05-04-2005, 01:41 PM
tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/1.gif' border='0' alt='user posted image'>
<b>சின்னச்சின்ன கோடுகள்
சிக்கலாய் போனது
இடியப்பச்சிக்கலாய்
என்ன தான் செய்வது
சிக்கித்தவித்தது இதயங்களாச்சே
நவ நாகரீக உலகில்
இதுவும் நாகரீகமாம்
காதல்.
கண்ணுக்கு தெரியாதாம்
கற்பனையில் காலம்
ஓட்டிடும் இளம்
உள்ளங்களின்
இம்சைக்கு அளவே இல்லை..
இது தான் காதல் என்று.
உருவமும் இல்லை
இது தான் நியதி என்று
வரையறையும் இல்லை
அறுக்கப்பட்ட வரையறையின்றி
இதுவும் காதல் என்று.
இஸ்டத்திற்கு நடக்கிறது
கட்டியணைத்தலும் முத்தமிடலும்
காதலிற்கு முக்கிய விதிகளாய் ஆச்சு.
இதயத்தை சின்னமாக்கி..
உடல் உறுப்பொன்றை
ஊனமாக்கி
இவர்கள் பண்ணும் கூத்து.
கண் கொண்டு பார்க்க
முடிவதில்லை..
காதல் இன்றி சாதல்
இது வேதவாக்காய்
காதலுக்காய் இங்கு
சாதல்களும் நடக்கிறது..
சினிமாக்காதல் இவர்களிற்கு
தீனி போட
காதலிற்கு ஆயுள் குறைகிறது..??
கண்டபடி காதலிற்கு
வரைவிலக்கணம் வந்தால்..
கலிகாலத்தில்.
காதலே இனிச்சாகுமோ..?
கண்கெட்ட
காதலர் செய்கையால்..??</b>
காதல் மனம் - மூளை சார்ந்த அற்புதமான அன்பு கலந்த ஏக்கம் கலந்த புனிதமான மெல்லிய உணர்வு.....அநேகம் மனிதர்கள் காதலை அதன் உண்மையான வடிவத்தில் உணர்பவர்களாக இல்லாமல் வெறும் பருவ இச்சைகளை தீர்த்துக் கொள்ளவே பயன்படுத்துகின்றனர்..! அதுதான் தமிழினி சொல்வது போல் காதலை அசிங்கப்படுத்துகிறது...! மற்றும் படி காதல் மலரிலும் மென்மையான மிகவும் புனித உணரக்கூடிய ஒரு மனம் - மூளை சார் உணர்வு....! குறிப்பா.. அங்கும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதி இருக்கும் மட்டும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

