05-03-2005, 01:54 PM
மேலே பலர் குறிப்பிட்டது போல தொழிற்கட்சிக்கும் பழமைபேண் கட்சிக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. தொழிற்கட்சி தான் ஆட்சிக்கு வந்தால் 1951 ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட அகதிகளுக்கான ஐநா வின் ஒப்பந்தத்தில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ்தான் இதுவரைகாலமும் அகதிஅந்தஸ்து அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்தது.
என்னைப்பொறுத்தவரையில் லிபரல் கட்சிக்கு வாக்களிப்பது பொருத்தமானதாயிருக்கும். அவர்களால் ஆட்சியமைக்க முடியாதென்பது வெளிப்படை. ஈழத்தவரது தற்போதைய அரசியல் பலத்தை அடிப்படையாக வைத்து நோக்குகையில் அவர்களால் பெரிய கட்சிகளில் பாரியளவு செல்வாக்கை செலுத்தக்கூடிய வல்லமை தற்போதைக்கு இல்லை. எனவே லிபரல் போன்ற கட்சிகளிற்கு வாக்களித்து அவர்கள் மூலம் எமது பிரச்சனைகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு போவதற்கு முனையலாம். தகுந்த அணுகுறை மூலம் லிபரல் கட்சியை ஒப்பீட்டளவில் இலகுவாக அணுகலாம் (Lobby)
எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு மில்லியன் மக்கள் இலண்டன் வீதியில் அணிதிரண்டு எதிர்த்தும் பிளேயர் போருக்குச் சென்றார். எனவே அவரைப் புறக்கணிப்பதன் மூலம் மக்களை எதிர்த்து நகர்வுகளை மேற்கொண்டால் எப்படியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை அரசியல்வாதிகளுக்கு விடுக்கும் ஒரு செய்தியாக இந்த வாக்களிப்பை வாக்காளர்கள் பயன்படுத்தலாம்.