05-12-2005, 11:03 AM
Quote:துடுக்காய் ரொக்கற்
விட்ட
சோழியன் அண்ணா
மிடுக்காய்
இன்றும் பட்டி மன்றத்தில்
நடுவர் கதிரையில் கூட
அமராமால்
தொழில் நுட்பத்தில்
ரொக்கற்றை தானே
கண்டு பிடித்தது போல்
ஓடிக் கொண்டே இருக்கிறாரே
உற்சாகமாக.
ரொக்கற்மட்டுமா விட்டோம்?!
சிரட்டை பொறுக்கிவந்து
சோறுகாய்ச்சி மண்ணில்விட்டோம்
மண்ணில் உருவம்செய்து
சூரன்போர் புரியவிட்டோம்
குரும்பையில் ஈர்க்குக் குத்தி
தேரும் அசையவிட்டோம்
வளைந்த வேம்பேறி
'வஸ்'ஸும் நல்லாய்விட்டோம்
அம்மாவின் சீலையிலே
'சீன்'கட்டி கூத்தும் விட்டோம்
கொய்யா நாவல் என்று
தாவிநின்று பயமும் விட்டோம்
வண்டில் வளையத்தில்
தடிகொண்டு சவாரி விட்டோம்
சந்தியில் குந்தியே நாம்
குறும்புகள் பலதும் விட்டோம்
குறும்பின் இடையினிலே
விளையாட்டுக் கழகம் விட்டோம்
கோயில் திருநாளில் - தண்ணீர்
பந்தலும் கட்டி விட்டோம்
துடியாட்டப் பருவத்திலே
தொண்டும் தொந்தரவும் இணைத்து விட்டோம்
எல்லாமே விட்டதாய்
கிட்டாத நினைவுகளாய்
விட்டோடி வந்தோம் நாம்
ஆனால் என்ன?!
சந்தியில் நின்று நாங்கள்
அன்று விட்டுவைத்த
விளையாட்டுக் கழகமும் வாசிகசாலையும்
இன்று..
சொந்த நிலமும் கட்டிடமுமாய்...
எங்கள் ரொக்கற்றுகளில் சில
விளைச்சலுற்ற களிப்பெமக்குள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.

