Yarl Forum
இது கொழும்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: இது கொழும்பு (/showthread.php?tid=8140)



இது கொழும்பு - Guest - 09-13-2003

தினக்குரலில் வந்த செய்தி


ஒளிவு மறைவின்றி

ஒரு மண்டபத்தில் நிகழ்ந்த கொண்டாட்டத்தின் போது ஒருவர், இன்னொருவரை நோக்கி, 'தம்பி! இங்கே வாரும். ஆட்கள் நடமாடும் இந்த இடத்தில் இப்பொருட்கள் இருப்பது இடைஞ் சலாக உள்ளது. இவற்றை எடுத்துப்போய் அப்பால் ஒரு மூýலையில் வைத்துவிடும்" என்று வினய மாகக் கேட்டுக்கொண்டார்.

பலரும் பார்த்திருக்க மற்றவர், அங்கு வைக்கப்பட்டிýருந்த பொதிகளை அப்படிýயே லாவகமாக தூக்கிக் கொண்டு போனார்.

கொண்டாட்டத்தின் நடுவில் பலரும் 'ஐயோ! நாங்கள் இங்கு வைத்த பொருட்களைக் காண வில்லையே" என்று அங்கலாய்த்தபடிý தேடுதல் நடத்தினார்கள். பலன் கிடைக்கவில்லை. அவை அங்கு எந்த மூýலையிலும் இல்லை முடுக்கிலும் இல்லை.

அவற்றை எடுத்துச் சென்ற ஆசாமி, வெளியே அப்புறப்படுத்தி விட்டார். பணிப்புரை வழங்கிய பேர் வழியையும் காணோம்.

இருவருமே பக்காத் திருடர்கள்!

கொண்டாட்டங்களின் போது உங்கள் பொருட்களின் மீது கண் வைத்திருங்கள், மிக விழிப்பாக இருங்கள்.


- Mullai - 09-13-2003

இதுக்காகத்தான் நான் என்ரை அவரை ஒரு கொண்டாட்டத்துக்கும் கூட்டிட்டுப் போகிறதில்லை.
கொஞ்சம் அசந்தால் ஆளையே தூக்கிட்டுப் போயிடுவாங்கள் போக்கிரிப் பசங்கள்.

யாழில் கூட இன்று ஒரு நகைச்சுவை வந்திருந்தது.
[quote]oslo[/color]Hello.
We Need sethu for Yarl. Where he is Now[/color]


- kuruvikal - 09-19-2003

பாட்டிக்கு கொஞ்சம் குசும்பு ஜாத்தி போல...பாவம் பாட்டா....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தணிக்கை - 09-20-2003

கொழும்பு நகரில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான், தமிழ் மக்களின் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பெருமாள்பிள்ளை இராதாகிருர்;ணன் தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனைப் பகுதியில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, பொலிஸ் மா அதிபர் ரி.ஈ.ஆனந்தராஜா ஆகியோருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதேசமயம், கொழும்பிலுள்ள வேறு சில அரசியல்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பொலிஸ் மா அதிபரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழ் மக்களின் பாதுகாப்புத் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் இன்று செயல்படுவது சாதகமான பலாபலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆமர் வீதி, கொச்சிக்கடை, பு@மெண்டல் வீதி, மட்டக்குளி ஆகிய இடங்களில் இப்போது பொலிஸ் காவலரண்களே இயங்குகின்றன. இவற்றைத் தரம் உயர்த்துவதற்குப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்திருக்கிறார்.

தமிழ்மக்கள் வாழும் இப்பகுதிகளில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க வேண்டும். அப்போதுதான், அவர்களின் பாதுகாப்புப் பிரச்சினை நிரந்தரமாகத் தீர்க்கப்படும் என்று இராதாகிருர்;ணன் மேலும் தெரிவித்தார்.

தமிழ் பொலிஸார் நியமனம் தொடர்பாக, உள்துறை அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலும் தாம் அடிக்கடி வலியுறுத்தி வந்திருப்பதையும் இராதாகிருர்;ணன் சுட்டிக்காட்டினார். நீங்களும் அவதானம். நன்றி தினகுரல்.


- vasisutha - 07-22-2004

இதெல்லாம் நகைச்சுவையா? சரி சேது எங்க போட்டார்?