05-04-2005, 02:19 AM
பிரிட்டிஷ் தேர்தலில் இராக் விவகாரம்
பிரிட்டிஷ் தேர்தல் பிரச்சாரத்தின் போது இராக் மீதான போர் குறித்த விவகாரத்தை பிரதமர் டொனி பிளயரின் தொழில் கட்சி அடக்கி வாசிக்க முயற்சித்த போதிலும், பிரச்சார காலத்தின் இறுதி வேளையில் பத்திரிகைகளை அலங்கரிக்கும் தலைப்புச் செய்திகளில் இராக் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது.
சில தினங்களுக்கு முன்னர் இராக்கில் ரோந்து நடவடிக்கை ஒன்றின் போது கிளர்ச்சிக்காரர்களால் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய் ஒருவரின் மனைவி தனது கணவரின் மரணத்துக்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சிகளான கான்சர்வேட்டிவ் கட்சி மற்றும் லிபரல் டெமோகிரட்டிக் கட்சி ஆகியன, இராக் போரை பிரதமர் டொனி பிளயர் முன்னெடுத்த விதத்தை விமர்சித்து வருகின்ற போதிலும், இந்த சிப்பாயின் மரணம் தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்ட மறுத்து விட்டன.
ஈராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள்
தேர்தல் குறித்து அண்மையில் வெளியான கருத்துக் கணிப்புகள் சில, இந்த தேர்தலின் போது இராக் போர் விவகாரத்தை ஒரு முக்கியமான விடயமாக பெரும்பாலன மக்கள் பார்க்கவில்லை என்றே கூறியிருக்கின்றன.
ஆனாலும் இறுதி நேரத்தில் இராக் போர் குறித்து வெளியாகும் தலைப்புச் செய்திகள், ஒரளவுக்கு பிளயர் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தலாம் என்றும், சில தொழிற்கட்சி ஆதரவாளர்கள், போரை ஆரம்பம் முதலே எதிர்த்த லிபரல் டெமொகிரட்டிக் கட்சியை நோக்கி சாய இவை ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிபிசி தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>