Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவிதை எழுதுவது எப்படி...? ? ?
#19
[size=20]நீங்களும் கவிஞராகலாம்! யாப்பின் அடிப்படை
பண்டிதர் .ச.வே.பஞ்சாட்சரம்

ஒன்றுக்கொன்று சமனான ஓசை அளவுடைய இரண்டு அடிகள் கூடக் கவிதை என்றே அழைக்கப்படும். இரட்டை நான்கு அடிகள் கொண்ட விருத்தக் கவிதைகளும்., அடியளவில் மேலும் நீளும் அகவற்பா, கலிப்பா, பஃறொடை வெண்பா, வஞ்சிப்பா முதலியனவும் உண்டு.

இக் கவிதைகள் எதுகை, மோனை இலட்சணங்கள் சரி வர அமைந்திருக்க வேண்டியது அடுத்த முக்கிய அம்சம். இந்த எதுகை, மோனைகள் கவிதைகளுக்கு இலக்கணங்கள் என்பதைவிட - இன்றியமையாத இலட்சணங்கள் - அழகுகள் என்பதே பொருத்தமானது.

ஆனால் இன்று பத்திரிகைகளில் வெளிவருங் கவிதைகளில் இவ்விலட்சணங்கள் அமைந்தவை மிக அபூர்வம். கவிதைகள் "செவிநுகர் கனிகள்" என வர்ணிக்கப்படுவதற்கு ஓசை ஒழுங்கும் எதுகை மோனை இலட்சணங்களுமே காரணம். இதனை, இத்தகைய மரபுக் கவிதைகளையும். இவற்றைப் பற்றி கவலையே இன்றி அமைந்த புதுக்கவிதைகளையும் கவியரங்குகளில் காதாரக் கேட்ட இரசிகர்கள் ஒப்புக்கொள்வர்.

எனவே கவிதைக்கு உயிர்நாடியாகிய திட்டமிட்ட ஓசை ஒழுங்கு, இன்றியமையாத அழகுகளான எதுகை, மோனை இம்மூன்றும் அடிப்படை அம்சங்களாகும். இம் மூன்றையும் சரிவரப்புரிந்து கொண்டவர் நல்ல சிந்தனைத் தெளிவும் உணர்ச்சி வேகமும் மிக்கவராயின் சிறந்த கவிதைகளை நிச்சயம் அவர் பாடித்தள்ள முடியும்.

<b>எதுகைத் தொடைகள்:</b>




கவிதையின் ஒவ்வோர் அடியினதும் முதற்சீரின் இரண்டாவது எழுத்து ஒத்தமைதல் எதுகை எனப்படும்.

<img src='http://www.yarl.com/forum/files/2.gif' border='0' alt='user posted image'>

<b>அவதானிக்குக: </b>

1. ஒவ்வொரு கூட்டிலுமுள்ள நான்கு சொற்களும் ஒவ்வொருபாட்டு நாலடிகளின் முதற்சீர்கள். இந்த நான்கு சீர்களினதும் இரண்டாம் எழுத்துக்கள் ஒன்றாக ஒத்தனவாக இருப்பதை அவதானிக்கவும். இத்தொடைகள் எதுகைகள் எனப்படும்.

2. இந்த முதல் சீரின் முதல் எழுத்துக்கள் யாவும் குறில்களாக -அல்லது நெடில்களாகக் கட்டாயமாக அமைந்திருத்தல் காண்க. இதைவிட்டு, குறில்களும் நெடில்களும் அடித்தொடக்க சீர்களின் முதலெழுத்துக்களாக ஒரு போதும் கலந்து வருவதில்லை.

3. இந்த எதுகைச் சீர்களின் 2ஆம் எழுத்துக்கள், ஒன்றில் ஒரே மெய்களாக, அல்லது ஒரே உயிர்மெய்குறிற் கூட்டமாகவோ, நெடிற்கூட்டமாகவோ மட்டும் அமைந்திருப்பதை அவதானிக்குக.

4. கவிதை எதுகை மோனைகளைப் பொறுத்த மட்டில் சை, கை, டை முதலிய ஜகாரங்கள் அனைத்தும் குறில்களே - மூன்றாம் கூட்டை அவதானித்தறிக.




<b>மோனைத் தொடைகள் </b>

ஒவ்வோர் அடியின் தொடக்க சீரின் முதல் எழுத்துடன் அவ்வடியின் மறுபாதியின் முதல் சீரின் முதலாம் எழுத்து ஒத்து வந்து மோனைத்தொடை அமைதல் இலட்சணம் - குறைந்தபட்சம் அவ்வடியின் அவ்வடியின் வேறேதாவது ஒரு சீரின் முதலெழுத்தாவது ஒத்து வருதல் அவசியம்.


உ+ம்:
படுக்கும் போது மேற்கினிலே
படியுந் தலைகள் காலையிலே
கிடக்கும் மாறிக் கீழ்த்திசையில்!
கிளர்ந்து பள்ளி எழுவீரே!

ஒரு பாட்டின் அடிகள் ஓசை அளவு ஒத்து அமையுமாயின் ஏனைய கவிதை இலக்கணங்களான சீர் அலகுகள், அவ்வலகுகள் சந்திக்கும் தளைகள் யாவும் பிசகின்றித் தானாகச் சரியாக அமைந்துவிடும்.


<b> மூன்று மோனைக் குடும்பங்கள்</b>


<img src='http://www.yarl.com/forum/files/3.gif' border='0' alt='user posted image'>
நன்றி

கவிதன்
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 03-12-2005, 11:19 PM
[No subject] - by sinnappu - 03-13-2005, 12:27 AM
[No subject] - by hari - 03-13-2005, 05:57 AM
[No subject] - by vasisutha - 03-13-2005, 11:26 PM
[No subject] - by shanmuhi - 03-13-2005, 11:27 PM
[No subject] - by Malalai - 03-13-2005, 11:56 PM
[No subject] - by yalie - 03-14-2005, 02:11 AM
[No subject] - by Mathuran - 03-14-2005, 03:02 AM
[No subject] - by kavithan - 03-14-2005, 03:52 AM
[No subject] - by Mathuran - 03-14-2005, 03:57 AM
[No subject] - by kavithan - 03-14-2005, 04:03 AM
[No subject] - by Mathuran - 03-14-2005, 04:08 AM
[No subject] - by yalie - 03-14-2005, 02:25 PM
[No subject] - by kavithan - 03-19-2005, 12:14 AM
[No subject] - by kirubans - 03-19-2005, 12:53 AM
[No subject] - by kavithan - 03-19-2005, 01:02 AM
[No subject] - by tamilini - 05-16-2005, 01:55 PM
[No subject] - by kavithan - 05-16-2005, 02:00 PM
[No subject] - by tamilini - 05-16-2005, 02:02 PM
[No subject] - by kavithan - 05-16-2005, 02:04 PM
[No subject] - by வெண்ணிலா - 05-16-2005, 02:07 PM
[No subject] - by tamilini - 05-16-2005, 02:09 PM
[No subject] - by KULAKADDAN - 05-16-2005, 02:18 PM
[No subject] - by kuruvikal - 05-16-2005, 02:21 PM
[No subject] - by Mathan - 05-16-2005, 02:47 PM
[No subject] - by kavithan - 05-16-2005, 02:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)