05-13-2005, 03:28 PM
Quote:அடுத்தது நாம் அனுப்பும் பணம் அவர்களின் அத்தியாவசிய தேவையைவிட மேலதிகமாக இருப்பதால் வீண்செலவுகள் செய்வதற்கு வழி வகுக்கிறது அவர்கள் கஸ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலே போய்விடுகிறது ஆனபடியால் நாங்கள்தான் அவர்களை சோம்பேறிகள் ஆக்குகின்றோம்..உண்மைதானே?
கஷ்டத்தில் இருந்த பல குடும்பங்களுக்கு வெளிநாட்டு பணம் ஆரம்பத்தில் மிக உதவியாக இருந்ததையும் பின்பு அதிகமாக கிடைக்கும் போது வீண் செலவுகளுக்கு சில குடும்பங்களில் வழிவகுப்பதையும் கண்டிருக்கின்றேன். அளவோடு கொடுப்பது நல்லது.
Quote:இன்று ஊரில் வரதட்சனை இவ்வளவு தூரம் உயர்ந்தமைக்கு யார் காரணம் என நினைக்கிறீர்கள் 4அண்ணன்கள் வெளிநாட்டிலிருந்தால் அவர்களின் தங்கைக்கு வரதட்சனையாக கேட்காமலே அள்ளிக் கொடுத்து பெருமைப் பட்டுகொள்கிறார்கள் இது தமிழ் சமூகத்துக்கு நன்மையா??
சீதணம் உயர்ந்தற்கு வெளிநாட்டு பணம் முக்கிய காரணம் என்பது உண்மைதான். அதேசமயம் சீதணம் இல்லாமல் திருமணம் சாத்தியமற்றது என்ற நிலையில் இருந்த சமூகத்துக்குள் பல திருமணங்களுக்கு இந்த பணம் உதவியது என்பதும் உண்மை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

