04-26-2005, 06:23 PM
Mathan Wrote:குருவி நீங்கள் எழுதியுள்ள காரணங்கள் இலங்கையில் வசதி வாய்ப்புகளுக்கு என்ன பிரைச்சனை என்பதை தெளிவு படுத்துகின்றது. அப்படி பிரச்சனை ஏதும் இல்லாமல் வசதி வாய்ப்புகள் கிடைத்தால் சிங்கை மலேசிய தமிழர்கள் போல் மேற்குலகிற்கு ஈழ தமிழர்கள் புலம் பெயர மாட்டார்கள்
பிரித்தானியர்கள் தங்களுக்கான வசதி வாய்ப்புக்களை தாங்களாத்தான் உருவாக்க வழி பண்ணுகிறார்கள் அதேபோல் ஈழத்தமிழரும் தங்கள் தாய் நிலத்தில் தாம் தாம் கடின உழைப்பால் வசதி வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள முற்பட வேண்டுமே தவிர இன்னொருவர் அவற்றை ஏற்படுத்தித் தர அனுபவிக்கும் நிலையை ஈழத்தமிழர்கள் எனியும் எதிர்பார்க்கக் கூடாது... சிங்களவர்களும் முஸ்லீம்களும் வசதி வாய்ப்புக்களுக்காக தமிழர்கள் போல பெருமளவு பணத்தைக் கொட்டி மேற்குலகு நோக்கி இடம்பெயர்வதையா கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர்..??! தங்களுக்குத் தேவையானதை பெற அவர்கள் தாம் தானே முயற்சிக்கிறார்கள்...!
எங்களுக்கென்றால் பெரும்பாலான ஈழத்தமிழர்களை இந்த விசயத்தில் ஒற்றுமைப்படுத்த முடியும் என்று எண்ணவில்லை...சொந்த தாய் நாட்டையே சுயநலத்துக்காக மறந்துவிடக் கூடிய பெரும்பாலான ஈழத்தமிழர்கள்...உண்மையான உழைப்பாளிகளாக தாயகத்தை வசதி வாய்ப்புள்ள தேசமாகக் கட்டி எழுப்புவார்கள் என்ற நம்பிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது...! வசதி வாய்ப்பிருக்கும் காலத்திலேயே சொந்த மண்ணில் இருப்பதை விடத் தென்பகுதில் இருப்பதைப் பெருமையாக எண்ணிய சிறுமைகள் தான் இவர்கள்...!
இவர்களிடம் தாய் மண்ணுக்கான உழைப்புக்கான புரட்சிகர மாற்றமென்பது எவ்வளவு சாத்தியம்..வாய் அளவில் வேண்டும் என்றால் உதிக்கலாம்...(புலிகளையும் அவர்கள் கொள்கைகளை ஆதரித்து அதற்காக உழைக்கும் மக்களையும் உதாரணமாகக் காட்டாதீர்கள்...அவர்கள் பெரிய ஈழத்தமிழர் ( கிட்டத்தட்ட 30 இலட்சம் - புலத்தில் உள்ள 10 லட்சம் உள்ளடங்கலாக) சனத்தொகையில் சிறிய பகுதியினரே) :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

