05-06-2005, 07:38 PM
இவர்களது பதிவை வெட்டி ஒட்டியிருந்தேன் . என் சொந்த கருத்துகள்
நல்ல தமிழில் பேசுவது எழுதுவது தமிழ் கலைச்சொல்லாக்கம் பற்றி வசந்தனின் பேசப்பபட்டது. அதைக்குறித்து கறுப்பியும் சிறி ரங்கனும் பதிவிட்டிருந்தனர்.
தமிழில் பேசும் போதும் எழுதும் போதும் இயலுமாகவரை தனித்தமிழை பாவிப்பது சிறப்பானது. தமிழில் எழுதுவதற்கும் பேசுவதற்கும் கதைப்பதற்கும் கருத்துக்கு பொருத்தமான தமிழ் சொற்கள் இருக்கும் போது வேறு சொற்களை பயன்படுத்தி கதைப்பதும் எழுதுவதும் தேவையற்றதுதானே. ஏன் நாம் வலிந்து பிற சொற்களை தமிழல்லாத சொற்களை புகுத்தவேண்டும்.
தமிழில் இல்லாத சொற்களுக்கு கலைச்சொல் ஆக்கும் போது கூடிய கவனம் தேவை என்பது எனது கருத்து.
தற்போது தமிழில் கலைச்சொற்கள் இருக்கும் சொற்களுக்கு சமாந்தரமாக ஆங்கிலத்தை தமிழாக்கிய சொற்களும் பாவனையில் இருந்து வருகிறன
உதாரணமாக சில
பஸ்- பேரூந்து
இரயில் -புகையிரதம் தொடரூந்து
சைக்கிள் -துவிச்சக்கர வண்டி அல்லது ஈரூருளி
இவை போல நாளாந்த பாவனையில் உள்ள சொற்களுக்கு தமிழாக்கம் அதன் கருத்தோடு ஒட்டி அக்குறிப்பிட்ட போருளை விளக்க பொருத்தமாக இருந்தால் சிறப்பானதே. அதை விளக்க பொருத்தமான தமிழ் அடிச்சொல் இல்லாத போது தமிழாக்கம் செய்வதில் கவனம் தேவை.
பாண் எனும் சொல் ஆங்கில ; இருந்து தமிழுக்கு வந்ததோ அல்லது வேறு எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை ஆனால் அது வெதுப்பி தமிழாக்கப்பட்டவிதம் மனதில் ஒட்டா தன்மையாய் இருக்கிறது. நாளடைவில் சரியாகுமோ தெரியவில்லை.
இதே போல விஞ்ஞானம் சார் கலைச்சொற்கள் பல இலங்கையில் தாய் மொழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது உருவாக்கப்பட்டன.
உதாரணமாக
பௌதீகவியவில் சில சொற்கள்
ஆவியாதல் மறை வெப்பம் Latent heat of vaporization
தன் வெப்பக்கொள்ளளவு Specific heat capacity
உயிரியலில்
கலம் Cell
இழை மணி Mitocondria
அக முதலுருசிறுவலை Endoplasmic reticulam
செங்குழியம் அல்லது செங்குருதி சிறு துணிக்கை Red blood cells
வெண்குழியம் White blood cells
தொடுப்பிழையம் Connective tissue
இவற்றில் Mitocondria -இழைமணி என பெயரிட்டார்கள் என புரியாவிட்டாலும் அதை தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்து பழகிவிடதால் புரிகிறது. Conective tissue தொடுப்பிழையம் என மொழி பெயர்த்தது காரணத்துடன் பொருந்துகிறது. Connection/connect தொடுப்பு அதை புரியும் இழையம்(Tissue).
பழக்கத்தில் வரும் பொது புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் சில சொற்கள் இன்னும் தமிழாக்க படவில்லை அல்லது அதற்குரிய தமிழ் எனக்கு தெரியாதோ தெரியவில்லை
உதாரணமாக சில
பக்ற்றீரியா Bacteria
குளேரின் Chlorine
போன்ற இரசாயன மூலகங்களுக்கான சொற்கள்.
இப்படியான விடயங்களுக்கு புதிய கலைச்சொல்லாக்குவதிலும் அதை தமிழ் ஒலிவடிவத்துள் அடங்ககூடிய வரிவடிவத்தை கொடுத்து பயன்படுத்துவதே நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
ஏற்கனவே உள்ள உதாரணம்
ஐதரசன் Hydrogen
தமிழில் பேசவேண்டும் தமிழில் எழுதவேண்டும் தமிழில் இன்னும் பல விஞ்ஞான நூல்கள் மொழிபெயர்கப்படவில்லை அவை செம்மையாக நடைபெறவேண்டும்.
அதே நேரம் நமது சமூகம் உலக்துடன் ஒன்றி போகவும் வேண்டும்.
தமிழோடு வேறு மொழி குறிப்பாக ஆங்கிலத்திலும் சளரமாக பேச எழுதவும் எம்மக்களுக்கு தெரிந்திருக்கவேண்டும் எனபது என்கருத்து. இது ஆங்கில மோகம் என்பதல்ல ஆனால் இது நடைமுறைக்கு மிக அத்தியாவசியம்.
தற்போது நான் இருக்கும் சூழலில் சீனர்கள் வியட்நாமியார்கள் என பலருடனும் பழகும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
அவர்களது நாடுகளில் அனைத்தும் பல்கலை கழக கல்வி உட்பட அவர்களது சொந்த மொழியிலேயே ஜப்பனைப் போல. அவர்கள் இங்கு வந்த பின் எழும் சிக்கல் அவர்களால் சரளமாக ஆங்கிலம் பேச முடியாதுள்ளதுடன் அவர்கள் துறை சார் சொற்களுக்கு சமனான ஆங்கில சொல் எது எனபதை சில நேரம் தெரியாது அவர்கள் கையிலிருக்கும் மொழிமாற்றியில் தட்டி புரிநது கொள்ள வேணடடியுள்ளது.
உதாரணமா
பக்ற்றீயா வை தமது சொந்த மொழியில் உள்ள கலைசொல் முலம் மட்டும் கற்றுவிட்டு இங்கு ஆங்கிலத்தில் Bacteria எனும் போது அது புரியாது முழிக்கவேண்டியுள்ளார்கள்.
இவ்வாறான நிலையில்லாது தமிழ்ப்படுத்த வேண்டியதை தமிழ்படுத்தி அப்படியே உள்வாங்கவேண்டியதை உள்வாங்குவதன் முலமே மொழி வளரமுடியும்.
உதாரணத்திற்கு ஆங்கிலமும் தமிழில் இருந்து சொற்களை உள்வாங்கியுள்ளது
உதாரணம்
கட்டுமரம்
கூலி
கறி
போன்றவை.
சொந்த மொழியை தமது நாட்டில் பாவிக்கும் அதே வேளை பிற நாடுகளிலும் சிக்கலில்லாது செல்வதற்கு ஆங்கில அறிவு உதவும்.
இதை புலத்திலிருக்கும் அனைவரும் நன்கு உணர்வீர்கள்.
எனது கருத்து நன்கு ஆராய்ந்து புதிய சொற்களை உருவாக்ககூடியவற்றுக்கு புதியசொற்களும் அவ்வாறு முடியாத அல்லது அதை மொழிமாற்றம் செய்வதால் அதிக சிக்கல் வரும் எனும் போது அதை தமிழ் ஒலிவடிவத்துக்கு ஏற்றவாறு மொழிமாற்றுவதும் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>