Yarl Forum
இலண்டனில் அமைதி ஆர்ப்பாட்டம். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: இலண்டனில் அமைதி ஆர்ப்பாட்டம். (/showthread.php?tid=4420)



இலண்டனில் அமைதி ஆர்ப்பாட்டம். - சிலந்தி - 04-21-2005

இலண்டனில் அமைதி ஆர்ப்பாட்டம்.
எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் அமைதியபக இடம்பெறும்


- சிலந்தி - 04-21-2005

மாபெரும் அமைதி ஆர்ப்பாட்டம்
பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக24.04.05 இடம்பெரும் தொடர்புகளுக்கு
07950 104 246
07883 040 709
07949 765 391


- சிலந்தி - 04-21-2005

அனைத்து இலண்டன வாழ் தமிழர்களும் கலந்து பங்களிப்பு கொடுக்க வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறார்கள்.


- இளைஞன் - 04-21-2005

எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் என்று சொல்லவில்லையே சிலந்தி. அதனையும் விளக்காமக் குறிப்பிட்டால் நல்லது.


- சிலந்தி - 04-21-2005

தஞ்சம் நிராகரக்கப் பட்ட தமிழ் அகதிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து.
1.கட்டாய நாடுகடத்தல் நிறுத்தல.;
1.வேலைக்கான அனுமதி உறுதிப்படுத்தல்.....இன்னும் பல


- tamilini - 04-21-2005

அது தானே.. என்னத்திற்காக என்று.. சொல்லவே இல்லை.. :wink:


- இளைஞன் - 04-21-2005

நன்றி சிலந்தி உங்கள் தகவல்களிற்கு.


- Jude - 04-23-2005

சிலந்தி Wrote:தஞ்சம் நிராகரக்கப் பட்ட தமிழ் அகதிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து.
1.கட்டாய நாடுகடத்தல் நிறுத்தல.;

<b>நியாயமான கோரிக்கை</b>
காட்டாய நாடுகடத்தலுக்கு பதிலாக பிரித்தானிய அரச செலவில் (வரிப்பணத்தில்) ஒரு முறை இலங்கைக்கு போய் உறவினரை பார்த்து விட்டு மீண்டும் திரும்பி (அகதியாக) வர அனுமதி


- Mathan - 04-23-2005

என்ன சொல்கின்றீர்கள் யூட் :roll:


- Mathuran - 04-23-2005

தமிழ்ர்கள் நாம் எமது துயரத்தில் பங்கெடுத்தல் மிகவும் அவசியமானது என்பதனை கருத்தில் கொண்டு எல்லோரும் வேறுபாடுகளைக் களைந்து ஊர்வலத்தில் கலந்து கொள்வோம்.

எனது பிரச்சினை தீர்ந்து விட்டது என எண்ணாது, நாளை இது எனக்கும் நடக்கலாம் என எண்ணி பெரணியில் இணையுங்கள் உறவுகளே.

மனிதம் உள்ள மனங்களை பற்றி

விடைபெறுகின்றேன்
மானிடன்


- Mathuran - 04-23-2005

ஒன்றிணைவோம் வென்றிடுவோம்!
எமது அவலத்தை வெளிப்படுத்துவோம்!
ஆளும் அரசிடம் எமக்கு நீதி கேட்போம்!

நிராகரிக்கப்பட்ட தமிழ் அகதிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவின் பிரதமர் அலுவலகத்தின் முன்பாக


மாபெரும் அமைதி ஆர்ப்பாட்டம்


இடம்: Downing Street முன்பாக
காலம்: 2005 ஏப்ரல் 24ää ஞாயிறு
நேரம்: பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை


1 இலங்கையைப் பாதுகாப்பான நாடுகள் (white country list) பட்டியலில் இருந்து அகற்றல்

2 தமிழ் அகதிகளின் கட்டாய நாடு கடத்தலை நிறுத்தல்

3 நிராகரிக்கப்பட்டவர்களிற்கான வேலை செய்யும் அனுமதியை உறுதிப்படுத்தல்

4 சுனாமியால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு சர்வதேச உதவி கிடைப்பதை உறுதி செய்தல்

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துää பல்லாயிரமாகத் திரண்டு வந்து எமது இனத்தின் வேதனைகளை பிரித்தானிய மக்களிற்குப் புரிய வைப்போம்.


விபரங்களுக்கு: தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நடவடிக்கைக் குழு
Action Group of Tamil Asylum Seekers (AGTAS)

கரன் 07950 104 246
ரஞ்சன் 07883 040 709
மகேஸ்வரன் 07949 765 391


ஒவ்வொருவரும் ஒத்துழைப்போம்
எங்கள் வாழ்வு எங்கள் கைகளில்


நன்றி புதினம்


- Jude - 04-24-2005

Mathuran Wrote:1 இலங்கையைப் பாதுகாப்பான நாடுகள் (white country list) பட்டியலில் இருந்து அகற்றல்

இலங்கை பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு போய்வரும் வெளிநாட்டு அரசுகளின் பிரதிநிதிகள் அங்கு வாழும் தமிழர்கள், மனிதஉரிமைகள் மதிக்கப்பட்டு, பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும், தமிழீழ வங்கியின் உதவியுடன், சிறந்த வேலைவாய்ப்பு வசதிகளுடனும் வாழ்கிறார்கள் என்று எண்ணுவதும் அடங்கும். இப்படியான எண்ணத்தை உருவாக்குவதில், இந்த அரசபிரதிநிதிகளை அங்கு சந்திக்கும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதுபற்றி புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதை தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நடவடிக்கைக் குழு தெளிவு படுத்த வேண்டும்.


- நேசன் - 04-25-2005

இலண்டனில் நடந்த அமைதி ஆர்ப்பாட்ட பேரணி வெற்றி அளித்துள்ளதாகவும், அதில் பங்கேற்ற மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்


- Jude - 04-25-2005

நேசன் Wrote:இலண்டனில் நடந்த அமைதி ஆர்ப்பாட்ட பேரணி வெற்றி அளித்துள்ளதாகவும், அதில் பங்கேற்ற மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்

நேசன்

இலண்டனில் நடநத பேரணி வெற்றி அளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இலங்கை பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும் நாடுகடத்தப்பட இருந்த ஈழத்தமிழர்கள் இலண்டனிலியேயே இருக்க அனுமதிக்கப்பட்டதும் நல்ல செய்தி. இலங்கையின் எல்லாப்பகுதிகளும், அவை சிறிலங்காவின் கட்டுப்பாட்டு பகுதிகளானாலும், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளானாலும் அங்கே மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று இந்த பேரணி மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது விடுதலைப்புலிகளையும் தமிழீழத்தையும் ஏனைய நாடுகள் மதித்து ஏற்றுக்கொள்வதை பின்னடைய செய்தாலும், தமிழர் என்றும் அகதிகளாக வாழ உதவி செய்யும் என்பதால், புலம்பெயர்ந்த தமிழர்கள் இதனை நிச்சயம் ஆதரிப்பார்கள்.


- நேசன் - 04-25-2005

இது விடுதலைப்புலிகளையும் தமிழீழத்தையும் ஏனைய நாடுகள் மதித்து ஏற்றுக்கொள்வதை பின்னடைய செய்தாலும், தமிழர் என்றும் அகதிகளாக வாழ உதவி செய்யும் என்பதால், புலம்பெயர்ந்த தமிழர்கள் இதனை நிச்சயம் ஆதரிப்பார்கள்.

இல்லை அந்த அமைதி ஊர்வலத்தினர் கோரியது, அந்த இரண்டு இராணுவமும் இனியும் யுத்தம் புரியமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை, எனவே அங்கு பாதுகாப்பு இல்லை என்பதுதான்


- நேசன் - 04-25-2005

இல்லை அந்த அமைதி ஊர்வலத்தினர் கோரியது, அந்த இரண்டு இராணுவமும் இனியும் யுத்தம் புரியமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை, எனவே அங்கு பாதுகாப்பு இல்லை என்பதுதான்