09-21-2003, 01:03 PM
Quote:கபிலன் உங்கள் கருத்து ஏற்புடை.யதல்ல.முல்லை
குருவிகளின் கருத்துக்களில் நாகரீகம் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே அடிப்படை. அதை பெண்கள் பக்கத்திற்குப் பொறுப்பாளரான நீங்கள் அப்போதே சுட்டிக்காட்டாமல் இப்போ வந்து அவருக்காக வக்காலத்து வாங்குவது முறையாகாது.அப்படித்தான் அவர் எழுதுவதை நியாயமென்று கருதினால் கூட, குருவிகள் ஓடிவந்து முறையிட்டு குய்யோ முறையோ என்று கத்துவது சிறுபிள்ளைத்தனம்.
தாக்குப் பிடிக்காவிட்டால் எதற்காகப் பெண்கள் பக்கத்தில் வந்து கழுத்தை நீட்டுகின்றார். களமாடுவதென்றால் காயங்கள் வராமலா போகும்.
மீண்டும் ஒரு தடவை உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
_________________
முல்லை
குருவிகள் எழுதிய அனைத்தும் நியாயமென்றோ அல்லது நீங்கள் எழுதியவை அனைத்தும் நியாயமென்றோ யாருக்காகவும் வக்காலத்து வாங்க நான் வரவில்லை அதை விரும்பவுமில்லை.எனது கருத்திற்கேற்ப இருபக்க நியாயங்கள், நியாயமின்மைகள் புரிந்தாலும் அவற்றை உங்கள் கருத்தாடலில் குறுக்கிட்டு திசைமாறச் செய்ய நான் விரும்பவில்லை.களத்தில் எந்தத் தலைப்புகளில் கருத்தாடலாம் என யாருக்கும் யாரும் சொல்லமுடியாது.அதை நீங்கள் புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன்.காயங்களை இருபக்கமுமே ஏற்கும் மனநிலையில் இல்லையென்பதும் நானறிந்ததுதான்.ஒருவருடைய கருத்து மற்றவர்ருக்கு உடன்பாடாக வேண்டுமென்ற நியதியெதுவுமில்லைத்தான்.

