09-20-2003, 10:56 PM
கொழும்பு நகரில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான், தமிழ் மக்களின் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பெருமாள்பிள்ளை இராதாகிருர்;ணன் தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனைப் பகுதியில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, பொலிஸ் மா அதிபர் ரி.ஈ.ஆனந்தராஜா ஆகியோருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதேசமயம், கொழும்பிலுள்ள வேறு சில அரசியல்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பொலிஸ் மா அதிபரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழ் மக்களின் பாதுகாப்புத் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் இன்று செயல்படுவது சாதகமான பலாபலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆமர் வீதி, கொச்சிக்கடை, பு@மெண்டல் வீதி, மட்டக்குளி ஆகிய இடங்களில் இப்போது பொலிஸ் காவலரண்களே இயங்குகின்றன. இவற்றைத் தரம் உயர்த்துவதற்குப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்திருக்கிறார்.
தமிழ்மக்கள் வாழும் இப்பகுதிகளில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க வேண்டும். அப்போதுதான், அவர்களின் பாதுகாப்புப் பிரச்சினை நிரந்தரமாகத் தீர்க்கப்படும் என்று இராதாகிருர்;ணன் மேலும் தெரிவித்தார்.
தமிழ் பொலிஸார் நியமனம் தொடர்பாக, உள்துறை அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலும் தாம் அடிக்கடி வலியுறுத்தி வந்திருப்பதையும் இராதாகிருர்;ணன் சுட்டிக்காட்டினார். நீங்களும் அவதானம். நன்றி தினகுரல்.