05-06-2005, 02:27 PM
மொழியும்,புதியசொற்களின் தேவையும்.
மொழியும்,புதியசொற்களின் தேவையும்.
தமிழ் ஒரு மொழி. அதன் வளர்ச்சி-அழிவு யாவும் அதன் பயன்பாட்டை நுகரும் மக்களின் பொருளாதாரப் பலத்துடன் சம்பந்தப்பட்டது.பொருள் வளர்ச்சியுடன்தாம் மொழிதோன்றி வளர்கிறதேயொழிய வெறும் மனவிருப்புகளின் படியல்ல.
உற்பத்திச் சக்திகளை அன்நிய மொழிகள்தாம் கட்டுப்படுத்தும்போது உற்பத்தியுறுவுகளின் பயன்பாட்டு மொழியான தமிழ் எவ்வளவு காலத்துக்குத் தாக்குப்பிடிக்கும்.எந்த மொழியும் தனித்தூய்மையாக வளரமுடியாது.வளர்ச்சியடைந்த ஐரோப்பிய மொழிகள் யாவும் வேற்று மொழிச்சொற்களை உள்வாங்கி வளர்ந்;துள்ளன.மருத்துவம் பயிலும் மாணவருக்குப் புரியும் இலத்தீனது சொற்கள் எவ்வளவு ஜேர்மன்,ஆங்கிலம்,பிரஞ்சிலும் கொட்டிக்கிடக்கிறதென.
தமிழின் கட்டுமரத்தை ஐரோப்பிய மொழிகள் அப்படியே'கற்றுமறாம்'என்றே அழைக்கின்றார்கள்.
மொழிமாற்றும்-ஒலிமாற்றும் ஒருமொழிக்கு அவசியமானது.இதைமறுக்கும் மொழி மெல்லச் சாகும்.
பஸ்,கார்,இரயில்,சயிக்கிள்,பேனை,கொப்பி,பென்சில்,ரேசர்,கட்டர்,
கொம்பாஸ்,ரயர்,ரேடியோ,டெலிபோன் இவையாவும் ஒலிமாற்றாகும்.இவை தமிழ் கிடையாது, எனவே தமிழில்தான் மாற்றி எழுதுவோமெனும் அறிவு மூடத்தனமானது.இவையும் ஒலிமாற்றுத் தமிழ்.அன்நிய வார்த்தைகள் பிரிவுக்குள் அடங்கும்.நம்மிடம்தாம் அப்படியொரு அகராதியே கிடையாதே.
வார்த்தைகளுள் தூய்மை காண்பது இருக்கட்டும்,முதலில் தமிழுக்கொரு சிறந்த முறையிலான-எல்லோரும் கற்கும் வகையிலான இலக்கண நூலை உருவாக்குங்கள்.அப்போது தமிழின் விருத்திக்கு வித்திட்டதாக இருக்கும்.தொல்காப்பியத்தை வைத்துச் சவாரிசெய்வது விருத்தியுறும் மொழிக்கு உதவாது.
ஆங்கிலம்,ஜேர்மன்,பிரஞ்சு மொழிகளில் இருக்கும் இலக்கண நூல்கள்போன்ற அறிவார்ந்த இலக்கணக் கட்டுக் கோப்பை உருவாக்கி முன்வைக்கும் தேவையே மிக,மிக அவசியம் தமிழுக்கு.மீளவும் சொல்வோம்: ஒரு மொழியின் வாழ்வு சொல்லாக்கத்துடன்- ஒலிமாற்றுடன்தாம் வளர்வுறும்.தனித்த கெட்டிப்பட்ட சொல்லுருவாக்கம் -உதாரணம்:துவிச்சக்கரவண்டி,பேரூந்து,புகையிரதம் போன்று பின் தங்கிவிடும்.
மக்களால் பரவலாகப் பேசப்படும் தொழில்நுட்பப் பெயர்களான 'ஒலிமாற்றுச் சொற்களைக்' களைவது மொழியை அழிப்பதற்குச் சமன்.மொழியின் உயிர் வாழ்வானது ஒழுங்கமைந்த அரசினதும்,பொருளாதாரப் பலத்தினதும் காத்திரமான உறுதியினாலேதாம் தீர்மானிக்கப்படுகிறது.இதைவிட்டு தன்னார்வச் செயற்திட்டம் ஒருபோதும் மொழியினது இருப்பை உறுதி செய்யமுடியாது.
நன்றி ஸ்ரீரங்கன்

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>