05-06-2005, 08:06 PM
மே தினத்தன்று டி.வி.யில் தோன்றிய நடிகர் விவேக் ஓபராய்இ இந்திய இளைஞர்களை பெருமூச்சுவிட வைத்துவிட்டார்! ஐஸ்வர்யாராயை விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகச் சொன்னால் பெருமூச்சு வராமல் என்னதான் வரும்? உலக அழகி ஐஸ்வர்யாவைக் கல்யாணம் செய்யும் பாக்கியம் அவருக்குக் கிடைக்கஇ சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் உதவி செய்ததே காரணம் என்று இப்போதே சிலர் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
மங்களூரில் பிறந்த உலக அழகி ஐஸ§க்கு ஏகப்பட்ட அங்கீகாரங்கள். 'டைம்' பத்திரிகையால் உலகின் சக்தி வாய்ந்த நூறு மனிதர்களில் ஒருவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர். உலகப் பிரசித்தி பெற்ற "மேடம் துஸ்ஸாத்" மியூசியத்தில்இ பிரபலமானவர்கள் வரிசையில் மெழுகு பொம்மையாக நிரந்தர இடம் பெற்றுள்ளவர். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஓப்ரா வின்ப்ரே நிகழ்ச்சியில் பேட்டி... ஹாலிவுட் படங்கள்... கிட்டத்தட்ட இந்தியாவின் அடையாளமாகவே அவர் உருவாகிக் கொண்டிருக்கிறார்.
அவருக்குக் காதல் அனுபவம் என்பது புதிது அல்ல. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போதே மாடலிங் செய்யத் தொடங்கியவர் ஐஸ்வர்யா. பிறகு பிரபல கோலாஇ புடைவை விளம்பரங்களால் ஆரம்பத்தில் புகழ் பெற்றார். அப்போதிருந்தே அவருக்குக் காதல் விண்ணப்பங்கள் வந்து குவியுமாம்! வேறு பல நட்சத்திரங்களைப் போல இவரும் மருத்துவராக விரும்பிஇ பின்னர் சுதாரித்துக்கொண்டு கட்டடக் கலை படித்தவர்.
ஐஸ் _ ஓபராய் காதல் தெரிந்ததுதானே! இதில் என்ன ஆச்சரியம்?' என்கிறவர்கள் விவரம் புரியாதவர்கள். ஏனென்றால் கடந்த இரண்டு வருடங்களாக அவர்களது காதலில் இடைவெளிகள்இ சறுக்கல்கள்இ சவால்கள் அதிகம்.
பாலிவுட் எனப்படும் மும்பைப் படவுலகில் சாதாரணமாகவே பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. சல்மான்கான் தன் தொப்பையில் துளையிட்டு நகை போட்டுக் கொண்டது கூட ஒரு செய்தியானது. வேலை இல்லாமல் இருந்த ஷில்பா ஷெட்டிகூட வேலை மெனக்கெட்டு பாகிஸ்தான் கொடியை முத்தமிட்டார். அதன் மூலம் செய்தியைக் கிளப்பி அதில் குளிர் காய்ந்தார்.
ஹிந்தி நடிக நடிகைகள் சிலர் அதிரடியாகப் பேட்டி தருவார்கள். "காமிராவுக்கு முன்பு எப்படி முத்தம் இடுவது என்பது பற்றி எங்களுக்கு ஒன்றும் தயக்கம் கிடையாது. எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நாங்கள் "இச்" கொடுத்துக்கொள்வோம். ஆனால் பிரச்னை என்னவென்றால்இ எங்களால் கண்டவனுக்கும் முத்தம் தரமுடியாது. ஆள் அழகனாகஇ அம்சமாக இருப்பது மிக மிக அவசியம்!" _ இப்படி ஒரு நடிகை சமீபத்தில் திருவாய் மலர்ந்தார். அவரால் நிராகரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டவர் 'பழம்பெரும்' ஸ்டார் ரிஷி கபூர்.
இப்படிப்பட்ட துறையில் அதிகம் பேசப்பட்ட காதல் முறிவுகளில் ஒன்று ஐஸ்வர்யா _ சல்மான் இடையேயானது.
சல்மானின் காதல் மிகவும் அடாவடித்தனமானது. சாதுவான ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்இ "நாம் பிரிந்து விடலாம்" என்றிருக்கிறார். ‘முடியவே முடியாது’ என்றார் சல்மான். கட்டாயப்படுத்திக் காதலைத் தக்க வைத்துக்கொள்ள அனேக வழிகளைக் கடைப்பிடித்துப் பார்த்தார்.
படப் பிடிப்புக்கிடையில் அத்து மீறி வம்பு செய்வதுஇ வீட்டுக்கு வந்து காரை மோதி மிரட்டுவதுஇ ஒரே நாளில் அரை மணிக்கொருதரம் போன் செய்வது என்று பல வில்லத்தனங்கள் செய்தார் ஹீரோ சல்மான்கான்.
அந்தச் சூழலில் தென்றலாக ராய் அருகில் தோன்றியவர் விவேக் ஓபராய். பிரபல நடிகர் சுரேஷ் ஓபராயின் மகன். இதற்கு முன்பாக ராணி முகர்ஜியுடன் விவேக் நெருக்கமாக இருந்தார் என்ற செய்திதான் வெளிவந்திருந்தது. ஐஸ்_விவேக் நட்புப் பற்றி அறிந்ததும் இன்னும் கொதித்துப் போனார் சல்மான்.
அப்போது ஒரு நல்ல காரியம் செய்தார் ஓபராய். செய்தியாளர்களைக் கூப்பிட்டுஇ சல்மான் ஐஸ§க்குக் கொடுத்துவரும் தொல்லைகள் பற்றிய உண்மைகளை பகிரங்கப்படுத்தினார்.
விஷயம் பொதுப் பிரச்னை ஆகிஇ சினிமா இதழ்களையும் தாண்டிஇ முக்கிய நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாகவே ஆகிவிட்டது. அதனால் தானும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஐஸ்வர்யா. சல்மானுடன் தனக்கு இனி எந்தத் தொடர்பும் இருக்காது என்று அறிவித்தார். இருவரும் இணைந்து நடிப்பதாக இருந்த படங்களும் கைவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
உடனேயே ஐஸ் _ விவேக் காதல் அறிவிக்கப்பட்டுவிடவில்லை. வழக்கம்போலஇ ஒருவரை ஒருவர் நல்ல துணை என்றார்கள். பத்திரிகையாளர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள். "அதற்குமேல் இருந்தால்இ உங்களுக்குச் சொல்லாமலா?" என்று பதிலுக்குக் கேட்டு போக்குக் காட்டினார்கள் இருவரும்.
ஓபராய் ஒரு பேட்டியில்இ "நான் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ளப்போகும் நபர் குர்ப்ரீத் என்பவர்தான். தயவு செய்து ஐஸ்வர்யா பற்றிக் கேட்காதீர்கள். சொந்தத்தில் ஒரு வீடு கட்டி முடித்ததும் நான் கல்யாணம் செய்து கொள்வேன்’’ என்றுகூட உதார் விட்டார். ஐஸ§ம் இவரும் நடித்த படமொன்றில் நீண்ட முத்தக்காட்சி ஒன்று வந்து பரபரப்பானது. அந்தக் காட்சியை இந்த ஜோடிதான் பிடிவாதம் பிடித்துஇ சேர்க்கச் சொன்னார்களாம். அதுவே அவர்களின் காதலுக்கும் திருமணத்திற்கும் முன்னோட்டமாக அமைந்து விட்டதென்றும் சொல்கிறார்கள்.
இதற்கிடையே பாலிவுட் சலித்துஇ ஹாலிவுட் மீது நாட்டம் வந்தது ஐஸ்வர்யாவுக்கு. இரண்டு ஆங்கிலப் படங்களில் நடித்தார். நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன் உலகம் சுற்றிவரப் புறப்பட்டார். திரும்பி வந்தவர் நடவடிக்கைகளில் சற்று மாற்றம் தெரிந்தது.
‘‘விவேக்கை சட்டை பண்ணுவதில்லைஇ பாராமுகம் காட்டுகிறார்இ அவர்கள் உறவு அவ்வளவுதான். என்ன இருந்தாலும் விவேக் மூலம் ஆக வேண்டிய காரியம் ஐஸ்வர்யாவுக்கு எதுவுமில்லையே? இப்போது கூட ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. சல்மான் வேண்டுமானால் மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாம்’’ என்று பத்திரிகைகள் எழுதின.
இணைய தளங்களில் ஐஸ்வர்யா யாரைத் திருமணம் செய்துகொள்வார் என்பது அடிக்கடி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. "இவராஇ அவரா? அதற்குப் பதிலாக என்னையும் காதலிக்கலாம். நான் உங்களை என் தலையில் வைத்துக் கொண்டு காப்பாற்றுவேன்" என்று கணிப்பொறி கம்பெனிகளில் கை நிறைய சம்பளம் பெறும் வாலிபர்கள் தூது விட்டதும் உண்டு. ரசிகர்கள் ஐஸ்வர்யாவின் பெயர் எண்இ ஜாதகத்தைக்கூட அலசி விட்டார்கள். இதன்படி ஐஸ்வர்யாஇ ‘காதலன் எனக்கே எனக்குத்தான் வேண்டும்’ என்று சொல்லக்கூடியவராம்.
ரகசியங்களை பொத்திப் பொத்தி வைத்துக் கொள்ள விரும்புவார். உறவுகளை அவ்வப்போது அறுத்துக் கொள்வார்; பழிவாங்க நினைத்துவிட்டால் அவருக்கு இணை யாரும் இருக்க முடியாது என்பதுகூட ஜோதிடர்களின் கணிப்பு. கிட்டத்தட்ட ஒரு முக்கிய தேசிய விவாதமாகவே ஐஸ்வர்யாவின் காதல் ஆகிவிட்டிருந்தது. இந்நிலையில்தன் விவேக் இப்படி வாய் திறந்திருக்கிறார்.
ஆனாலும் ஓபராய் தனது பேட்டியில் ஐஸ்வர்யாவுக்கு முழு மார்க் கொடுத்துவிடவில்லை. "அழகுப் பெண்களில் முதலிடம் என் அம்மாவுக்குத்தான். அடுத்தது மதுபாலா. மூன்றாவதாக என் இதயத்தில் இடம் பெறுபவர்தான் ஐஸ்வர்யா" என்று முத்தாய்ப்பு வைத்திருக்கிறார் ஓபராய். என்றாலும் ‘என் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார். என்னை ஒரு நிலைப்படுத்தியவர் அவர்தான்’ என்று ஐஸ§க்கு ஐஸ§ம் வைத்திருக்கிறார்!
இப்போதெல்லாம் நட்சத்திரங்கள் தங்கள் திருமணத்தைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாகச் செய்தி பரப்புவதன்மூலம் விவாதப் பொருளாக ஆகிவிடுகிறார்கள். அப்படியாவது தங்கள் 'மார்க்கெட்டை' நிலை நிறுத்த நினைக்கிறார்கள். சமீபகாலப் படங்களின் தோல்வி காரணமாக டல்லடிக்கும் தங்கள் புகழை இந்தத் திருமண அறிவிப்பு மீட்டுக் கொடுக்கும் என்று அவர்கள் நினைப்பதாகவும் ஒரு தகவல். எப்படியிருந்தாலும்இ ஏராளமான இளைஞர்களைத் தனது அறிவிப்பின் மூலம் ஏக்கப் பெருமூச்சுவிட வைத்துவிட்டார் விவேக் ஓபராய்!
நன்றி: குமுதம்

" "
" "
" "