04-25-2005, 12:28 AM
நேசன் Wrote:இலண்டனில் நடந்த அமைதி ஆர்ப்பாட்ட பேரணி வெற்றி அளித்துள்ளதாகவும், அதில் பங்கேற்ற மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்
நேசன்
இலண்டனில் நடநத பேரணி வெற்றி அளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இலங்கை பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும் நாடுகடத்தப்பட இருந்த ஈழத்தமிழர்கள் இலண்டனிலியேயே இருக்க அனுமதிக்கப்பட்டதும் நல்ல செய்தி. இலங்கையின் எல்லாப்பகுதிகளும், அவை சிறிலங்காவின் கட்டுப்பாட்டு பகுதிகளானாலும், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளானாலும் அங்கே மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று இந்த பேரணி மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது விடுதலைப்புலிகளையும் தமிழீழத்தையும் ஏனைய நாடுகள் மதித்து ஏற்றுக்கொள்வதை பின்னடைய செய்தாலும், தமிழர் என்றும் அகதிகளாக வாழ உதவி செய்யும் என்பதால், புலம்பெயர்ந்த தமிழர்கள் இதனை நிச்சயம் ஆதரிப்பார்கள்.

