05-06-2005, 12:58 PM
Quote:கற்பு என்பது பண்பு/ஒழுக்கநெறி சார்ந்தது என்று கொள்ளும்போது...
அப்படி அது ஒழுக்கநெறி சார்ந்ததெனின்...
ஈஸ்வர் நான் இதில் கற்பு ஒழுக்கநெறி சார்ந்ததுதான் என்று உறுதியாக எதையும் எழுதவில்லை என்பதை முதலில் குறிப்பிட்டுவிடுகிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->மற்றும் கற்பு ஒழுக்கநெறியைக் குறிப்பதற்கான இன்னொரு சொல் அல்ல என்பது நீங்கள் அறிந்ததுதான். பண்பு/ஒழுக்கநெறியுள் கற்பும் ஒன்றெனவே கருதவேண்டியுள்ளது (கற்பு ஒழுக்கநெறி சார்ந்ததெனின் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ). அதாவது பாலியல் ஒழுக்கம் சார்ந்த நெறி. மற்றும்படி பொதுவாக பண்பு/ஒழுக்நெறி போன்றவற்றைத் தீர்மானிப்பது யார் என்ற கேள்விக்கு ஸ்ராலினின் பதில் பொருத்தமாக இருக்கும். ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் அங்கு நிறுவனரே தன் நிறுவனத்தின் விதிகளைத் தீர்மானிக்கிறார். நிறுவனர் அவ்விதிகளைத் தீர்மானிப்பதற்கு அவர் மீது ஆதிக்கம் செலுத்தியுள்ள இன்னொருவர் காரணமாக இருக்கலாம் (உதாரணமாக: அரசாங்கம்). அதேபோல் பண்பு/ஒழுக்கநெறியை தனிநபர் தீர்மானிப்பதாக இருந்தாலும், அங்கும் சமூகம் தனது ஆதிக்கத்தை ஏதோ ஒருவகையில் செலுத்துகிறது.

