05-07-2005, 02:11 PM
Mathan Wrote:ஏறத்தாள தொழிற் கட்சியை ஜதேக கட்சிக்கும் கன்சவேட்டிவ் கட்சியை சுதந்திரகட்சிக்கும் ஒப்பிடலாம்.
இது ஒரு சுவாரசியமான ஒப்பீடு. பொரு்ளாதார மற்றும் சமூக விடயங்களில் சுதந்திரக் கட்சி இடதுசாரிப் போக்குக் கொண்டது. ஐதேக வலதுசாரிப் போக்குக் கொண்டது, பிரித்தானியத் தொழிற் கட்சி பாரம்பரியமாக இடது சாரிப் போக்குக் கொண்டிருந்தது. இப்போதைய "நவீன தொழிற்கட்சி" நடுவழிப் பட்டதாக இருந்தாலும், கன்சர்வேடிவ் கட்சியுடன் ஒப்பிடும் போது இடது பக்கம்தான் உள்ளது. அதன்படி பார்த்தால் ஐதேகவையும் கன்சர்வேடிவ் கட்சியையும் தான் ஒரே பக்கத்தில் வைக்க வேண்டும்.
புலத்தில் தமிழர் பொதுவாக இடதுசாரிக் கட்சிகளையே ஆதரிக்கிறார்கள். ஏனென்றால் இடதுசாரிக் கட்சிகள் தான் குடிவரவு, அகதிகள் போன்ற விடயங்களில் எங்களுக்குச் சார்பான போக்கைக் கொண்டிருக்கின்றன. உதாரணம் பிரித்தானியாவில் தொழிற்கட்சி, கனடாவில் லிபரல், அல்லது என்.டி.பீ. ஆனால், தமிழர்கள் பொருளாதார, மற்றும் குடிவரவு தவிர்ந்த மற்றைய சமூக விடயங்களில் மிகவும் பாரம்பரிய, வலதுசாரிக் கருத்துகளைக் கொண்டவர்கள் என நினைக்கிறேன். மேற்கத்தைய இடது சாரிக் கட்சிகளின் மற்றைய கொள்கைகளை விழுங்குவதில் தமிழர்களுக்குக் சங்கடமாக இருக்கும் (உதாரணங்கள்்: ஒரினச் சேர்க்கை, பெண் உரிமைகள், கருக் கலைப்பு, கடவுள்).
குடிவரவு, சிறுபான்மையினர் விடயங்களைத் தவிர மற்ற விடயங்கள் முன்னடிக்கு வரும்போது புலத் தமிழர்கள் இடதுசாரிக் கட்சிகள் பக்கமிருந்து வலது சாரிக் கட்சிகளின் பக்கத்துக்குத் தாவும் நிலைமையைக் காணக் கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

