Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயரட்ணம் கடத்தல்
#5
இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தை கண்டுபிடிக்க 6 பொலிஸ் குழுக்களுடன், படையினரும் இணைவு

காணாமல் போன பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரி. ஜெயரட்ணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸ் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் இதுவரை அவரைப் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கல்கிஸை பொலிஸ் பிரிவின் பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான இவர் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களின் நடவடிக்கைகளுக்கும் பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்து வந்துள்ளார்.

இன்ஸ்பெக்டருடனும் அவரின் குடும்பத்தினருடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவரே இவரை விருந்துபசாரமொன்றிற்கு அழைத்துச் சென்று பின்னர் தனது சகாக்கள் சிலருடன் சேர்ந்து கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக இவரது மனைவி, பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், போர்நிறுத்த கண்காணிப்புக் குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமும் முறைப்பாடுகளைச் செய்து, தனது கணவரை தேடிக் கண்டுபிடித்து தரும்படி வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இன்ஸ்பெக்டரை தேடிக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில், 6 பொலிஸ் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன் தேசிய புலனாய்வுப் பணியகம் மனோ, மோகன் என்ற பெயருடைய இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பாக தகவல்களை திரட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸை ஹோட்டலில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட சந்தேக நபர்களுடன் இன்ஸ்பெக்டர் குடும்பம் ஹோட்டலை விட்டு வெளியேறிச் சென்ற போது பதியப்பட்டுள்ள வீடியோ கமராப் படங்களையும் பொலிஸார் பெற்றுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தை எந்தவித ஆபத்தும் இன்றி பாதுகாப்புடன் மீட்டு அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தை மட்டும் இலக்காகக் கொண்டு பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும், பொலிஸார் தமது கடமைகளை சரிவரச் செய்வார்கள் என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.

இதேவேளை, பொலிஸாரின் இந்த முயற்சிக்கு படையினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாகவும் தொண்டர் நிறுவனங்களின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by ¦ÀâÂôÒ - 04-25-2005, 10:46 AM
[No subject] - by Danklas - 04-25-2005, 11:38 AM
[No subject] - by sathiri - 04-25-2005, 01:23 PM
[No subject] - by Mathan - 04-25-2005, 01:23 PM
[No subject] - by Mathan - 04-25-2005, 01:38 PM
[No subject] - by Double - 04-25-2005, 01:38 PM
[No subject] - by Danklas - 04-25-2005, 01:53 PM
[No subject] - by kuruvikal - 04-25-2005, 02:15 PM
[No subject] - by cannon - 04-25-2005, 03:15 PM
[No subject] - by sathiri - 04-25-2005, 06:15 PM
[No subject] - by BASKAR - 04-25-2005, 09:37 PM
[No subject] - by cannon - 04-26-2005, 12:29 AM
[No subject] - by Double - 04-26-2005, 12:40 AM
[No subject] - by Double - 04-26-2005, 12:51 AM
[No subject] - by ¦ÀâÂôÒ - 04-26-2005, 01:11 AM
[No subject] - by sathiri - 04-26-2005, 01:45 AM
[No subject] - by sinnappu - 04-26-2005, 08:50 AM
[No subject] - by Nellaiyan - 04-27-2005, 02:02 AM
[No subject] - by Danklas - 04-29-2005, 12:50 PM
Pathivu.com - by விது - 05-03-2005, 01:03 AM
[No subject] - by விது - 05-03-2005, 01:11 AM
[No subject] - by sathiri - 05-03-2005, 01:14 AM
[No subject] - by eelapirean - 05-21-2005, 03:14 PM
[No subject] - by jeya - 05-21-2005, 03:30 PM
[No subject] - by eelapirean - 05-21-2005, 04:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)