04-29-2005, 03:44 PM
சிவராமின் படுகொலைக்கு சிறீலங்கா அரசு கண்டனம்!
சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சிறீலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
யுத்த நிறுத்தத்தின் பின்னர் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான வன்முறைகள் மற்றும் அரசியல் படுகொலைகளின் ஒரு அங்கமாக இது கருதப்படுவதாக சிறீலங்கா ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் தெரிவி;க்கப்பட்டுள்ளது.
அண்மையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் அதிகாரி ரி.ஜெயரட்ணம் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டார். அதற்கு முன்னர் கிழக்கில் மாவட்டச் செயலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
சுpவராம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் பூரண விசாரணைகளுக்கு உத்தரவிடுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி புதினம்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]