04-28-2005, 11:26 AM
டிபன் பாக்ஸில் சந்திரமுகி
போலீஸாரின் கழுகுக் கண்களில் இருந்து தப்பிக்க சந்திரமுகி சி.டி.க்களை டிபன் பாக்ஸில் வைத்து விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய படங்களின் திருட்டு சி.டி.க்களை கண்டுபிடிக்க தமிழகம் முழுவதும் போலீஸார் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சி.டி. விற்றால் குண்டர் சட்டம் உறுதி என்று தெரிந்திருந்தும் பலர் இன்னும் இந்த விபரீத வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழப் புத்தாண்டுக்கு வெளியான ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் நன்றாக ஓடுவதால் இந்தப் படங்களின் சி.டி.க்களுக்குத் தான் மார்க்கெட்டில் கடும் கிராக்கி நிலவுகிறது.
கடைகளில் வெளிப்படையாக விற்க முடியாது என்பதால் பல மறைவான இடங்களில் வைத்து விற்பனை செய்து வந்தனர். அப்படியும் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் சச்சின் ஆகிய படங்களின் திருட்டு சி.டி.க்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
போலீஸாரிடமிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்த சென்னையை சேர்ந்த முகமது சாதிக் அலி என்ற ஒரு திருட்டு சி.டி.விற்பனையாளர் ஒரு புதிய டெக்னிக்கை பயன்படுத்தினார். தினமும் வேலைக்கு செல்வது போல செல்லும் இவர், தன்னுடைய கையில் ஒரு டிபன் பாக்ஸ் வைத்திருப்பார்.
ஆனால் அதற்குள் சாப்பாட்டுக்கு பதிலாக திருட்டு சி.டி.க்கள் இருக்கும். பலரும் போலீஸுக்கு பயந்து போய் இருக்க, இவர் மட்டும் போலீஸின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு வியாபாரத்தை கன கச்சிதமாக நடத்தி வந்தார்.
இதையும் எப்படியோ போலீஸார் மோப்பம் பிடித்து விட்டனர். முகமது சாதிக் அலிக்கு போலீஸார் வலை விரித்தனர். அவரும் வலையில் வசமாக சிக்கினார். இப்போது இவர் இருப்பது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில்.
இதற்கிடையே இணையதளம் மூலம் சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் ஆகிய புதிய படங்கள் காட்டப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தடுக்கக் கோரி சந்திரமுகி படத்தைத் தயாரித்த சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை மாநகர ஆணையர் நடராஜிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஒரு இணையதளத்தில் சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் ஆகிய படங்கள் காட்டப்படுவது தெரியவந்தது.
இந்த இணையதளம், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து நடத்தப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் தான் இதன் உரிமையாளர். இதுதவிர மேலும் 14 இணைய தளங்களில் இந்தப் புதிய படங்கள் காட்டப்படுகின்றன.
இதுகுறித்து கமிஷனர் நடராஜ் கூறுகையில், இணையதளங்கள் மூலம் புதிய படங்களை காட்டுவதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இம்மாதிரி இணையதளம் மூலம் புதிய படங்களைக் காட்டுவோர் மீது சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்திரமுகி படத்தை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட இணையதளத்தை தடை செய்யுமாறு வி.எஸ்.என்.எல். நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம். மத்திய அரசின், இணையதள கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநர் அப்பாசிக்கும் கடிதம் எழுதி சம்பந்தப்பட்ட 14 இணையதளங்களையும் தடை செய்யுமாறு கோரியுள்ளோம்.
சந்திரமுகி இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இன்டர்நெட் மையங்களில் இப்படங்கள் காசுக்குக் காட்டப்படுகிறதா என்பதையும் போலீஸார் கண்காணித்து வருகிறார்கள் என்றார் நடராஜ்.
thatstamil.com

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>