05-21-2005, 10:42 PM
kuruvikal Wrote:குருவிகள் ஆகிய நாங்கள் மோகன் அண்ணாவும் யாழ் அண்ணாவும் மட்டும் யாழ் களத்தை நிர்வகித்த காலத்தில் இருந்து கருத்துப் பகிர்ந்து வருகின்றோம்...! அவர்கள் எந்த மாற்றம் செய்வதாக இருந்தாலும் கள உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலம் அறியத்தருவார்கள்..! மோகன் அண்ணா வேலைப்பழு காரணமாக கள உறுப்பினர்களையே மட்டுறுத்தினர் ஆக்கி அவர்களுக்கு ஒரு மொனிரரிங் பவர் கொடுத்தார்கள்..! அதைக்கண்டு யாருக்கும் ஈகோ வரப்போவதில்லை...
அப்படி நினைப்பது மட்டுறுதினர்கள் என்றால் எதுவும் எப்பவும் செய்யலாம் என்ற அதிகாரம் இருப்பதாக என்று சிந்திப்பதாலாக இருக்கலாம்...! அதற்கு கள உறுப்பினர்கள் நாங்கள் பொறுப்பல்ல...!
ஆனால் எங்களால் மட்டுறுத்தினர்கள் பக்கச்சார்பாக நடந்ததை இப்பவும் காட்ட முடியும்...ஆனால் அதைச் செய்யாமல் களத்தில் வேண்டாத விடயங்களைத் தவிர்த்து மட்டுறுத்தினர்களின் செயற்பாட்டில் காணும் குறைகளையே சுட்டிக்காட்டுகின்றோம்..அவை ஈகோவால் வந்தவையல்ல...! நாங்களும் கேட்டால் மோகன் அண்ணா மட்டுறுத்தினர் ஆகத் தகுதியில்லை என்று சொல்லமாட்டார்...ஆனால் எப்பவும் சாதாரண கள உறுப்பினராக இருந்து உறவாடவே விரும்புகின்றோம்...! அப்போதுதான் ஒரு கருத்தாளன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிக்கொணர முடியும்..கருத்துக் காரணம் எழுதாமல் கருத்தை அகற்றுவதும்..கருத்துக்குப் பதில் அளிப்பதைத் தடுப்பதும்..கள உறுப்பினரின் சிந்தனைக்கு காரணத்துக்கு அறிவிப்புக்கு இடமளிக்காது நாகரிகக் கருத்தைக் கூடத் தூக்குதலும்.. இடமாற்றுதலும் ஒரு கருத்தாளனை உற்சாகமாக கருத்தளிக்க ஊக்கிவிப்பதாகத் தெரியவில்லை...! இது களத்தில் வளமான கருத்துக்கள் பிறப்பதைத் தடுக்கவே வழி செய்யும்...!
இத்தகவலை மோகன் அண்ணாவும் பார்ப்பார்..கள உறவுகளும் பார்ப்பார்கள்...என்ற நம்பிக்கையில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லி இருக்கின்றோம்...! (குறிப்பா ஈகோவுக்குப் பதிலாக..அந்த ஈகோ எந்தக் கள உறுப்பினரைக் குறிப்பதாக இருப்பினும்..அப்படி எழுதியது கள உறுப்பினர்களை சரியாக புரிந்துகொள்ள முனையாமையையே காட்டுகிறது..! இதனால் தான் பல தவறான முடிவுகள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டிருக்கின்றன...!) :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இங்கு குருவிகளின் கருத்தை நான் வழிமொழிகிறேன். உண்மையாக சுதந்திரமாக கருத்தை வைகஇக விரும்பும் எவரும் பதவியை என்ற சுமையை விரும்பமாட்டார்கள்.. நான் களத்தில் இணைந்து சிலகாலங்கள் என்றாலும் களத்தின்பால் நாட்டம் கொண்டவன். திடீரென மின்னல்போல் கருத்துக்களை வைக்கின்ற மோகன் இப்படியான பிரச்சனைகள் வரும்நேரம் ஒரு நிதானமான முடிவான பதிலை வைத்தால் பிரச்சனைகள் எழாது. அவர் கழுவுற மீனிலை நழுவுற மீனாக இருந்தால் பிரச்சனைகள் வந்துகொண்டுதான் இருக்கும்.. என்னைப்பொறுத்தவரை சில கருத்துக்களுக்கோ படங்களுக்கோ உரியவர்களிடம் தனிமடல் மூலம் விளக்கம் கேட்டுவிட்டு அதை அனுமதிக்கலாம். அவர்கள் விளக்கம் அழிக்க தாமதிக்கும் பட்சத்தில் அவற்றை தற்காலிகமாக மறைத்துவிடலாம். அவர்கள் விளக்கம் (சரியானமுறையில்) கிடைதஇதால் அதை அனுமதிக்கலாம்.
இதற்கு பதில் சொல்ல மோகன்
அவர் வரமாட்டார் தனியாக எங்களை புலம்ப வைக்கிறதே அவர் பிழைப்பாக போச்சு அவர் வரமாட்டார் வரமாட்டார் எங்களுக்கு இது வேணும்
ஒன்று மட்டும் எங்களுக்கு ஈகோ பிரச்சனை இல்லை சிலவேளை மட்டுறுத்துனர்களுக்கு ஈகோ பிரச்சனை.........................
இப்படியான பிர்சனைகளை தயவுசெய்து அங்கத்துவர் பகுதியில் வைத்தால்
களத்தின் கௌரவத்துக்கு ஒன்றும் வராது என்பது இந்த சிறியவனின் கருத்து ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் உங்கள் பிரச்சனை.
என்ன மோகனன் நீங்கள் பிடில் வாசிக்கப்போகிறீர்களா....................?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 