Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
LONDON
#31
லண்டனில் இலங்கைத் தமிழர்களிடையே அண்மைக்காலமாக அதிகரித்துவரும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், விசேட தமிழ் அதிரடி ப்படையொன்றை (Special tamil task force) படையொன்றை அமைக்க ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலங்களில் லண்டனில் வாழும் இலங்கைத் தமிழ் சமூகத்திடையே அதிகரித்துவரும் வன்முறையைக் கட்டுப்படுத்தி, குற்றவாளிகளைக் கண்டுபிடி க்கும் நோக்கில், 'என்வர்"(Operation Enver ) என்ற பெயரில் பொலிஸார் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அசான் ரட்ணசேகரம் என்ற இலங்கைத் தமிழ் இளைஞர், கார் ஒன்றில் கத்திகள், பொல்லுகள் மற்றும் வாள்கள் சகிதம் வந்த ""சாமுராய்'' என்றழைக்கப்படும் குழுவொன்றினால் குத்தியும் வெட்டி யும் படுகொலை செய்யப்பட்டார்.

2000 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை லண்டனில் தமிழர்களுக்கிடையே நடைபெறும் வன்முறைகளில் இதுவரை பத்துப்பேர் வரை மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் படுகொலை முயற்சியிலிருந்தும் தப்பித்துள்ளனர்.

தமிழர்களிடையே அதிகரித்துவரும் இந்த வன்முறைகள் அங்கு நிலைமையை மோசமடையச் செய்துவருவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளதாக கூ றும் பொலிஸார், இந்த வன்முறைகளுக்கு போதைப் பொருட்கள் காரணமல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களிடையே உருவாகியுள்ள கோர்;டிகள் இந்த மோதல்களில் ஈடுபட்டு வருவதாகவும், ஒரு தாக்குதல் நடைபெற்றதும் அதற்குப் பழிவாங்க மற்றொரு தாக்குதலில் மற்றக் கோர்;டி, ஈடுபடுவதாகவும் இதன் மூலம் பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் இவர்களிடையே வன்முறை பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் தமிழர்களின் விடயத்தை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியான ஸ்ரீபன் ஹவுஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மோதல்களுக்காக கத்திகள், வாள்கள், கோடரிகள் மற்றும் துப்பாக்கிகள் போன்ற மிக மோசமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதும் கண்டுபிடி க்கப்பட்டுள்ளது.

தற்போது லண்டனில் வாழும் சுமார் 18 ஆயிரம் இலங்கைத் தமிழர்களிடையே 150 பேருக்கு உட்பட்டவர்களே இவ்வாறான வன்முறைகளில் ஈடுபட்டுவருவது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வன்முறைகள் தொடர்பாக வெம்பிளின் சிவன்கோவில் தர்மகர்த்தா சபைத் தலைவர் இராஜசிங்கம் ஜெயதேவன் கூ றுகையில்:அதிகரித்துவரும் இந்த வன்முறைகளால் இங்குள்ள தமிழ்ச் சமூகம் பெரிதும் அதிர்ந்துபோயுள்ளது. அவர்களிடையே அச்சமும் நிலவுகிறது. கொலைகள் மட்டுமல்லாது ஆட்கடத்தல், பயமுறுத்தல் மற்றும் பணயம் வைக்கும் செயற்பாடுகள் இங்கு இடம்பெற்றுவருவதாக தெரிவித்தார்.

இதேநேரம், குடும்ப மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்காகவும் இங்கு மோதல்கள் இடம்பெறுவதாக மற்றொருவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக லண்டனிலுள்ள பத்திரிகைகள் முக்கியத்துவம்கொடுத்து செய்திகளை வெளியிட்டு வரும் அதேநேரம், சில பத்திரிகைகள் இதனை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்த முற்படுவதாகவும் ஆனால், இந்த வன்முறைகளுக்கும், புலிகளுக்கும் எதுவித தொடர்புமில்லையென லண்டனிலிருந்து செயற்படும் ஊடகவியலாளரும், ஒலிபரப்பாளருமான விமல் சொக்கநாதன் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தப் பிரச்சினையைக் கையாண்டு வரும் ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸார் விசேட தமிழ் அதிரடி ப்படையொன்றை அமைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.thanks thinakural
Reply


Messages In This Thread
LONDON - by sethu - 09-12-2003, 10:51 AM
[No subject] - by Kanani - 09-12-2003, 10:58 AM
[No subject] - by sethu - 09-12-2003, 11:04 AM
[No subject] - by kuruvikal - 09-12-2003, 11:10 AM
[No subject] - by Kanani - 09-12-2003, 11:16 AM
[No subject] - by sethu - 09-12-2003, 11:17 AM
[No subject] - by sethu - 09-12-2003, 11:20 AM
[No subject] - by vaiyapuri - 09-12-2003, 12:12 PM
[No subject] - by sethu - 09-12-2003, 12:16 PM
[No subject] - by vaiyapuri - 09-12-2003, 12:22 PM
[No subject] - by sethu - 09-12-2003, 12:25 PM
[No subject] - by vaiyapuri - 09-12-2003, 12:36 PM
[No subject] - by sethu - 09-12-2003, 12:43 PM
[No subject] - by sethu - 09-12-2003, 12:46 PM
[No subject] - by vaiyapuri - 09-12-2003, 01:14 PM
[No subject] - by Guest - 09-12-2003, 01:21 PM
[No subject] - by vaiyapuri - 09-12-2003, 01:29 PM
[No subject] - by Mathivathanan - 09-12-2003, 01:44 PM
[No subject] - by sethu - 09-12-2003, 01:47 PM
[No subject] - by vaiyapuri - 09-12-2003, 02:04 PM
[No subject] - by Manithaasan - 09-12-2003, 03:01 PM
[No subject] - by tamilchellam - 09-12-2003, 03:50 PM
[No subject] - by TMR - 09-16-2003, 07:33 AM
[No subject] - by Manithaasan - 09-17-2003, 07:04 AM
[No subject] - by உண்மை - 09-17-2003, 12:10 PM
[No subject] - by vaiyapuri - 09-17-2003, 12:21 PM
[No subject] - by kuruvikal - 09-17-2003, 12:38 PM
[No subject] - by Sangili - 09-17-2003, 01:24 PM
[No subject] - by tamilchellam - 09-17-2003, 01:53 PM
[No subject] - by vaiyapuri - 09-17-2003, 03:37 PM
[No subject] - by தணிக்கை - 09-21-2003, 12:38 PM
[No subject] - by சாமி - 11-02-2003, 08:19 AM
[No subject] - by aathipan - 11-02-2003, 11:28 AM
[No subject] - by shanmuhi - 11-02-2003, 11:34 AM
[No subject] - by தணிக்கை - 11-02-2003, 11:40 AM
[No subject] - by Paranee - 11-02-2003, 01:24 PM
[No subject] - by Mathivathanan - 11-02-2003, 01:50 PM
[No subject] - by shanmuhi - 11-04-2003, 05:20 PM
[No subject] - by mohamed - 12-17-2003, 01:30 PM
[No subject] - by mohamed - 01-22-2004, 03:19 PM
[No subject] - by shanmuhi - 01-22-2004, 05:02 PM
[No subject] - by sethu - 01-22-2004, 05:07 PM
[No subject] - by sethu - 01-22-2004, 05:08 PM
[No subject] - by Mathivathanan - 01-22-2004, 06:03 PM
[No subject] - by sethu - 01-22-2004, 07:03 PM
[No subject] - by sethu - 01-22-2004, 07:55 PM
[No subject] - by Mathivathanan - 01-22-2004, 08:31 PM
[No subject] - by tharma - 01-23-2004, 02:13 AM
[No subject] - by sethu - 01-23-2004, 10:37 AM
[No subject] - by Mathivathanan - 01-23-2004, 11:37 AM
[No subject] - by mohamed - 01-23-2004, 11:49 AM
[No subject] - by Mathivathanan - 01-23-2004, 12:12 PM
[No subject] - by shanthy - 01-23-2004, 01:52 PM
[No subject] - by Mathivathanan - 01-23-2004, 04:52 PM
[No subject] - by sethu - 01-23-2004, 04:59 PM
[No subject] - by Mathivathanan - 01-23-2004, 05:08 PM
[No subject] - by vasisutha - 01-27-2004, 04:45 AM
[No subject] - by shanthy - 01-27-2004, 09:29 AM
[No subject] - by Mathivathanan - 01-27-2004, 10:03 AM
[No subject] - by vasisutha - 01-27-2004, 04:28 PM
[No subject] - by Mathivathanan - 01-27-2004, 07:47 PM
[No subject] - by pepsi - 01-27-2004, 10:03 PM
[No subject] - by adipadda_tamilan - 01-28-2004, 02:52 AM
[No subject] - by Paranee - 01-28-2004, 09:32 AM
[No subject] - by mohamed - 01-28-2004, 04:56 PM
[No subject] - by vasisutha - 01-28-2004, 10:33 PM
[No subject] - by Mathan - 01-29-2004, 12:17 PM
[No subject] - by kuruvikal - 01-29-2004, 01:12 PM
[No subject] - by Mathan - 01-29-2004, 02:31 PM
[No subject] - by Paranee - 01-29-2004, 02:42 PM
[No subject] - by Mathan - 01-29-2004, 02:49 PM
[No subject] - by Paranee - 01-29-2004, 02:55 PM
[No subject] - by Mathan - 01-29-2004, 02:59 PM
[No subject] - by Paranee - 01-29-2004, 03:03 PM
[No subject] - by Mathan - 01-29-2004, 03:08 PM
[No subject] - by Paranee - 01-29-2004, 03:11 PM
[No subject] - by Mathan - 01-29-2004, 03:14 PM
[No subject] - by sethu - 02-13-2004, 12:06 AM
[No subject] - by mohamed - 02-17-2004, 10:44 AM
[No subject] - by mohamed - 02-17-2004, 10:49 AM
[No subject] - by Mathan - 02-17-2004, 05:50 PM
[No subject] - by mohamed - 02-18-2004, 09:21 AM
[No subject] - by Rajan - 02-20-2004, 01:53 PM
[No subject] - by shanmuhi - 04-18-2004, 02:46 PM
[No subject] - by Mathan - 04-18-2004, 05:36 PM
[No subject] - by sethu - 04-18-2004, 09:59 PM
[No subject] - by AJeevan - 04-19-2004, 08:54 AM
[No subject] - by shanmuhi - 04-19-2004, 04:08 PM
[No subject] - by shanmuhi - 04-19-2004, 04:15 PM
[No subject] - by Mathan - 04-20-2004, 12:45 PM
[No subject] - by Shan - 04-28-2004, 10:47 AM
[No subject] - by Shan - 07-09-2004, 06:00 PM
[No subject] - by வெண்ணிலா - 07-09-2004, 07:12 PM
[No subject] - by ganesh - 07-09-2004, 11:25 PM
[No subject] - by ganesh - 07-09-2004, 11:53 PM
[No subject] - by வெண்ணிலா - 07-10-2004, 05:57 PM
[No subject] - by tamilini - 07-10-2004, 06:41 PM
[No subject] - by சாமி - 09-13-2004, 12:09 AM
[No subject] - by kuruvikal - 09-13-2004, 10:37 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)