05-18-2005, 08:39 AM
shobana Wrote:இப்படி பாதி விடை பாதியில் கூறினால் மற்றையவர்களின் ஆர்வம் பாதிக்கப்படும்... விடை தேடுவதற்கான ஆர்வம் குறைந்துவிடும் உதாரணமாக... நான் இப்போட்டியை ஆரம்பிக்கும் போது எனக்குத்தெரியாது 5 பாவங்களும் எவை என... இல்லை பாதிவிடை கூறலாம் என்றால் பாதி மற்றையவர்கள் பிரசுரிப்பார்கள் என விட்டுவிடுவோம் இல்லையா??? அதற்குத்தான் கூறினேன்....
ஆனால் பட்டிமன்றம் ஆரம்பிக்கும் போது துயா மிக அழகாக விதிமுறைகள் வைத்துத்தான் ஆரம்பித்தார்... உதாரணமாக ஒரு அணியில் இருந்து இருவர் தொடர்ந்து கருத்துக்களை வைக்கக்கூடாது மற்றைய அணி பதில் கூறும் வரை காத்திருக்கவேண்டும் என...
நன்றி
சோபனா அக்கா உங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. பட்டிமன்றம் என்பது இருவரால் அல்லது இரு குழுக்களால் எதிர் எதிர் கருத்துக்களை முன்வைக்கப்படுவதே. ஆனால் இக்குறுக்கெழுத்துப்போட்டி என்பது விடைகளை கூறுவதே. அது உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் கூறலாம் உதாரணத்திற்கு வசியண்ணா கிருபன் அண்ணா போன்றவர்களாலும் பதில்கள் கூறப்படலாம். ஆனால் பதில் சொன்னவர்கள் முழுமையாக சரியான பதில்களையும் சொல்லவில்லை. எனவே எல்லோரும் உங்களது விடைகளை முன்வைக்கலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

