05-22-2005, 08:54 AM
மதன் Wrote:அப்படி அவர்களுக்கு மட்டும் சுதந்திரம் அளவு மீறிவிட்டது? என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
சுகந்திரம் இருக்க வேண்டும் அதை யாரும் தட்டிப்பறிக்க முடியாது. அது நியாயமும் இல்லை. ஆனால் அவர்களின் வாதத்தின் படி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற சுகந்திரம் போதவில்லை... ஆண்களுக்கு மிஞ்சிய சுகந்திரம் பெண்களுக்கு இருக்கிறது என்பதில் எவருக்கும் ஐயம் தேவையில்லை. அவர்கள் அந்த சுகந்திரத்தின் வழியே தமது எல்லை மீறிய செயற்பாடுகளை செய்கிறார்கள். குறிப்பாக அவர்களினால் எமது கலாச்சாரம் தூக்கி வீசப்படுகின்றது. சாதராணமாக உடை மற்றும் அணிகலன்கள் அணிவதில் கூட அவர்களுக்கு விருப்பமில்லை. அதை தாான் சொன்னேன்....அவர்கள் எப்படி இருக்க வேண்டும் அவர்கள் எவ்வாறு எமது கலை கலாச்சாரங்களை மதிக்க வேண்டும் அவற்றை எவ்வாறு பாதுகாக் வேண்டும் என்பவற்றை நான் சொல்ல முடியாது. அவர்கள் தாமாகவே உணரவேண்டும் அவர்கள் உணரும் வரை இவை தொடரும்
மதன் Wrote:பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? யாழிலும் இப்படி நடக்கின்றதே?பிள்ளைகளை வளர்ப்பதில் தவறு என்று நான் சொல்ல வரவில்லை. பெற்றவர்கள் அனைவரிடமும் உள்ள ஒரே குறைபாடு தமது பிள்ளைகளின் வீட்டு செயற்பாடுகளை வைத்து கணிப்பிடுவது. அதாவது ஒரு பிள்ளை வீட்டில் நல்லவனாய் படிப்பில் சுட்டியாய் இருப'்பானாய் இருந்தால் போதும். அவன் தண்ணி அடித்தால் என்ன.....புகைதால் என்ன.....________________-செய்தால் என்ன.. இவர்களுக்கு தெரியப்போவதில்லை. இதனால் இவர்கள் தங்கள் பிள்ளைகளால் ஏமாற்றப்படுகின்றனர். எனவே தமது பிள்ளைகள் வெளியில் என்ன செய்கிறார்கள்.. யாரோடு பழகுகிறார்கள் என்று அறிய வேண்டும். யாழிலிலும் தமிழர்கள் தானே இருக்கின்றார்கள். அங்கு இங்கிருக்கும் இளைஞர்களுக்கும். அங்கு இருக்கும் இளைஞ்களக்கும் இளைஞர்கள் என்ற ரீதியிலே ஒற்றுமையுள்ளது. இன்னும் சொல்லப்போனால் சண்டையிணிகளில் உருவாக்த்தில் விளைநிலமே எமது தாயகம் தான்.... அப்படியிருக்கையில்...இப்படி கேட்பது நியாயமா?
மதன் Wrote:அதற்காக கீழே தாழ்த்தி வைத்திருந்தால் பிரைச்சனை வராது என்று நினைக்கிறீர்களா?அப்படியில்லை... நீங்கள் எப்படி வைத்திருந்தாலும் இவர்கள் பிரச்சினையை கிளப்பியே தீருவார்கள் (அனைவரும் அல்ல ஒரு சிலர்)
நன்றான இருக்கும் குடும்பத்தில் ஒரு தொலைக்காட்சி தொடர் நாடகம் கூட பிரச்சினையை உண்டு பண்னலாம்...கீழே தாழ்த்தி வைத்திருப்பது பெண்ணடிமையாக்கப்படுவது. இதற்க்கும் நான் மெலே சொன்னது போல... இவர்கள் தாங்களாக உணரவேண்டும்... ஒரு வசனத்தை பேச முன் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டும்......இங்கு பெரும்பால விடையங்களில்.. கணவன் மனைவிக்கிடையே சம்பாசனை நடைபெறுகையில் சில வசனங்களை அவதானிக்க முடியும்.....அவை தமிழில் பார்க்கும் போது அவை......எமது சமூக கட்டுப்பாட்.டுக்குள் இருந்த மீறப்பட்டவையாக இருக்கும்...எங்கள் சமூக கட்டுப்பாடு என்று நான் சொன்னது மதங்களை அல்ல தமிழ் சமூக கட்டுப்பாடுகளை... தமிழரின் சமூக கட்டுப்பாடுகள் எவரையும் அடிமைப்படுத்துவதற்காய் அமைக்கப்பட்டவை அல்ல என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்........
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

