04-26-2005, 02:21 PM
kuruvikal Wrote:ஏன் மதன் பிரித்தானியாவில இருக்கிற வசதி வாய்ப்புக்கள் குறிப்பாக இலங்கையில் கிடையவே கிடையாதோ...???! இங்க விட அங்கதான் நிம்மதியான சுதந்திரமான பழுக்குறைந்த வாழ்வு என்று உறுதியாகச் சொல்லலாம்... இலவச உயர்கல்வி இங்க இல்லாத சிறப்பு...வறிய நாடு என்றாலும் அடிப்படை வசதிகள் எல்லாமே இருக்கு....! இங்க வரிகட்டவும் எடுத்த லோனுக்கு மோர்கேஷ் கட்டவும் மாடா உழைக்கிறதும் சரி...அங்க அளவோட உழைச்சு அளவோட வாழுறது மேல்..!
இலங்கையில் வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றன, ஆனால் அவை அனைவருக்கும் கிடைக்கின்றனவா என்பது தான் கேள்வி. இலங்கையில் மாளிகைகளில் இருப்பவர்களும் இருக்கின்றார்கள் லயன்களில் இருப்பவர்களும் இருக்கின்றார்கள். அங்கு அடிப்பை வசதிளே அனைவருக்கும் கிடைக்கவில்லை. என்ன வசதி இருந்தாலும் அவை அனைவருக்கும் கிடைக்காத வரை பயனில்லை தானே?
பழு குறைந்த வாழ்க்கை என்று சொல்கின்றீர்கள் அது உண்மைதான். அரசாங்க அலுவலங்களுக்கு வேலைக்கு போனால் லேட்டாய் போய் சீக்கிரமாய் வருவார்கள். வேலை செய்வது இல்லை பழு குறைவு தானே. பாடசாலையில் படிப்பிக்காமல் ரியூசனில் படிப்பிப்பார்கள் சம்பளம் வாங்கும் இடத்தில் பழு குறைவுதானே? சந்தியிலும் மதவடியிலும் இருந்து வெட்டி பேச்சு பழு குறைவு தானே?
இங்கு ஓடி ஓடி உழைக்கத்தான் வேண்டும். ஆனால் அப்படி உழைத்து எத்தனை பேரை வாழ வைக்கின்றார்கள். வெட்டி பேச்சு பேசும் நேரத்தில் இன்னொரு வேலைக்கு போய் சம்பாதித்து விரும்பியபடி செலவு செய்கின்றார்கள். இங்கு சொந்த குடுமபத்தை மட்டும் கவனித்து வாழ்க்கையை கொண்டு செல்லவேண்டும் என்றால் பெரிதாக ஓட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை, அமைதியாகவே வாழ்க்கை செல்லும்.
யாழில் ஒருவர் படித்தோ/படிக்காமலோ வேலை செய்கின்றார். அவருக்கு குடும்ப பொருளாதார பின்ணணி ஏதும் இல்லை. ஒரு சிறிய வீடு வாங்க விரும்புகின்றார். விலை பத்து லட்சம். மாச சம்பளம் எடுத்து எப்படி வீடு வாங்குவது? லோன் எடுத்து மாத தவணை கட்டதானே வேண்டும்? ஆனால் எங்க வங்கி லோன் கொடுக்குது உடனே? வசதி வாய்ப்பு அனனவருக்கும் கிடைக்குதா?
kuruvikal Wrote:என்ன ரெஸ்கோவுக்குப் பதில் கார்கில் போக வேணும்...
இங்கு ரெஸ்கோ சுப்பர் மார்க்ட்டிற்கு அனைவரும் போகலாம் .இலங்கையில் எத்தனை பேருக்கு கார்கில் சுப்பர் மார்க்கட் பற்றி தெரியும்? இல்லை விலை தான் கட்டுப்படியாகுமா?
kuruvikal Wrote:தமிழர்களுக்கு என்னவோ சிங்களவர்களைப் போல அங்க வசதி இல்லை என்பதற்காக இலங்கை வசதிக் குறைவான நாடு என்றால்..வெள்ளைக்காரனே உங்களை மிதிப்பான்... பிரித்தானியர்கள் ஆசியாவில் தாய்லாந்துக்கு அடுத்ததாக உல்லாசப் பயணம் மேற்கொள்ள விரும்பும் சொர்க்கம் இலங்கையாம்...உங்களுக்கு உங்க நாட்டின் அருமை புரியல்ல.... குளிருக்க நடுங்கிறவனுக்குப் புரிஞ்சிருக்குது....அதுதான் அங்க வந்து சுரண்டிக் கொண்டாந்து உங்களுக்கே வசதி வாய்ப்புக் காட்டுறான்...நீங்க...அதைப் பார்த்து வாய்பிளக்க வேண்டியான்...! வசதி என்று நீங்க எதைக் கருதுகிறீர்கள் என்பதில் தான் சொர்க்கமும் நரகமும் தீர்மானமாகிறது...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வெள்ளைகள் இங்கு பவுண்சிலும் யூரோவிலும் டாலரிலும் உழைத்து தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் போய் பீச் கொட்டேலிலும் டிஸ்கோவிலும் கசினோவிலும் மசாஜ் பார்லரிலும் சுற்றுலா தளங்களிலும் காசை கொட்டுகின்றார்கள், அதே வெள்ளையை அங்கே உழைத்து வாழ சொல்லுங்கள், துண்ட காணம் துணிய காணம் என்று ஓடி வந்து விடுவான்.
தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் கூட மேற்கத்தைய நாடுகளை நோக்கி ஓடுகின்றார்களே அது ஏன்? வசதி வாய்ப்பு சுதந்திரத்தை நோக்கி தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 