04-27-2005, 07:54 PM
புதிய ரக ஏர்பஸ் விமானம் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது
உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம், ஏர்பஸ் எ-380 ரக விமானம் தன்னுடைய முதலாவது சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. பிரான்ஸின் தூலூஸ் நகர விமான தளத்தில் இருந்து பரீட்சார்த்த ரீதியாக வானில் பறந்த இந்த விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது.
மிகத் துல்லியமான முறையில் தரையில் இருந்து வானில் சீறிப் பாய்ந்த இந்த விமானம் நான்கு மணி நேரம் பறந்த பின்னர் மெதுவாக விமான ஓடு பாதையில் மீண்டும் வந்திறங்கியது. ஐரோப்பாவில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இரண்டு அடுக்குகளை கொண்ட இந்த விமானம் 800 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும்.
இந்த விமானத்திற்கு போட்டியான அமெரிக்க போயிங் விமானங்களை விட அதிகமான பயணிகளை இது சுமந்து செல்லும். வர்த்த ரீதியாக இந்த விமானம் அடுத்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய விமானம் உலக பயணிகள் விமான விற்பனையில் முதலிடம் வகிக்க ஏர்பஸ் நிறுவனத்திற்கும், அமெரிக்க போயிங் நிறுவனத்திற்குமிடையே போட்டி ஒன்றினை துவக்கியுள்ளது. ஆனால், எரிபொருள் சிக்கன, சிறிய அளவிலான விமானங்கள் இது போன்ற பெரிய விமானங்களுக்கு போட்டியாக இருக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
BBC Tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>