09-19-2003, 01:01 AM
Mullai Wrote:<img src='http://www.kumudam.com/sinegithi/sep03/3t.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/sinegithi/sep03/3.jpg' border='0' alt='user posted image'>சின்ன எழுத்திலை போட்டு கண்பழுது.. பெரிசாக்கிப் பார்க்கிறன்..
<span style='font-size:25pt;line-height:100%'>என்று, பெண்களாக உலகத்தை உருவாக்குகின்ற திறமை வருகின்றதோ, அந்த நாளில்தான் இந்த உலகத்தை வளமை உள்ளதாக மாற்ற முடியும் என்பது என்னுடைய எண்ணம்.
என்று, பெண்களாக உலகத்தை உருவாக்குகின்ற திறமை வருகின்றதோ, அந்த நாளில்தான் இந்த உலகத்தை வளமை உள்ளதாக மாற்ற முடியும் என்பது என்னுடைய எண்ணம்.
உலகத்தில் உள்ள பாதி மக்கள், அதாவது, பெண்கள் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டால், மீதியுள்ள மக்களால் உலகத்தை வளமாக ஆக்கமுடியாது. பெண்களும் உலகை சிருஷ்டி செய்தலில் ஓரளவு ஈடுபட வேண்டும்.
ஆனால், அப்படி மட்டும் பெண்கள் தீர்மானித்துவிட்டால், ஆண்களின் அகம்பாவத்தில் பலமான அடிபடுகிறது. ஆண்கள் எப்பொழுதும் தன் மனைவி தன்னையே நம்பி இருக்கவேண்டுமென்று எண்ணுகின்றார்கள்.
இந்த எண்ணத்தில் மிகப்பெரிய இரகசியம் அடங்கி இருக்கின்றது. உண்மையில் சொல்லப்போனால், யாரை அடிமையாக்க வேண்டுமோ, அவர்களுக்கு பண விஷயத்தில் சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்பது அடிப்படை விஷயம்.
பெண்ணை அடிமைப்படுத்த வேண்டுமென்றால், அவள் எல்லா விஷயத்திலும் கணவனை நம்பியே இருக்கவேண்டும். சேலை வேண்டுமென்றால் அவள் கணவனிடம் கேட்கவேண்டும். உணவு வேண்டுமென்றாலும், கணவனிடம் கேட்கவேண்டும். வாழ்க்கை வாழ வேண்டுமானால் அவள் கணவனைத் தான் நாடவேண்டும்.
அதனால்தான் ஆண் தன் மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. அதுவுமின்றி, மற்ற ஆண்களும் அவனிடம் \"நீ உன் மனைவியை வேலை செய்ய சொல்கின்றாய்\" என்று ஏதோ பெரிய அவமானப்பட வேண்டிய விஷயம் போலவும், பெண்கள் வேலைக்குப் போவது தவறான செயல் போலவும் பேசுவார்கள். தன் மனைவி வேலைக்குப் போகின்றாள் என்றதும், அவனின் அகம்பாவத்தின் மீது பலமான அடிபட்டு விடுகிறது. இதன் அர்த்தம் என்ன?
அவன் தனது மனைவியை, தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் பெண்ணோ, தன்னம்பிக்கையோடு இருக்கக் கற்றுக் கொள்கின்றான்.
பெண்களை ஆண்கள், ஒரு கொடியைப் போலவே எதிர்பார்க்கின்றார்கள். நீங்களும் உங்கள் பாடங்களில் ஆண் மரம் மாதிரியும், பெண்கள் அந்த மரத்தின் மேல் ஆண்களின் உதவியுடன் படர்ந்திருக்கின்ற கொடியைப் போலவும் உள்ள கவிதைகளைப் படித்திருப்பீர்கள். அவர்களால் நேராக நிற்க முடிவதில்லை. காரணம், அவர்கள் மரம் கிடையாது.
இவை மிகவும் பொய்யான விஷயம். மிகமிகத் தவறான விஷயம். பெண்களால் கண்டிப்பாக மரமாக முடியும். மேலும், எந்தப் பெண்கள் கொடியைப் போல் ஆண்களின் ஆதரவால் நிற்கின்றார்களோ, அவர்கள் அடிமைகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் எப்பொழுதும் சுதந்திரமாக இருக்கமாட்டார்கள். காரணம், கொடிகள் எப்படி சுதந்திரமடைய முடியும்? பெண்களும் தன் முயற்சியால் மரமாக வேண்டும்.
இரண்டு மரங்களுக்கிடையே நட்பு ஏற்படாது என்று இதற்கு அர்த்தமில்லை. நட்பு ஏற்படுவதற்காக வேண்டி யாரும் கொடியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
எந்தப் பெண், ஆணை மிகவும் சார்ந்து இருக்கின்றாளோ, அவள் தன் கணவன்மீது அதிகமாகக் கோபம் கொள்வாள். கண்டிப்பாகக் கொள்ளத்தான் செய்வாள் என்பதனை உணர்ந்திருக்கின்றேன்.
நாம் யாரை சார்ந்து இருக்கின்றோமோ, அவர்களால் நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியடைய மாட்டோம். யார் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றோமோ, அவர்கள் மீது கோபமாகத்தான் இருப்போம். உண்மையில் நாம் யாருக்கு அடிமையாக இருக்கின்றோமோ, அவர்களுக்கு நாம் நண்பர்களாக முடியாது.
நட்பாக இருக்க வேண்டுமென்றால், சமமாக நிற்க வேண்டியது மிகவும் அவசியம். அனைத்துப் பெண்களும் ஆண்களின் மீது மிகவும் கோபமாக இருக்கின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன். அவர்களின் கோபம் பல விதங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். பெண்கள் சுதந்திரமாகாததால், அவர்களுக்கும், ஆண்களுக்குமிடையே அன்பு வளர்வது மிகவும் சிரமமாகிவிடுகிறது. யாரையும் நாம் நண்பனாக்க வேண்டுமானால், அவனைச் சுதந்திரமடையச் செய்தல் மிகவும் அவசியமாகும்.
பெண்களை முழுமையாகச் சுதந்திரமடையச் செய்தல், பொருளாதார நிலையிலும், சுதந்திரமடையச் செய்தல் ஆண்களுக்கும் நல்லது. மேலும், பெண்களும் முழுமையாகச் சுதந்திரம் அடைவது அவர்களுக்கும் நன்மைதான். ஆண்களும், பெண்களும் சுதந்திரமாக எந்த நாளில் சந்திக்கின்றார்களோ, அன்றுதான் அவர்களின் நடுவே தோழமையான புதிய அத்தியாயம் ஆரம்பமாகும்.
ஆனால், இதற்காக ஆண்கள் சில இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டியதால், இந்த விஷயங்களில் அவர்களுக்கு அவ்வளவாக ஈடுபாடு இருக்காது. பெண்கள்தான் இந்த விஷயங்களுக்காகக் கேள்விகள் கேட்க வேண்டும்.</span>
நன்றி
<img src='http://www.kumudam.com/sinegithi/sep03/lo.gif' border='0' alt='user posted image'>
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ம்.. ம்.. விஷயம் இருக்கு..
Truth 'll prevail

