05-22-2005, 09:15 AM
Kalai Wrote:எனக்கும் அது தவறாக தெரியவில்லை! அது பழக்கம் இல்லாததால் ஒரு மாதிரியாக தெரிகிறது என நினைக்கின்றேன்! முயற்சி செய்தால் மாற்றிக்காட்டலாம்!thamilvanan Wrote:நான் என்ன சொல்கிறேன் என்றால் நடைமுறைக்கு ஏற்றவகையில் முதலில் பஸ் என்பதை பேரூந்து என்றும் றெயின் என்பதை தொடரூந்து என்றும் அவசியமானவற்றை முதலில் ஏற்றுக்கொண்டு திருத்துவோம்.தாய் மொழியில் கதைப்பது உங்களுக்கு ஆரோக்கியமாகத் தெரியவில்லையா தமிழ்வாணன்? <b>"அவனுக்கு மாங்காயீரலில் நோயுள்ளதால் மாங்காயீரல் பண்டுவம் செய்யவேண்டும் என வைத்தியர் சொன்னார்"</b>இப்படிக் கதைப்பதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை.
இங்கும் சில நடைமுறைப்பிரச்சனைகள் உண்டு. அதாவது தொடரூந்து என்பது பெரிய சொல்லாகி சொல்வதற்கு கடினமாக இருக்கிறது.
தொடரூந்து எத்தனை மணிக்கு வரும்? என்று சொல்வது நீண்டுவிட்டது.
ஆக செய்யவேண்டியதை முதலில் செய்வோம்.
அதைவிடுத்து
<b>"அவனுக்கு மாங்காயீரலில் நோயுள்ளதால் மாங்காயீரல் பண்டுவம் செய்யவேண்டும் என வைத்தியர் சொன்னார்"</b>
<b>
"தம்பி தான் வளர்த்த பொழுதுவணங்கியும் பூத்திருப்பது கண்டு பொந்திகை கொண்டான்"</b>
என கதைக்க எழுதவேண்டுமென நினைப்பது ஆரோக்கியமானதா?

