05-11-2005, 03:48 PM
புலிகளின் விமான ஓடுபாதையில் புதிய கோபுரம், அச்சுறுத்தலைத் தடுக்க இலங்கைக்கு வெளிநாட்டு உதவி
விடுதலைப் புலிகளின் விமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை அரசு வெளிநாட்ட உதவிகளைப் பெறவுள்ளது. கிளிநொச்சியில் இரணைமடுப் பகுதியிலுள்ள புலிகளின் விமான ஓடுபாதைக்குச் சமீபமாக இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வானூர்திகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன்
தற்போது புலிகள் தங்கள் விமான ஓடுபாதைகளில் வமானப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது.
கடந்த திங்கட்கிழமை திருகோணமலை சம்பூரிலிருந்து கிளிநொச்சிக்கு விமானப்படையின் விஷேட ஹெலிகொப்டர் மூலம் புலிகளின் திருமலை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் சொர்ணம் சென்றிருந்தார். இவரை ஏற்றிச்சென்ற ஹெலிகொப்டர் ஏ-9 வீதிக்கு மேலாக இரணைமடுப்பகுதியில் சென்றபோதும்ää ஹெலிகொப்ரரின் அடிப்புறத்தில்ப் பொருத்தப்பட்டிருந்த ஏவுகணை எதிர்ப்புக்கருவி செயற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதியும் கேணல் சொர்ணத்தைக் கிளிநொச்சிக்கு ஹெலிகொப்டர் ஒன்று ஏற்றிச்சென்ற போதும் அது அங்கிருந்து திரும்பிய போதும் இந்த ஏவுகணை எதிர்ப்புக் கருவி செயற்பட்டிருந்தது.
இதேநேரம் கடந்த முறைப் பயணங்களைவிட கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சிக்கு சென்று திரும்பிய ஹெலிகொப்டர் ஓட்டுனர் சுமுது தகநாயக்க புலிகளின் விமான ஓடுபாதைக்கருகே உயர்ந்த கோபுரம் ஒன்றிருப்பதை அவதானித்திருக்கின்றார். எனினும் அது விமானக் கட்டுப்பாட்டு கோபுரமாக இருக்கும் சாத்தியம் இல்லை என கருதும் விமானப்படையினர் இது என்னவாக இருக்கும் என அறிய முடியாது திண்டாடுகின்றனர்.
இது குறித்து விமானப் படைத்தளபதி ஏயார் மார்ஸல் டொனால்ட் பெரேரா தாம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் மாற்று நடவடிக்ககைள் குறித்து ஆராய்வதாகவும் விமானப்படை வட்டாரங்கள் தெரிக்கின்றன.
அத்துடன் தமது விமானங்களையும் விமான ஓடுபாதையையும் பாதுகாப்பதற்காக வான்புலிகள் இலத்திரனியல் வான்பாதுகாப்பு முறையை பெற்றிருக்கலாம் எனவும் விமானப் படையினர் கருதுகின்றனர்.
இதே நேரம் புதிதாக விமான ஓடுபாதைக்கு அருகிலுள்ள கோபுரம் குறித்துக் கண்டறிவதில் தீவிரம் காட்டிவரும் விமானப் படையினர் இது குறித்து சில நாடுகளுடனும் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.
புலிகளின் விமான அச்சுறுத்தல்களை அடுத்த நவீன பாதுகாப்பு முறைகள் குறித்து இலங்கை அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.
இதற்கான பயிற்சிகளையும் கருவிகளையும் வழங்கிய சில நாடுகளும் முன்வந்துள்ளன. இந்தியாவும் இது தொடர்பாக மிகுந்த அக்கறை செலுத்துவதடன் இது குறித்த இலங்கைத் தரப்புடனும் தொடர்பு கொண்டுள்ளது.
இதேவேளை தங்கள் வசமிருக்கும் இலகு ரக வானூர்திகளையும் விமான ஓடுபாதைகளையும் பயன்படுத்தி தற்போது விடுதலைப் புலிகள் பயிற்சிகளில் ஈடுபட்ட வருவதாகவும் வெளிநாடுகள் பலவற்றின் புலிகள் பலர் விமானப் பயிற்சிகளைப் பெற்று வருவதாகவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
சங்கதி
http://sooriyan.com/index.php?option=conte...id=1650&Itemid=

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>