Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நினைவலைகள்
#37
Quote:துடுக்காய் ரொக்கற்
விட்ட
சோழியன் அண்ணா
மிடுக்காய்
இன்றும் பட்டி மன்றத்தில்
நடுவர் கதிரையில் கூட
அமராமால்
தொழில் நுட்பத்தில்
ரொக்கற்றை தானே
கண்டு பிடித்தது போல்
ஓடிக் கொண்டே இருக்கிறாரே
உற்சாகமாக.

நாங்க ரொக்கற்றா விட்டோம்?!

வெற்று ரவைகள் பொறுக்கிவந்து
செயினாக்கி சோக் காட்டினம்
மண்ணாங்கட்டியில் கிரனைட் செய்து
புலி - ஆமி போர் புரிந்தோம்
செல் குத்தும் சத்தம் சொல்லி
ஆட்லறியா நோமலா
கதையும் அளந்தோம்
வளைந்த வேம்பேறி
சென்றி வைத்தோம்
தென்ன மட்டை எல் எம் ஜி
கூட செய்து வைத்தோம்
அம்மாவின் சீலையால்
மறைப்புக்கட்டி நாடு பிரித்தோம்
கொய்யா நாவல் என்று
மறைந்திருந்து கரந்தடித்தோம்
வண்டில் அம்புலன்ஸ் செய்து
வீட்டுக் கோடிக்கு சவாரி விட்டோம்
சந்தியில் குந்தாமலே நாம்
பழகி விட்டோம்
குறும்பின் வயதினிலே
கோட்டை வாசலே வதிவிடமானதால்...!
கோயில் திருநாளில்
துப்பாகியும் ரப்பர் செல்லும்
தேடி அலைந்தோம்
துடியாட்டப் பருவத்திலே
போரது தந்த வேதனைகள் சுமந்தம்
கெலி அடிக்க அடிக்க
எல்லாமே விட்டு ஓடி வந்தோம்
தலையாட்டி முன் நிற்க வைத்து
போட்டோவும் இலவசமாய் எடுத்து வைச்சு
கோலாவும் தந்து
கொழும்புக்கு அனுப்பி விட்டார்
வீட்டுக் காவலில் இருந்தி வைக்க..!
அமைதியென்று
அர்த்த சாமத்தில் படிக்க அமர்ந்தா
வீட்டு பெல் அடிக்கும்
நெஞ்சு பதை பதைக்கும்
சிங்களம் அமைதி குலைக்கும்
"கொட்டி" தேடி
சப்பாத்துக்கள் கதவு தட்டும்
ஐடியும் பொலிஸ் பதிவுமாய்
குலை நடுங்க அம்மா பின்
பதுங்கி நின்றே பழகிவிட்டோம்...!
சந்திப்பக்கம் தலைகாட்டம்
சென்றிகள் அங்க தாராளம் என்பதால்..!
விளையாட்டுக் கழகங்கள் சேர்ந்ததில்லை
தற்கொலைக்குப் பயிற்சி என்று
பொல்லாப்புச் சொல்லி
காசு பறிக்க ஒரு கூட்டம் இருந்ததால்...!
வெடி கொழுத்தி பழகமறுத்தம்
வெடியே வெடிக்க தடையங்கு
கொலன்னாவையில் வெடித்த போது
எல்லாம் சேர்த்து ஒன்றாய் ரசித்தம்
வான் முட்டும் புகையும் கிளம்ப
பட்டப் பகலில்
கொழும்பே இருட்டாகக் கண்டம்
தீபாவளிக்கு சூரியக்கதிரால்
வெடி விடுவதாய் சொன்ன அங்கிளுக்கு
அவர் வாசலிலையே
வருடப் பிறப்புக்கு
துறைமுகத்தில் முழங்கக் கண்டம்
சன் ரிவியும் சூரியனும் நம்பிக்கையாக
அதையே நம்பி வாழ்ந்துவிட்டோம்
பள்ளிப் புத்தகம் நடுவே
தினமுரசு வாசித்தம்
அற்புதன் அன்று அற்புதமாய் எழுதியதற்காய்
இன்று அதை மறந்தே விட்டோம்..!
கூடப் பிறந்ததுகள்
தூர தேசம் பறந்திட
அன்பு நண்பரும்
அடிபாட்டில் மாவீரராக
நட்புக்கள் இன்றி
தனியே வாழ்ந்துவிட்டோம்
தனிமை எமக்கே சொந்தமாக
நாமே நமக்குள் பேசிப் பழகிக் கொண்டோம்
வீட்டுக்குள் விளையாட்டு மைத்தானம்
அமைத்தே விளையாடிவிட்டோம்
சின்ன வயதுச் சுதந்திரம் என்பது
பாதி இழந்த சின்னச் சிட்டுக்களாய்
எங்கள் காலம் இழந்தாயிற்று
எனினும் எமக்குள்ளும்
நினைவுகள் ஏராளம்
உங்களைப் போலவே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
நினைவலைகள் - by Malalai - 05-10-2005, 01:11 AM
Re: நினைவலைகள் - by Malalai - 05-10-2005, 03:02 AM
[No subject] - by sWEEtmICHe - 05-10-2005, 03:04 AM
[No subject] - by Malalai - 05-10-2005, 03:10 AM
[No subject] - by sWEEtmICHe - 05-10-2005, 03:17 AM
[No subject] - by sOliyAn - 05-10-2005, 03:47 AM
[No subject] - by Malalai - 05-10-2005, 04:42 AM
[No subject] - by Malalai - 05-10-2005, 04:42 AM
[No subject] - by tamilini - 05-10-2005, 12:17 PM
[No subject] - by Mathan - 05-10-2005, 01:41 PM
[No subject] - by kuruvikal - 05-10-2005, 02:04 PM
[No subject] - by Malalai - 05-10-2005, 02:44 PM
[No subject] - by Malalai - 05-10-2005, 02:47 PM
[No subject] - by Mathan - 05-10-2005, 03:05 PM
[No subject] - by tamilini - 05-10-2005, 03:09 PM
[No subject] - by Mathan - 05-10-2005, 04:35 PM
[No subject] - by Malalai - 05-10-2005, 08:34 PM
[No subject] - by tamilini - 05-10-2005, 08:35 PM
[No subject] - by Malalai - 05-10-2005, 08:37 PM
[No subject] - by Eswar - 05-10-2005, 08:51 PM
[No subject] - by Malalai - 05-10-2005, 08:55 PM
[No subject] - by Eswar - 05-10-2005, 10:14 PM
[No subject] - by Malalai - 05-10-2005, 10:15 PM
[No subject] - by Mathan - 05-10-2005, 10:17 PM
[No subject] - by Eswar - 05-10-2005, 11:01 PM
[No subject] - by Malalai - 05-11-2005, 12:10 AM
[No subject] - by Eswar - 05-11-2005, 10:49 AM
[No subject] - by Malalai - 05-11-2005, 06:40 PM
[No subject] - by KULAKADDAN - 05-11-2005, 07:08 PM
[No subject] - by Malalai - 05-11-2005, 07:45 PM
[No subject] - by sathiri - 05-11-2005, 11:19 PM
[No subject] - by Malalai - 05-12-2005, 01:13 AM
[No subject] - by kavithan - 05-12-2005, 04:20 AM
[No subject] - by Malalai - 05-12-2005, 06:12 AM
[No subject] - by sOliyAn - 05-12-2005, 11:03 AM
[No subject] - by tamilini - 05-12-2005, 12:20 PM
[No subject] - by kuruvikal - 05-12-2005, 12:42 PM
[No subject] - by Eswar - 05-12-2005, 12:57 PM
[No subject] - by tamilini - 05-12-2005, 01:00 PM
[No subject] - by Malalai - 05-12-2005, 03:44 PM
[No subject] - by KULAKADDAN - 05-12-2005, 10:10 PM
[No subject] - by kavithan - 05-13-2005, 07:24 AM
[No subject] - by tamilini - 05-13-2005, 11:00 AM
[No subject] - by Mathan - 05-13-2005, 12:53 PM
[No subject] - by Malalai - 05-13-2005, 02:55 PM
[No subject] - by sathiri - 05-14-2005, 02:13 AM
[No subject] - by Malalai - 05-14-2005, 05:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)