04-27-2005, 10:23 AM
நமது முதலாவது தயாரிப்பான மாற்று வந்த போது வந்து வசை பாடியவர்களுக்கு நாம் கூறியது. காலம் பதில்சொல்லும் என்று. ஒரு படைப்'பை நம் மக்கள் மத்தியில் கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்பது ஒரு படைப்பாளிக்கு மட்டுமே தெரியும். தென்னிந்திய சினிமா ஆதிக்கததுக்குள் நாம் தத்தளித் முளைவிடுகையில் நம்மை இன்னும் மோசமான நிலைக்கு தள்ள நினைக்கும் நம்மவர்களை நினைக்கையில் இது தேவை தான் என்ற கேள்வி அடிக்கடி வரும் கடந் முறை நாம் இசையை களவு செய்தோம் அது இது என்று எழுதினார்கள். ஆனால் கனவுகள் நிஜமானால் அவர்களுக்கு பதில் சொல்லியுள்ளது. நம்மவர் கலை வsர்வதை யாரும் தடுக்க முடியாது என்பதற்கு இனிவர இருக்கும் நமது படைப்புகளும் எம்மை போன்ற ஆரவம் உள்ள அனைத்து ஈழவர் படைப்புகளும் பதில் சொல்லம் . 8)

