05-13-2005, 05:48 PM
tamilini Wrote:Quote:அந்தத் தேவையை தனிப்பட்ட செல்வாக்கும் தீர்மானிக்குமோ...????!தயவு செய்து இதுக்கு சரியான பதில் தாங்கோ.. வலைஞன் அண்ணா... :wink:
இல்லை
கருத்துக்களம் எவ்வாறு இயங்கவேண்டுமென்பதற்கு சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளதன. களத்துக்கென்று சில நிபந்தனைகள் உள்ளன. மீறப்படின் கருத்து அகற்றப்படும் அல்லது இடம் மாற்றப்படும். மட்டுறுத்துனர்கள் எந்தத் தனிப்பட்ட செல்வாக்கையும் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி களநிர்வாக விதிமுறைகளை மட்டுறுத்துனர்கள் தனிப்பட்ட செல்வாக்குகளின் காரணமாக மீறுவார்களாயின் அதற்கான நடவடிக்கைகளை பொறுப்பாளர்கள் மேற்கொள்வார்கள். களத்தில் >>மட்டுறுத்துனர்களால் செய்யப்படும் திருத்தங்கள், அகற்றல்கள், மாற்றங்கள்<< எல்லாம் நிர்வாகத்திற்கு அறியத்தரப்படுகிறது. அதுதவிர பலநேரங்களில் நிர்வாகத்திடம் குறிப்பாக பொறுப்பாளர்களிடம் அறியத்தரப்பட்ட பின்னரே சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற. எனவே, இதுவரை மட்டுறுத்துனர்களுடைய களநிர்வாக செயற்பாட்டில் பொறுப்பாளர்கள் குறை கூறியதில்லை. அப்படி மட்டுறுத்துனர்கள் தமது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துவதாக நீங்கள் நினைத்தால், அதை பொறுப்பாளரிடம் தனிமடலில் எழுதித் தெரிவியுங்கள்.
மற்றும்படி மட்டுறுத்துனர்கள் களத்தை கண்காணிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைக்கும்பொழுது தமது "ஈகோ" காரணமாக மட்டுறுத்துனர்களை மட்டம்தட்டும் வகையில் கருத்துக்கள் எழுதப்பட்டால் அவற்றின் மீது பொறுப்பாளரின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தயவுசெய்து மட்டுறுத்துனர்கள் பற்றி உங்களுக்கு ஆதங்கங்கள் இருந்தால் அதனை பொறுப்பாளர்களிடம் தெரிவியுங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


