05-01-2005, 11:15 PM
நிலவின் புலம்பல்..!
பாடல், கவிதைகளில் - என்னைப்
பாடாய் படுத்தும் பாவலர்களே!
உங்களுக்குக்
கற்பனை வறண்டு போனால்
கன்னத்தில் எழுதுகோல் வைத்து
அண்ணாந்து பார்க்கின்றீர்..!
சின்ன வெள்ளிப் பந்தாய் நான்
சிரித்தபடி மிதந்து செல்வது
பொறுப்பதில்லை உங்களுக்கு..!
கன்னியரோ..,கழுதைகளோ..
என்னவாயிருந்தாலும்,
‘வெண்ணிலவே!’ என்று நீங்கள்
விளித்து எழுதத் தொடங்கினாலே
வெலவெலத்துப் போகின்றேன்.!
‘ஆஹா.. ஆரம்பிச்சுட்டாங்க’ என
அலறியபடியே நான்
உலக உருண்டையின் நிழலில்
ஒளிந்து கொள்ள ஓடுகிறேன்..!
அப்போதும் சளைக்காமல்
‘பிறை நெற்றி, பிறைச் சிரிப்பு,
பிறைப் புருவம்’ என்றெல்லாம்
துரத்தித் துரத்திப் பிதற்றுகின்றீர்!
முற்றாக மறைந்தும் பார்த்தேன்..,
‘அமாவாசைக் கூந்தல்’ என்று
அளந்து விடுகின்றீர்..! ஹையோ..!!
நிறுத்திக் கொள்வீர் இதோடு என
நினைத்துக் கொண்டு
வெளியில் வந்தால்
‘வளர்பிறையே வா!’ என்று
வாலாட்டத் தொடங்குகிறீர்..!
வான்கலத்தில் வந்து என்
மேல்கால்பதிப்பவர்களை விடவும்,
உங்கள் வார்த்தைகளைக் கண்டுதான்
அலறுகிறேன்.., பதறுகிறேன்..!
அவ்வபோது மேகத்துக்குள்
அவசரமாய் பதுங்குகிறேன்!
மெதுவாக எட்டிப்பார்த்தால்
‘கருங்கூந்தல் சூழ்ந்த அவள்
முகம்போல முகில் கிழிக்கும்
முழுமதியே!’ என்று மீண்டும்
முருங்கைமரம் ஏறுகின்றீர்..!
வேறெதையும் விடவும்- மொழி
பேதமின்றி எல்லோரும்
என்னை மட்டும் பாடி, எழுதி
துவைத்துத் தொங்க விடுகின்றீர்..!
உங்களால்தான் மாதந்தோறும்
ஓடி ஓடிக் களைத்துப் போனேன்!
அங்கங்கே திட்டுத் திட்டாய்
அழகு உடல் கறுத்து போனேன்!!
எனக்காகப் பரிந்து பேசும்
இவனுடைய காதலிக்கு
இளைமைக்கால என்னைப் போல
களங்கமில்லா தெளிந்த முகமாம்!!
அவளுடைய அழகை நான்
பொழுதெல்லாம் பார்க்க வேண்டும்!
என்னைவிட்டு வேறுபக்கம்
எழுதுகோலைத் திருப்புங்கள்!!
நன்றி
- பனசை நடராஜன், சிங்கப்பூர். -
பாடல், கவிதைகளில் - என்னைப்
பாடாய் படுத்தும் பாவலர்களே!
உங்களுக்குக்
கற்பனை வறண்டு போனால்
கன்னத்தில் எழுதுகோல் வைத்து
அண்ணாந்து பார்க்கின்றீர்..!
சின்ன வெள்ளிப் பந்தாய் நான்
சிரித்தபடி மிதந்து செல்வது
பொறுப்பதில்லை உங்களுக்கு..!
கன்னியரோ..,கழுதைகளோ..
என்னவாயிருந்தாலும்,
‘வெண்ணிலவே!’ என்று நீங்கள்
விளித்து எழுதத் தொடங்கினாலே
வெலவெலத்துப் போகின்றேன்.!
‘ஆஹா.. ஆரம்பிச்சுட்டாங்க’ என
அலறியபடியே நான்
உலக உருண்டையின் நிழலில்
ஒளிந்து கொள்ள ஓடுகிறேன்..!
அப்போதும் சளைக்காமல்
‘பிறை நெற்றி, பிறைச் சிரிப்பு,
பிறைப் புருவம்’ என்றெல்லாம்
துரத்தித் துரத்திப் பிதற்றுகின்றீர்!
முற்றாக மறைந்தும் பார்த்தேன்..,
‘அமாவாசைக் கூந்தல்’ என்று
அளந்து விடுகின்றீர்..! ஹையோ..!!
நிறுத்திக் கொள்வீர் இதோடு என
நினைத்துக் கொண்டு
வெளியில் வந்தால்
‘வளர்பிறையே வா!’ என்று
வாலாட்டத் தொடங்குகிறீர்..!
வான்கலத்தில் வந்து என்
மேல்கால்பதிப்பவர்களை விடவும்,
உங்கள் வார்த்தைகளைக் கண்டுதான்
அலறுகிறேன்.., பதறுகிறேன்..!
அவ்வபோது மேகத்துக்குள்
அவசரமாய் பதுங்குகிறேன்!
மெதுவாக எட்டிப்பார்த்தால்
‘கருங்கூந்தல் சூழ்ந்த அவள்
முகம்போல முகில் கிழிக்கும்
முழுமதியே!’ என்று மீண்டும்
முருங்கைமரம் ஏறுகின்றீர்..!
வேறெதையும் விடவும்- மொழி
பேதமின்றி எல்லோரும்
என்னை மட்டும் பாடி, எழுதி
துவைத்துத் தொங்க விடுகின்றீர்..!
உங்களால்தான் மாதந்தோறும்
ஓடி ஓடிக் களைத்துப் போனேன்!
அங்கங்கே திட்டுத் திட்டாய்
அழகு உடல் கறுத்து போனேன்!!
எனக்காகப் பரிந்து பேசும்
இவனுடைய காதலிக்கு
இளைமைக்கால என்னைப் போல
களங்கமில்லா தெளிந்த முகமாம்!!
அவளுடைய அழகை நான்
பொழுதெல்லாம் பார்க்க வேண்டும்!
என்னைவிட்டு வேறுபக்கம்
எழுதுகோலைத் திருப்புங்கள்!!
நன்றி
- பனசை நடராஜன், சிங்கப்பூர். -
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

