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தனர். கடற்பரப்பு எவர் வசமிருக்கிறதோ அந்த நிலப்பரப்பும் அவர்கள் வசமேயிருக்கும் என்பதை கடந்தகாலப் போர்கள் தெளிவுபடுத்தின. ஆனையிறவு படைத்தள முற்றுகை இதற்கு மிகவும் சிறந்த உதாரணமாகும்.
இவ்வாறானதொரு நிலையில் தான் வான்புலிகள் அணியை கட்டியெழுப்புவதிலும் புலிகள் ஆர்வம் காட்டினர். ஆரம்பத்தில் இது சாத்தியப்படாத போதிலும், புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற தமிழர்களின் உதவியுடன் புலிகளால் வான் புலிகள் படையணியை உருவாக்க முடிந்தது. பல தமிழ் இளைஞர்கள் ஐரோப்பிய நாடுகளில் விமானப் பயிற்சிகளை பெற்றதுடன் அவற்றுக்கான தொழில்நுட்பங்களையும் கண்டறிந்தனர்.
1993 இல் கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திற்கு தென்கிழக்கே விடுதலைப் புலிகள் விமான ஓடுபாதையை அமைத்தனர். சுமார் இரு வருடங்களில் இந்த ஓடுபாதை பூர்த்தியடைந்தது. புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இதனைத் திறந்து வைத்தார். அப்போது இந்த ஓடுபாதையில் `கிளைடர்' ரக வானூர்தி மூலம் போராளியொருவர் தங்கள் வான் பறப்பை ஆரம்பித்தார். எனினும் இந்த ஓடுபாதை பின்னர் விமானப் படையினரின் பலத்த விமானக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது.
இதன் பின்னர் 1995 இல் புலிகளின் விமான எதிர்ப்புப் படையணி, கேணல் கிட்டு ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டது. 95 ஏப்ரல் 28, 29 ஆம் திகதிகளில் இந்தப் படையணியே யாழ்ப்பாணத்தில் விமானப் படையினரின் இரு அவ்ரோ விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அப்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின் 1998 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தன்று கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தின் மீது புலிகளின் சிறிய ரக வானூர்தியொன்று மலர் தூவி தங்கள் வசம் வானூர்திகள் இருப்பதை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியது.
தற்போது போர்நிறுத்த உடன்பாடு அமுலில் இருக்கையில் இரணைமடுப் பகுதியில் புலிகள் பாரிய விமான ஓடுபாதையொன்றை அமைத்து அதனருகே சிறிய ரக விமானங்களை நிறுத்தி அவற்றின் பாதுகாப்பிற்கென வான் பாதுகாப்பு முறையையும் வைத்திருப்பதாக இலங்கை அரசு உலகம் முழுவதும் கூறி வருகிறது. இதுபற்றி இந்தியா, பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் ஆதாரபூர்வமாக அறிக்கைகளை அனுப்பி வைத்தும் இருந்தது.
இரணைமடு விமான ஓடுபாதைக்கருகே இரு சிறிய விமானங்கள் இருப்பதை விமானப்படையினர் பல்வேறு தடவைகள் உறுதிப்படுத்தினர். இது பற்றி கண்டறியுமாறு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கும் பல தடவைகள் அரசு தரப்பு அழுத்தங்களைக் கொடுத்தும் அவர்களால் இதுவரை அந்தப் பகுதிக்குச் செல்ல முடியவில்லை. புலிகளின் தலைமைப் பீடத்துடன் இது குறித்து கண்காணிப்புக் குழு பல தடவைகள் பேசியது.
இது பற்றி நோர்வே அனுசரணையாளர்களிடமும் (நோர்வே பிரதமருக்கு ஜனாதிபதி விரிவான கடிதம் அனுப்பியிருந்தார்.) இலங்கை அரசு பல தடவைகள் முறையிட்டும் இரணைமடுப் பகுதியில் புலிகளின் விமான ஓடுபாதையை எவராலுமே பார்க்க முடியவில்லை. ஆனாலும் இலங்கைப் படைத்தரப்பும் இலங்கை அரசும் நோர்வேயிடமும் கண்காணிப்புக் குழுவிடமும் இதுபற்றி தொடர்ந்தும் முறைப்பாடுகளைத் தெரிவித்து வந்தன.
இந்த நிலையில் தான் கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி சென்ற இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கார் இது பற்றி புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோது, புலிகள் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இரணைமடுவோ, வேறெந்தப் பகுதியோ இவ்வாறான இடங்களைப் பார்க்க எவரையும் அனுமதிக்கமாட்டோமெனத் தெரிவித்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இது குறித்து இனிமேல் பேசுவதில் பயனில்லையெனவும் பிரட்ஸ்கார் மூலம் இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கை படையினரைப் போன்றே விடுதலைப் புலிகளிடமும் இராணுவ கட்டமைப்புள்ளது. அவர்கள் தங்கள் படை நடவடிக்கைக்காக பல்வேறு படைப்பிரிவுகளையும் கொண்டுள்ளனர். அந்தப் படைப்பிரிவுகள் பல்வேறு வகையான போர்த் தளபாடங்களைப் பயன்படுத்தும். அது அரசபடையினருக்கும் நன்கு தெரியும் என்பதால் புலிகளிடமிருக்கும் போர்ப் பிரதேசங்களைப் பார்வையிடுவதென்பது ஒருதலைப்பட்சமானதும் சாத்தியப்படாதெனவும் புலிகள் கூறி விட்டனர்.
இன்று விமான ஓடுபாதையைப் பார்க்க வேண்டுமென்பவர்கள் நாளை புலிகளிடம் இருக்கும் ஒவ்வொரு ஆயுதங்களையும் பார்க்க வேண்டுமென்பார்கள். இது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளப்படமுடியாததென்றும் கூறி இது பற்றி இனிமேல் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாமெனவும் புலிகள் பிரட்ஸ்காரிடம் தெளிவாகக் கூறியுள்ளனர். இந்தச் செய்தி பிரட்ஸ்காரினால் உடனடியாக அரச தரப்பிற்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது.
புலிகளின் இந்த நிலைப்பாட்டால், அடுத்து என்ன செய்வதெனத் தெரியாத நிலையில் அரசு உள்ளது. இது பற்றி பல நாடுகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டும் தற்போது இந்தியாதான் இவ் விடயத்தில் தீவிர அக்கறை காட்டி வருகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வார் சிங் விரைவில் இங்கு வரும் போது அரச தரப்புடன் இது பற்றி பேசவுள்ளார்.
இதேநேரம், புலிகளிடமிருப்பதாகக் கூறப்படும் செக் குடியரசுத் தயாரிப்பான `சிலின் Z-143' ரக விமானங்கள் இரண்டும், நாட்டின் ராடர் கண்காணிப்பையும் தாண்டி எவ்வாறு வன்னிக்குள் வந்துசேர்ந்தன என்பதே மிகப் பெரும் கேள்வியாகும்.
கட்டுநாயக்கா மற்றும் இரத்மலானையிலுள்ள விமானத் தளங்களிலிருக்கும் ராடர் கருவிகளால் முன்னர் 60 கடல் மைல் பிரதேசத்தை கண்காணிக்க முடிந்தது, எனினும் தற்போது பீதுருதாலகாலமலையில் நிறுவப்பட்டுள்ள ராடர் கருவிகளின் மூலம் கொழும்பிலுள்ள ராடர் தளத்திலிருந்து 200 கடல் மைல் தூரத்தை கண்காணிக்க முடியும்.
அப்படியிருந்தும் இவ்விரு விமானங்களும் எவ்வாறு இலங்கைக்குள், அதுவும் வன்னிக்குள் நுழைந்தன என்பதை படையினராலோ அல்லது புலனாய்வுத் தரப்பினராலோ இதுவரை அறிந்து கொள்ள முடியவில்லை. அதேநேரம், வெளிநாடுகளிலிருந்து உதிரிப் பாகங்களாக வன்னிக்குள் கொண்டு வரப்பட்டு பின்னர் அவை விமானங்களாகப் பொருத்தப்பட்டிருக்கலாமென்ற ஊகங்களுமுள்ளன.
உதிரிப் பாகங்களாகத்தான் கொண்டு வரப்பட்டு இவை பொருத்தப்பட்டன என்றால் படையினரின் அச்சம் உச்சத்திற்கே சென்று விடும். ஏனெனில், இவ்விரு விமானங்களையும் விட பொருத்தப்படாத நிலையில் மேலும் பல விமானங்கள் வன்னியில் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டிருக்கலாமென்ற அச்சமும் எழுகிறது.
இரணைமடு விமான ஓடு பாதையானது 1,250 மீற்றர் நீளமானது. இதன் அருகே இரு விமானங்களுள்ளன. விமானங்கள் நிறுத்தப்படும் இடமுமுள்ளது. அமெரிக்காவின் மிகப் பெரும் சரக்கு விமானமான ஹேர்குலிஸ் (சி.130) முழுமையாக சரக்குகளுடன் தரையிறங்கக் கூடியளவிற்கு இந்த விமான ஓடுபாதை விஸ்தீரணமானதென விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
புலிகள் வசமிருப்பது இலகு ரக சிறிய விமானங்களென்றால், உலகின் மிகப் பெரும் சரக்கு விமானங்களைத் தரையிறக்கக் கூடியளவிற்கு அவர்கள் ஏன் மிகப்பெரிய ஓடுபாதையைஅமைத்துள்ளார்களென்ற கேள்வியும் படைத்தரப்பால் எழுப்பப்படுகிறது.
சிறிய ரக விமானங்களை வெளியே காண்பித்து பெரிய ரக விமானங்களைத் தரையிறக்கப் போகிறார்களா அல்லது எங்காவதிருந்து விமானங்களை கடத்தி வரப் போகின்றார்களா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.
அதேநேரம், இந்த ஓடு பாதையானது இந்தியப் படையினர் பயன்படுத்தும் டோர்னியர்ஸ் (Dorniers) ரக நடுத்தர விமானங்களைப் பயன்படுத்தும் வசதி கொண்டது. டோர்னியர்ஸ் விமானமானது 12 முதல் 14 துருப்புக்களையும் 1.2 தொன் நிறையுடைய சரக்குகளையும் ஒரேநேரத்தில் ஏற்றிச் செல்லக் கூடியதென்பதால் இவ்வாறான விமானமொன்றினால் ஏற்படும் விளைவு பற்றிய தாக்கம் இலங்கை அரசை மட்டுமல்லாது இந்திய அரசையும் கவலை கொள்ள வைக்கிறது.
புலிகள் வசமிருப்பதாகக் கூறப்படும் இலகு ரக விமானங்களை கண்டறிவதென்பது மிகவும் சிரமமானது. இவ்வாறான இலகு ரக விமானங்களால், மிகவும் தாழ்வாகவும் ராடர்களுக்குள் சிக்காதும் பறக்கக் கூடியன. இவற்றிலிருந்து வெளிப்படும் மிகச் சிறிய சமிக்ஞைகளை ராடர்களால் கண்டறிய முடியாது.
கடந்த 11 ஆம் திகதி வாஷிங்டனில் வெள்ளை மாளிகைப் பகுதியில், விமானப் பறப்பிற்கு தடைவிதிக்கப்பட்ட சுமார் 3 மைல் தூர அதிஉயர் பாதுகாப்பு வலய வான்பரப்புக்குள், உலகத் தனிப்பெரும் வல்லரசின் பாதுகாப்பையும் மீறி இலகு ரக விமானமொன்று பல தடவைகள் ஊடுருவிப் பறந்ததால், வெள்ளை மாளிகையிலிருந்தும் அமெரிக்க பாராளுமன்றத்திலிருந்தும் அனைவரும் வெளியேற்றப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இலகு ரக சிறிய விமானங்களால் எங்கும் ஊடுருவ முடியுமென்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் புலிகள் வசமிருப்பதாகக் கூறப்படும் விமானங்கள் மூலம், நியூயோர்க்கில் செப்டெம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட வான் வழித் தற்கொலைத் தாக்குதலைப் போன்று பாரிய தாக்குதல்களைக் கூட நடத்த முடிமென்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
தற்போது வன்னியில் புலிகளின் வான் படையினர், மண்மூடைகளை இலக்குகளாக வைத்து தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கூறுகின்றனர். கொழும்பிலும் தெற்கிலும் வான் வழித் தற்கொலைத் தாக்குதலை நடத்தும் நோக்கிலேயே இந்தப் பயிற்சிகள் நடைபெறுவதால் முக்கிய தலைவர்களையும் கேந்திர முக்கிய நிலைகளையும் தாக்கும் வாய்ப்புகளுள்ளதாகவும் அச்சம் எழுத்துள்ளது.
இவ்வாறானதொரு தாக்குதலின் போது, விமானத்தில் வரும் கரும்புலிகள் தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கிகளை பொருத்தியிருப்பதுடன் மட்டுமல்லாது அந்த வானூர்திக்குள்ளும் பெருமளவு வெடி மருந்தை நிரப்பி வந்து இலக்குகள் மீது தாக்குதல் நடத்த முடியும். பொதுக் கூட்டமொன்றில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முக்கிய தலைவர் அல்லது தலைவர்கள் மேடையிலிருக்கும் போது அந்த மேடையை இலக்கு வைத்து வந்து தாக்குதலை நடத்த முடியும்.
அதேநேரம், கடற்கரும்புலி அல்லது தரைக் கரும்புலியென்றால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது தாக்குதலை நடத்தி ஆபத்தெதுவுமின்றி அவர்களை அழித்துவிடலாம். ஆனால், வான் கரும்புலியின் வானூர்த்தி, கூட்டமொன்றை இலக்கு வைத்து மேடையை நோக்கி வரும் போது கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனை சுட்டு வீழ்த்தி அழிப்பது பேராபத்தானது.
அந்த வானூர்தி முழுவதும் வெடிகுண்டுகளும் வெடிமருந்துகளும் நிறைத்து வைக்கப்பட்டிருக்குமென்பதால், அதன் மீது தாக்குதலை நடத்தும் போது அந்த வானூர்தி வெடித்துச் சிதற அதற்குள்ளிருக்கும் வெடிமருந்துகளும் குண்டுகளும் வெடித்துச் சிதற அழிவின் அளவு சொல்லும் தரமற்றதாயிருக்கும். இதனால் வான் கரும்புலிகள் குறித்த அச்சம் அரசையும் படையினரையம் அதிர வைத்துள்ளது.
புலிகளின் வானூர்திகளை இவ்வாறான தாக்குதல்களை விட மேலும் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும். வானிலிருந்து வந்து தரையிலோ அல்லது கடலிலோ தாக்குதலை நடத்த முடியும். வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை கடத்தி வரமுடியும். கடற்படைக் கப்பல்களதும் படையினரதும் நடமாட்டங்களை கண்காணிக்கலாம். ஆட்லறித்தாக்குதல்களை வான்வெளியிலிருந்து வழி நடத்தலாம். களமுனையிலிருந்து காயமடைந்தவர்களை அப்புறப்படுத்தலாம், குறுகிய நேர அறிவித்தலில் தங்கள் தலைவர்களை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு செல்லலாம்.
அத்துடன், விமானப் படைத்தளங்கள், கடற்படைத் தளங்கள், இராணுவத்தளங்கள் மீதும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தமுடியும். அதேநேரம், விமானப்படையினரால் இந்த விமானங்களை நடுவானில் வைத்தே பல்வேறு விதங்களிலும் அழித்துவிட முடியும். இந்த வானூர்திகள் புலிகளின் ஓடுபாதையிலிருந்து கிளம்பியது தெரிந்துவிட்டால் அவற்றை நடுவானில் வைத்தே அழித்துவிடவும் முடியும்.
இதேநேரம் தங்கள் வானூர்திகளை விமானப் படையினர் குண்டு வீசி அழித்து விடுவார்களென்பதையும் புலிகள் நன்கறிவர். இதனால் தங்கள் விமானத் தளத்திற்கு அவர்கள் `இலத்திரனியல் வான் பாதுகாப்பு முறை'களையும் ஏற்படுத்தியுள்ளனர். புலிகளின் இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டை, அண்மைக் காலங்களில் வன்னிக்கு புலிகளின் தலைவர்களை ஏற்றியிறக்கச் சென்ற ஹெலிகொப்டர்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
புலிகளின் இந்த வான் பாதுகாப்பு முறையானது, தானாகவே செயற்படும் பொறிமுறையைக் கொண்டது. அதாவது, இந்த வான் பாதுகாப்பு பொறிமுறையிலுள்ள பிரதேசத்தை, அநாமதேய விமானங்களோ அல்லது எதிரியின் விமானங்களோ நெருங்கினால் விமானத் தளத்திலுள்ள இந்தக் கருவிகள் தானாகவே இயங்கி அந்த விமானங்களை நோக்கி தன் வசமுள்ள, நிலத்திலிருந்து விண்ணை நோக்கிப் பாயும் ஏவுகணைகளைச் செலுத்தி இலக்கை தாக்கும்.
இவ்வாறு தினமும் வெளியாகும் தகவல்கள் வான் புலிகளின் பலம் பற்றி பல்வேறு தகவல்களையும் வெளியிடுகிறது. ஆரம்பத்தில் இரணைமடுவில் விமான ஓடு பாதை பற்றிய செய்தி வெளியானது. பின்னர் அவர்கள் வசமிருக்கும் விமானங்கள் பற்றி மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் அப்பகுதியில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருப்பது பற்றியும் அதன் பின்னர், தங்கள் விமானங்களையும் தங்கள் பிரதேசத்தையும் விமான அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பதற்கு வான் பாதுகாப்பு முறையை புலிகள் அறிமுகப்படுத்தியிருப்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி ஆச்சரியமளிக்கின்றன.
இந்த நிலையில் தற்போது கிழக்கிலும் புலிகள் விமான ஓடு பாதையை அமைக்க முயல்வதாக வெளியாகும் செய்திகளால் அரசு தரப்பு இடிந்து போயிருக்கிறது.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>