05-21-2005, 12:12 PM
thamilvanan Wrote:சுத்ததமிழ் உருவாக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால் நடைமுளறயில் எவ்வளவு சாத்தியப்படபோகிறது. உலக ஒழுங்குகளுக்கு ஏற்ப நாமும் சில மாறுதலுக்குட்படட்டு விட்டோம். அதில் ஆகசிக்கலான விடயங்களை மாற்றலாம். மற்றவற்றை ஏற்று முன்செல்லவேண்டும்.அன்பின் தமிழ்வாணன் அவர்களுக்கு
அதாவது பஸ் என்பதை வடமொழி சொல் என்பதால் மாற்றலாம். ரீ என்பதை தமிழ் இலக்கண நடைமுறைப்படி ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதால் தேனீர் என்று கொள்ளலாம்.
சூரியன் என்பதை என்ன காரணத்துக்காக கதிரவன் என மாற்றிக்கொள்ளவேண்டும். சூரியன் என்பதும் தமிழ் இலக்கண நடைமுறைப்படி சரியென்பதால் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.
முதலில் தமிழ் எழுத்துக்கள் இல்லாத, ஆனால் பயன்பாட்டில் உள்ள கொற்களுக்கு நல்ல தமிழை ஏற்றுக்கொண்டு செயற்படுவதே நல்லது.
உங்களுடைய கருத்துக்குளுக்கு மிக்க நன்றி. ஆனால் உங்களுடைய கருத்துக்களுடன் என்னால் உடன்பட முடியவில்லை. ஒரு பொருளுக்கு தமிழ்ச் சொல் இருக்கும்போது நாங்கள் வடமொழிச் சொல்லைப் பாவிக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது சூரியன் என்பதற்கு கதிரவன் என்ற அழகான தழிழ்ச் சொல் இருக்கும்போது ஏன் நாம் சூரியன் என்று பாவிக்க வேண்டும்.

