Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரோகரா...!
#1
[size=18]<b>அரோகரா...!</b>

லாச்சப்பல் வீதியில்
நகர்ந்து கொண்டு வருகிறது
தேர்...!
முன்னாலே..
அண்ணன் கணேசன் செல்ல
பின்னாலே...
அவன் தம்பி கந்தவடிவேலன்
தேரிலே பவனி...!

வீதியெங்கும்...
ஒரே ஆரவாரமும்
அரோகராச் சத்தமும்
அம்மன் கோவில் தாண்டி
நகர்கிறது...
வேலனுக்கு அரோகரா
கணேசனுக்கு அரோகரா
எப்போர்...
அருகில் உள்ள
அம்பாளுக்கு
ஒன்றுமே சொல்லவில்லை...!

அவள்தான் பாவம்...!
அவளுக்கும் திருவிழா
வருகிறது போகிறது
ஒரு வருடம் கூட
வீதிவழி தேரில் ஏற்றி
கூட்டிச் சென்றதில்லை..!
இந்த எண்ணம்
இதுவரைக்கும் எவருக்கும்
தோன்றவில்லைப் போலும்...!

அம்பாள் வீதிவழி...
ஆனைமுகனுக்கும் தம்பி
ஆறுமுகனுக்கும்
அரோகரா என்று சொல்லிக்கொண்டே
ஆயிரக்கணக்கில்...
தேங்காய்களை சிதறுதேங்காயாக
உடைத்துக்கொண்டு
பக்த்தி பரவசத்துடன்
செல்கிறார்கள் பக்தர்கூட்டம்..!

அப்போ....
இளைஞர்கள் கூட்டம்...?
அவர்களுக்கு...
ஆட்டம்
பாட்டம்
கொண்டாட்டம்...!
இதைவிட
வேறு என்ன சந்தோஷம்
இந்த வாலிபருக்கு...?
இவர்களின் அரோகரா எல்லாம்
ஆண்டவனுக்கு இல்லை
அழகான பெண்களுக்கு மட்டும்தான்...!

அலையலையாய்த் திரண்டுவந்த
கதிர்வீசும் கண்களைக்கொண்ட
பெண்களுக்கும்
பட்டுப்பாவாடைகட்டி
மெல்ல நடந்துவரும் சின்ன இடை
வண்ணச்சிட்டுக்களுக்கும் தான்
இவர்களின்
பாமாலைகளும் அரோகராச் சத்தமும்

இப்போது...
லாச்சப்பல் வீதி எல்லாம்
அடைக்கப்பட்டு விட்டது..!
அந்த வழியால் வாகனம்
எதுவுமே...
உள்ளே செல்லவோ
அல்லது...
வெளியே செல்லவோ அனுமதியில்லை....!

ஏதோ... அவசரத்தில்
அடைக்கப்பட்ட வீதியால்
போக நினைத்த ஒரு பிரஞ்சுக்காரன்
போகமுடியாததால்...
அங்கு கடமையில் நின்ற
காவலரை திட்டிக்கொண்டே செல்கிறான்

அந்தப் பிரஞ்சுக்காரன்
ஒரு துணிச்சல்க்காரன்
அவன் காவலருக்குச் சொன்னான்....
வேலையில்லாமல் அவங்கள்
வீதியில் நின்று ஆட
நீங்கள் ஏன் பாதுகாப்பு
கொடுத்து....
உங்கள் நேரத்தை
வீணாக்குகிறீர்கள் என்று...!

அவன் பேசிய வார்த்தைகள்
காதுவழிவந்து என் நெஞ்சில் குத்தி
மனதிலே காயத்தோடு
தேரடி வீதிக்கு ஓடிவர....

பட்டுவேட்டிகட்டி
பக்த்திப்பரவசத்துடன்
பாதணி கூட இல்லாமல்
திருவிழா காணவந்த ஒரு வாலிபன்
தன் நண்பனுக்குச் சொல்லுகின்றான்...
மச்சான் அங்கபார்....
அந்தச் சரக்கு மணிச்சரக்கு
விடாத ஓடிப்போய்ப் பிடி...!!!

இப்போது நான்
யாருக்கு அரோகரா சொல்லுவேன்...?
அந்தப் பிரஞ்சுக்காரனுக்கா...?
இந்த வாலிபனுக்கா...?
அந்த வினாயகனுக்கா...?

மனசு குழம்பிய நிலையில்
நெஞ்சம் வெந்துபோயிலுக்க
அதோ....
அந்த வீதியில்....
வெந்த மனசுக்காரரை
குழிர்விக்க
குழிர்ந்த மோர் கொடுக்கிறார்கள்...!

ஆகா....
அமிர்தம்
அருமையான தொண்டு
தலைவணங்கலாம்
அவன் செய்யும் செயலுக்கு...!!

வெந்த மனதை
மோர் விட்டு ஆத்திக்கொண்டு நிற்க
வினாயகரும் அவன் சகோதரனும்
சுற்றுலா முடிந்து
ஆலயத்தினுள்ளே நுழைகிறார்கள்
நுழைவாயிலில்...
வைக்கப்பட்டிருந்த பல
நூற்றுக்கணக்கான தேங்காய்களை
சிதறுதேங்காய்களாக அடித்து
நொருக்கிவிட்டு
நூல் வேட்டிக் கரையை
சரிசெய்தபடி ஒரு பக்த்தன்
இன்னும் ஒருவனுக்குச் சொல்லுகிறான்
இந்தமுறை....
தேர்த்திருவிழா அந்தமாதிரி...!
அவன் சொல்லுவதைக் கேட்ட
எனது மனசு சொல்லியது...
அடைத்தகுரலில்....அரோகரா......!!!


த.சரீஷ்
17.09.2003 (பாரீஸ்)
sharish
Reply


Messages In This Thread
அரோகரா...! - by sharish - 09-20-2003, 08:08 AM
[No subject] - by Alai - 09-20-2003, 10:46 AM
Re: அரோகரா...! - by Alai - 09-20-2003, 10:50 AM
[No subject] - by nalayiny - 09-20-2003, 11:05 AM
[No subject] - by nalayiny - 09-20-2003, 11:14 AM
[No subject] - by nalayiny - 09-20-2003, 11:18 AM
[No subject] - by Mathivathanan - 09-20-2003, 11:37 AM
[No subject] - by nalayiny - 09-20-2003, 11:40 AM
[No subject] - by Mathivathanan - 09-20-2003, 11:50 AM
[No subject] - by Mathivathanan - 09-20-2003, 11:57 AM
[No subject] - by kuruvikal - 09-20-2003, 12:24 PM
[No subject] - by Alai - 09-20-2003, 01:05 PM
[No subject] - by AJeevan - 09-20-2003, 01:22 PM
Re: அரோகரா...! - by Mathivathanan - 09-20-2003, 03:24 PM
Re: அரோகரா...! - by Mathivathanan - 09-20-2003, 03:27 PM
Re: அரோகரா...! - by Mullai - 09-20-2003, 03:31 PM
[No subject] - by Mathivathanan - 09-20-2003, 04:16 PM
[No subject] - by nalayiny - 09-20-2003, 04:52 PM
[No subject] - by Mathivathanan - 09-20-2003, 05:02 PM
[No subject] - by nalayiny - 09-20-2003, 05:10 PM
[No subject] - by Mathivathanan - 09-20-2003, 05:14 PM
[No subject] - by Mullai - 09-20-2003, 06:55 PM
[No subject] - by Mathivathanan - 09-20-2003, 10:18 PM
[No subject] - by kuruvikal - 09-21-2003, 09:58 AM
[No subject] - by Mathivathanan - 09-21-2003, 04:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)