Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயரட்ணம் கடத்தல்
#15
<b>கல்கிசை புலனாய்வு அதிகாரி கடத்தலில் புலிகள் மீது சந்தேகம்</b>

கல்கிசையில் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி பி.ஜெயரத்தினம் கடந்த 20 ஆம் திகதி இரவு இனம்தெரியாத ஒரு குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாக கல்கிசை பொலிஸ் தலைமையகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பொலிஸ் அதிகாரி கடந்த 20 ஆம் திகதி இரவு கல்கிசையிலுள்ள பெரிய ஹோட்டல் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்து கொண்டபின்னர், மனைவி மற்றும் இருவருடன் கொழும்பு திம்பிரிகசாயவில் வெளிக்கள படையணி தலைமையகத்திலிருக்கும் தமது உத்தியோகபூர்வ வீட்டுக்கு வந்து தனது மனைவியை இறக்கிவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளார். இவ்வாறு இவர் திரும்பிச் சென்றது, கொச்சிக்கடை நோக்கிச் செல்வதாக கூறிக்கொண்ட தனது இரண்டு நண்பர்களுக்குரிய வாகனத்திலேயே. அவருடன் வாகனத்தில் சென்றவர்கள் மோகன், இரத்தினம் எனப்படும் இரு தமிழர்களென்றும், மிக அண்மைக் காலத்திலிருந்தே பொலிஸ் அதிகாரி ஜெயரத்தினம் மேற்படி தமிழ் நபர்களுடன் பழக ஆரம்பித்திருந்தாரென்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி குறித்த நபர்களுடன் பொலிஸ் அதிகாரி ஜெயரத்தினம் சென்ற பின்னர் இதுவரையில் அவரைப் பற்றியோ அல்லது அவருடன் சென்ற மற்றைய இருவரைப் பற்றியோ தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

இது பற்றிய தகவல்களுக்கேற்ப கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெயரத்தினத்தின் பெற்றோருக்கும் அவர் மீதான மரண அச்சுறுத்தலை விடுதலைப் புலிகள் அமைப்பு அறிவித்திருந்ததென்றும், அவரைப் பதவியை விட்டு விலகும்படி கட்டாயப்படுத்தியிருந்தனரென்றும் தெரிகிறது. இச் சம்பவத்தின் பின்னர் ஜெயரத்தினத்துக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்புத் துறை மூலமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

மேற்படி, புலனாய்வு உத்தியோகத்தர்கள் காணாமல் போனது சம்பந்தமாக அவரை கூட்டிச் சென்ற இரண்டு தமிழ் நபர்கள் மீதே பொலிஸ் தரப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கல்கிசையில் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவுச் செயலகம் ஒன்று அமைக்கப்பட்ட பின்னர் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை ஜெயரத்தினம் எடுத்துள்ளாரென்றும் தலைநகர் கொழும்பிலும் மற்றும் சுற்று வட்டாரங்களிலும் கொலை, தற்கொலைத் தாக்குதல்களுக்காக ஆயுதங்களுடன் ஊடுருவிய பலரை அவர் கைது செய்தாரென்றும் கல்கிசை பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த உயர் பொலிஸ் மா அதிகாரி ஒருவர் "லங்காதீப" வுக்குத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அவருடைய இந்த நடவடிக்கைகள் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பு பல தடவைகள் அவருக்கு மரண அச்சுறுத்தலை விட்டிருப்பதாகவும், அவரைக் கொலை செய்வதற்காக புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் தற்கொலைப் படையினரை கொழும்புக்கு அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரும் பொலிஸ் அதிகாரிகள் ஜெயரத்தினத்தையும், நிலாப்தீனையும் கொலை செய்வதற்காக புலிகள் அமைப்பு பெண் தற்கொலையாளியை அனுப்பியதாகவும் அத்தாக்குதல் குறி தப்பிவிட்டதால் பெண் தற்கொலையாளி குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்தாரென்றும் குறித்த அத்தாக்குதலிலிருந்து பொலிஸ் அதிகாரி நிலாப்தீன் உயிர்தப்புவதற்கு ஜெயரத்தினம் கொடுத்த புலனாய்வுத் தகவலே காரணமாக இருந்ததென்றும் பொலிஸ் தரப்பு கூறியுள்ளது.

இவ்வாறு பல தடவைகள் மேற்படி புலனாய்வு உத்தியோகத்தர் ஜெயரத்தினம் கொடுத்த தகவல்களின் மூலமே, தற்கொலைத் தாக்குதல்களுக்காக கொழும்புக்கு வந்திருந்த பல புலி உறுப்பினர்களை ஆயுதங்களுடன் பொலிஸாரால் கைது செய்ய முடிந்ததென்றும் மேலும் பொலிஸ் தரப்பினர் தெரிவத்துள்ளனர்.

ஜெயரத்தினம் கடத்திச் செல்லப்பட்டது சம்பந்தமான புலனாய்வு விசாரணைகளை கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி விலி அபேநாயக்க, பொலிஸ் அதிகாரி கே. அரசரத்தினம் ஆகியோரின் அறிவுறுத்தலின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

<b>þó¾î¦ºö¾¢ 23/04/05, லங்காதீப Àò¾¢Ã¢¨¸Â¢ø ¦ÅǢ¡ÉÐ.
¿ýÈ¢ ¾¢ÉìÌÃø</b>
Reply


Messages In This Thread
[No subject] - by ¦ÀâÂôÒ - 04-25-2005, 10:46 AM
[No subject] - by Danklas - 04-25-2005, 11:38 AM
[No subject] - by sathiri - 04-25-2005, 01:23 PM
[No subject] - by Mathan - 04-25-2005, 01:23 PM
[No subject] - by Mathan - 04-25-2005, 01:38 PM
[No subject] - by Double - 04-25-2005, 01:38 PM
[No subject] - by Danklas - 04-25-2005, 01:53 PM
[No subject] - by kuruvikal - 04-25-2005, 02:15 PM
[No subject] - by cannon - 04-25-2005, 03:15 PM
[No subject] - by sathiri - 04-25-2005, 06:15 PM
[No subject] - by BASKAR - 04-25-2005, 09:37 PM
[No subject] - by cannon - 04-26-2005, 12:29 AM
[No subject] - by Double - 04-26-2005, 12:40 AM
[No subject] - by Double - 04-26-2005, 12:51 AM
[No subject] - by ¦ÀâÂôÒ - 04-26-2005, 01:11 AM
[No subject] - by sathiri - 04-26-2005, 01:45 AM
[No subject] - by sinnappu - 04-26-2005, 08:50 AM
[No subject] - by Nellaiyan - 04-27-2005, 02:02 AM
[No subject] - by Danklas - 04-29-2005, 12:50 PM
Pathivu.com - by விது - 05-03-2005, 01:03 AM
[No subject] - by விது - 05-03-2005, 01:11 AM
[No subject] - by sathiri - 05-03-2005, 01:14 AM
[No subject] - by eelapirean - 05-21-2005, 03:14 PM
[No subject] - by jeya - 05-21-2005, 03:30 PM
[No subject] - by eelapirean - 05-21-2005, 04:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)