05-21-2005, 03:14 PM
இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தை விடுவிக்குமாறு அவரின் மனைவி உருக்கமான வேண்டுகோள்
கடத்திச் செல்லப்பட்டுள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தை கண்டுபிடித்து அவரை விடுதலை செய்ய மனித உரிமை அமைப்புகளும் தொண்டர் நிறுவனங்களும் ஊடகங்களும் உதவ முன்வர வேண்டுமென திருமதி சரளா ஜெயரட்ணம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமையுடன் இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் காணாமல் போய் சரியாக ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள பொலிஸ் அலுவலகமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
எனக்கு எனது கணவர் தேவைஇ பிள்ளைகள் இரண்டுக்கும் அப்பா தேவை. அவரைக் கடத்திச் சென்றவர்கள்இ அவரை மன்னித்து விடுவிக்க வேண்டும். அவருக்காக மன்னிப்புக் கோர நான் தயாராக இருக்கின்றேன்.
எனது கணவர் விடயம் தொடர்பாக விடுதலைப் புலிகளை சந்திக்கவும் அவரை விடுவித்துக் கொள்ளவும் ஊடகங்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு அவசியமானதொன்றாகும்.
மேலும்இ மனித உரிமைகள் அமைப்புகள் உட்பட சமய ஸ்தாபன தலைவர்களும் எனது இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
எனது கணவரை விடுவித்து என்னிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் எந்த வித நிபந்தனைக்கும் கட்டுப்பட தயாராக உள்ளேன்.
எதிர்காலத்தில் எந்த வித சிக்கல்களிலும் தொல்லைகளிலும் ஈடுபடாமல் அமைதியான குடும்ப வாழ்க்கையொன்றையே எதிர்பார்த்துள்ளேன்.
இப்போது எந்த வித ஆதரவும் இன்றி பிள்ளைகளுடன் தனித்துப்போய் நிர்க்கதியான நிலையிலுள்ளேன். எனவேஇ இரக்கம் காட்டுமாறு வேண்டுகின்றேன்.
வன்னிக்கு சென்று விடுதலைப் புலிகளின் தலைமைகளுடன் பேசச் சந்தர்ப்பம் அளிக்குமாறும் ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் உருக்கமாக கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
சுட்டது தினகுரல்

TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS