05-08-2005, 05:38 PM
தற்போதைய சூழலில் பிளேயர் தனது மூன்றாவது பதவிக்காலம் முழுவதும் பதவியில் இருக்கபோவதாக அறிவித்துள்ளார். ஆனால் தொழிற்கட்சியில் பின்வரிசை எம்பிக்களால் அதிகரித்து வரும் அழுத்தம் காரணாமாக அவரால் குறிப்பிட்ட காலத்திற்கு பின் பதவி விலகவேண்டி வரலாம். இந்த தேர்தலில் தொழிற்கட்சியின் ஆதரவு 161 மெஜாரிட்டி ஆசனங்களில் இருந்து 67ஆக குறைந்தற்கு பிளேயரும் ஒரு முக்கிய காரணம். பல இடங்களிலும் பிரித்தானிய மக்கள் குறிப்பாக வெள்ளை இனத்தவர் ஒரு பொய்யருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டதை காணகூடியதாக இருந்தது. ஈராக் யுத்தத்தில் பிளேயர் பொய் கூறியதால் தான் தொழிற்கட்சியின் ஆதரவு குறைந்தது என்று தொழிற்கட்சி ஆதரவு பத்திரிகையாக டெய்லி மிரர் தவிர மற்ற பத்திரிகைகள் அனைத்தும் கருத்து கூறி உள்ளன. அடுத்தவருடம் உள்ளூராட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பிளேயர் பதவி விலகி அடுத்த நிலையில் உள்ள Gordon Brownக்கு அதிகாரத்தை அளிப்பது கட்சியை பலப்படுத்த உதவும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

